ஐப்பசி மாதம், ஈழத்தமிழர் வாழ்வில் மறக்க முடியாத மாதங்களில் ஒன்று. விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் பல அப்பாவித் தமிழர்களைக் கொன்றொழித்த இந்திய அமைதிப்படை இந்த மாதத்தில்தான் ஈழமண்ணில் கால்பதித்தது. வெட்டியும் சுட்டும் டாங்கிகளைக் கொண்டு ஏற்றியும் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்ட எத்தனையோ படுகொலைச் சமபவங்களில், அதிர்ச்சியையும், இன்றுவரை மாறாத வலியையும் தந்த யாழ் போதனா வைத்தியசாலைப் கொலையும் ஒன்று.
யாழ் நகரத்தின் கிழக்குப் புறமாக அமைந்துள் யாழ். போதனா வைத்தியசாலை யாழ் குடாநாட்டில் வாழ்கின்ற எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு மட்டுமன்றி அயல் மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற இடங்களுக்கும் பிரதான வைத்தியசாலையாக உள்ளது. தினசரி ஆயிரம் பேர் வரையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதோடு, சத்திரசிகிச்சைப் பிரிவு, அவசரசத்திரசிகிச்சைப் பிரிவு எனப் பல முக்கிய பிரிவுகளுடன் 1970களிலிருந்து இயங்கி வருகின்றது. ஆலயங்களுக்கு அடுத்தபடியாக மக்கள் உயிர்பிச்சை வேண்டி நிற்கும் அந்த மருத்துவமனையில்தான் ஒரு கொடூரக் கொலையை இந்திய அமைதிப்படை நிகழ்த்தியது.
1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் இருபத்தியோராம் நாள், உலகெங்கும் உள்ள மக்கள் தீபாவளிப் பண்டிகையின் கொண்டாட்டத்தில் ஆழ்ந்து போயிருந்தவேளை, ஈழத்தில் இந்தியப் படையின் கொலை வேட்டை தொடங்குகின்றது. யாழப்பாணக்; கோட்டையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவம் யாழ் நகரப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில், பெருமளவு எறிகணைத் தாக்குதல், விமானத்தாக்குதல் மற்றும் சூட்டாதரவுடன் தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. யுத்தத்தின் பலிக்கடாக்களாக்கப்பட்ட மக்கள் செய்வதறியாது பாதுகாப்புத் தேடி ஓடுகின்றனர். என்றாலும் இந்தியப்பீரங்கிகள் அப்பாவிப் பொதுமக்களை விட்டுவைக்கவில்லை. ஆங்காங்கு சிதறுன்டு, சிகிச்சையின்றி மடிகின்றனர். தப்பியவர்கள் கோவில், பாடசாலை என வெள்ளைக்கொடிகளைக்கட்டிப் பாதுகாக்க முயற்சி செய்கின்றனர். கோட்டையிலிருந்து வீசப்படும் செல்கள் வைத்தியசாலைப்பகுதியையும் யாழ் நகரத்தின் எல்லாப் பகுதிகளிலும் வீழ்ந்து வெடிக்கின்றன. யாழ் நகரமே அதிர்கின்றது. பிஞ்சுகளின் கதறல்களும், மக்களின் அவலக்குரல்களும் காதுகளைப் பிழிகின்றன. அத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும், தம்மக்களை காக்க வேண்டும் என்ற ஓரே நோக்கில் வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்கள் என எல்லோரும் கடமைகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். புது உடுப்புக்களுடனும் பட்டாசு வெடிச்சத்தங்களுடனும் இருக்க வேண்டிய அன்றைய தீபாவளி வலிகள், வேதனைகள், பயத்துடன் உறைந்து போயிருக்கின்றது.
செல் நோயாளர் விடுதிகளுக்கு உள்ளும் வீழ்ந்து வெடிக்கத் தொடங்குகின்றது. எல்லோரும் அச்சத்துடன் கட்டில்களின் கீழும், நோயாளர் நகர்வு வண்டிகளுக்குள்ளும், அடுக்குமாடிக் கட்டிடங்களுக்குள்ளும் பாதுகாப்பு தேடிப்பதுங்குகின்றனர். நகரத்தை அண்டிய பகுதிகளிலிருந்து காயமடைந்தவர்களைக் கொண்டுவந்த வாகனங்கள் வைத்தியசாலை வாசலில் இந்திய இராணுவ உந்துகணைத்தாக்குதலில் எரிந்து சாம்பலாகின்றன. இந்தநிகழ்வுகளால் இராணுவத்தினர் கோட்டையிலிருந்து முன்னேறி வருகின்றனர் என்பதையுணர்ந்த வைத்தியசாலை ஊழியர்கள் எல்லோரும் தங்களுக்குரிய வைத்தியசாலை சீருடைகளை அணிந்து இராணுவத்திற்கு தங்களை அடையாளம் காண எளிதாக இருக்கக்கூடியவாறு தயாராகின்றனர்.
பிற்பகல் 3.00மணியளவில் யாழ் நகரப் பகுதிக்குள் இந்திய இராணுவம் நுழைகின்றது. தொடர்ந்து 4.30 மணியளவில் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இராணுவம் அலுவலகப் பகுதியில் வைத்தியசாலைச் சீருடையுடன் இருந்த ஊழியர்கள், வண்டில், கட்டில், பாய், வாங்குகளில் படுத்திருந்த நோயாளர்கள் என எல்லோரையும் எவ்வித பேச்சுமின்றிக் கண்மூடித்தனமாகச் சுட்டுப் படுகொலை செய்தது. தாக்குதலுக்க இலக்கானவர்கள், தாங்கள் பொதுமக்கள், வைத்தியசாலை ஊழியர்கள் என இனங்காட்ட முயன்று தோற்றுச் செத்தார்கள்.
இச்சம்பவத்தில் மயிரிழையில் உயிர்தப்பியவர் சம்பவம் பற்றிக் கூறுகையில் '1987 ஒக்ரோபர் இருபத்தோராம் திகதி மாலை 4.30 மணியளவில் வைத்தியசாலையினுள் வந்த இந்திய இராணுவத்தினர் மறுநாள் காலை 10.00 மணி வரை வைத்தியசாலையில் மக்கள் மீது தாக்குதலை நடத்தினார்கள். நோயாளிகள், வைத்தியர்கள் உட்பட அனைவரும் எவ்வித அசைவுமின்றி நிலத்தில் படுக்கவேண்டும். யாரிலாவது அசைவு தெரிந்தால் அவர் சுட்டுக் கொல்லப்படுவார். தாக்குதலில் காயப்பட்டவர்கள் வலி தாளாது அழுதல் அவர்கள் மீது கைக்குண்டு எறியப்பட்டதுடன், துப்பாகியாலும் சுடப்பட்டார்கள். மறுநாள் காலை 6.00 மணியளவில் வைத்தியர் சிவபாதசுந்தரம் அவர்களும், இரண்டு தாதியினரும் இந்திய இராணுவத்தினருடன் கதைத்து எஞ்சியிருக்கும் பொதுமக்களைக் காப்பாற்ற முயற்சித்தார்கள். ஆனால் எதனையும் காதில் வாங்கிக் கொள்ளாத இராணுவத்தினர் வைத்தியரையும் கூடச் சென்றவர்களையும் சுட்டதில் அவர்கள் அனைவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். காலை 10.00 மணியளவில் ஏனைய வைத்தியர்கள் எடுத்த முயற்சியினால் சம்பவத்தில் காயமடைந்து உயிருடனிருந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். மூன்றுவைத்தியர்கள், இரண்டு தாதிமார்கள், மேற்பார்வையாளர், ஊழியர்கள் உட்பட இருபத்தியொரு மருத்துவமனைப் பணியாளர்களும், நோயாளார் விடுதிகளில் சிகிச்சை பெற்றுவந்த நாற்பத்தேழு நோயாளர்களுமாக மொத்தம் அறுபத்தியெட்டுப்பேர் அன்றையதினம் கொல்லப்பட்டனர். உயிரிழந்த அனைவரது உடல்களையும் வைத்தியசாலை பின் பக்கமுள்ள பிண அறைக்கு அருகில் ஒன்றாகக் குவித்து இந்தியப்படையினர் எரியூட்டினர்' எனத் தெரிவித்தார்.
1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் இருபத்தோராம், இருபத்திரண்டாம் திகதியில் கடமையின்பால் உயிர்நீத்த வைத்தியர்கள் உட்பட இருபத்தியொரு ஊழியர்களையும் அவர்களுடன் உயிரிழந்த நோயாளர்கள் நாற்பத்தேழுபேரையும் யாழ்.மருத்துவமனை ஒவ்வொரு வருடமும் நினைவுகூர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று இவர்களை நினைவு கூறும் அதேவேளை இந்நாளில் உயிரிழந்த அனைத்து பொதுமக்களையும் நினைவு கூறுவோமாக.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் தங்களின் கருத்துகளை பின்னுட்டலில் சேர்த்துக் கொள்ளவும். அத்துடன் இந்நாளில் நினைவு கூறவேண்டிய அனைவரது விபரங்களையும், அவர்களுக்கு எற்பட்ட சம்பவங்களையும் பின்னுடலில் சேர்த்து விடவும்.
21.10.1987 மற்றும் 22.10.1987 அன்று யாழ் வைத்தியசாலையில் அநியாயமாகச் சுட்டுக்கொல்லப்பட்போர் விபரம்
01 சூடாமணி ஆவுடையம்மா குடும்பப்பெண் 55
02 இராஜதுரை மகேஸ்வரி குடும்பப்பெண் 46
03 இராயப்பு சூசைப்பிள்ளை ஓய்வூதியர் 74
04 இராமநாதன் மங்கையற்கரசி தாதி 31
05 இராமசாமி இலங்கேஸ்வரன் ஊழியர் 25
06 இராமலிங்கம் சுகுமார் ஊழியர் 24
07 இராசு சுப்பிரமணியம் சமையலாளி 46
08 இராசரத்தினம் இரத்தினராஜா ஆய்வுகூடப்பணியாளர் 28
09 நடராஜா ஜெயசீலன் துறைமுகத் தொழிலாளி 21
10 கந்தையா நவரட்ணம் காவலாளி 50
11 கந்தையா செல்வராஜா ஊழியர் 56
12 கந்தையா வேதாரணியம் ஊழியர் 27
13 கந்தையா சிவராஜா ஊழியர் 25
14 கந்தன் மார்க்கண்டு ஊழியர் 39
15 கதிர்காமு பரிமேலழகர் வைத்தியர் 40
16 கிருபாகரன் இந்திராணி குடும்பப்பெண் 32
17 குருசுமுத்து ஜோன்பீற்றர் ஊழியர் 24
18 கணபதி கிருஸ்ணராஜா மேற்பார்வையாளர் 50
19 கணபதி சிவலோகநாதன் ஊழியர் 23
20 பஸ்தியாம்பிள்ளை யோன்அரியமலர் குடும்பப்பெண் 60
21 பஸ்ரியாம்பிள்ளை நொய்லா விஜயந்தி 20
22 வைத்திலிங்கம் சண்முகலிங்கம் சாரதி 49
23 துரைச்சாமி இராஜேந்திரா ஓய்வூதியர் 70
24 துரைச்சாமி மகேந்திரா இலங்கைவங்கி 73
25 துரைச்சாமி ஆறுமுகம் 72
26 தம்பிப்பிள்ளை கனகலிங்கம் தொழில்நுட்பஉதவியாளர் 64
27 தம்பிப்பிள்ளை கிருபாகரன் ஊழியர் 33
28 தியாகராசா மதியரசன் மாணவர் 17
29 திருமதி வடிவேலு தாதி 48
30 தங்கவேலு சவுந்தரராஜா மாணவன் 06
31 மார்க்கண்டு தியாகராசா சாரதி 48
32 முத்தையா லீலாவதி தாதி 28
33 முத்துக்குமாரு துரைராஜா தொழிலாளி 26
34 அந்தோனிமுத்து அந்தோனி விக்ரர் க.தி.க பொறுப்பாளர் 35
35 அப்பையா மாணிக்கம் வீட்டுப்பணி 79
36 அரியகுட்டி இராசரத்தினம் சாரதி 53
37 அரியரட்ணம் லில்லிநேசம் வீட்டுப்பணி 75
38 அருணாசலம் சிவபாதசுந்தரம் வைத்தியர்
39 அல்பிரட் அந்தோனிப்பிள்ளை 65
40 அல்பிரட் மேரியோசெப்பின் - 37
41 ஜெபமணி கீதபொன்கலன் வீட்டுப்பெண் 43
42 ஜோன் சின்னையா தொழிலாளி 65
43 யோன் சிமியோன் தச்சுவேலை 67
44 கோபாலப்பிள்ளை உருத்திரன் தொழிலாளி 24
45 பொன்னம்பலம் வரதராஜன் தொழிலாளி 28
46 பெலீசியன் சதீஸ்யோகேந்திரன் மாணவன் 15
47 தோம்ஸ் பேரின்பநாயகம் பஸ்தியாம்பிள்ளை முகாமையாளர் 66
48 செபஸ்தியன் தம்பிராஜா கூட்டுறவுச்சங்க ஊழியர் 55
49 சேதுசிகாமணி கணேசரட்ணம் வைத்திய கலாநிதி 29
50 செல்லையா தங்கமணி 58
51 செல்லர் சிவபுரம் கமம்
52 வேலுப்பிள்ளை சரவணமுத்து - 60
53 ஞானப்பிரகாசம் செந்தூர்முருகன் வியாபாரம் 40
54 சுப்பிரமணியம் ஜெயமோகன் வியாபாரம ; 32
55 சத்தியசீலன் ஜெயசீலன் மாணவன் 17
56 சின்னப்பு ஜெயநாதன் தொழிலாளி 36
57 சின்னத்தம்பி வேலுப்பிள்ளை 75
58 சின்னவி சின்னத்துரை -- 57
59 சிவலை குணரட்ணம் தபால்ஊழியர் 49
காயமடைந்த்தவர்க்களின் விபரம ;
இல பெயர் தொழில் வயது
01 யூலியஸ் பிரதீபன் குழந்தை 06 மாதம்
02 ந.அன்னம் முதியவர் 90
03 நா.நவரத்தினம் தொழிலாளி 54
04 நா.செல்லையா தொழிலாளி 21
05 நடராசா தனபாலசிங்கம் 20
06 நவரத்தினம் சந்திரகுமார் தொழிலாளி 18
07 பூ.விஸ்ணுதாசன் - 34
08 பத்மநாதன் தனபாக்கியலட்சுமி குடும்பப்பெண் 43
09 பற்குணராஜா கமலா மாணவி 25
10 தா.இராசேந்திரன் தொழிலாளி 44
11 மா.அன்னலட்சுமி வீட்டுப்பணி 75
12 அ. சண்முகராசா வியாபாரம் 36
13 அ.கந்தசாமி கிளினர் 36
14 கே.பாலையா எலக்ரீசியன் 44
15 செ. பத்மநாதன் முகாமையாளர் 46
16 செ.தவராஜன் கமம் 22
17 சின்னப்பொடி தெய்வானை வீட்டுப்பணி 65
18 வா.மதிஜீவன் சாரதி 23
19 ராஜரட்ணம் ஜனார்த்தனன் மாணவன் 20
குறிப்பு :- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
housands mourn slain Jaffna journalist
ReplyDelete[TamilNet, Saturday, 21 October 2000, 14:09 GMT]
More than four thousand mourners took part in the funeral of the slain Tamil journalist Nimalrajan Saturday as he was laid to rest in the cemetery of the church of Konjanji Maatha this afternoon in Jaffna town around 3.30 p.m. Posters condemning his killing came up in many parts the peninsula. Black flags were also flown in the town. Meanwhile, in Colombo, the opposition Janata Vimukthi Peramuna (JVP) charged that the EPDP was behind the Nimalrajan's killing.
Journalists, members of the clergy and public officials spoke at the journalist's funeral. Mr.C.V.K Sivagnanam, the chairman of the of the Jaffna Multi-Purpose Co-operative Society, said that the Nimalrajan's murder is an indication that Jaffna is about to be covered by dark clouds.
Mr.Thavachelvam, a freelance journalist in Vadamaradchi who spoke at the funeral said "those who killed Nimalarajan might now hunt for me as well. But I will not submit or yield to their threats. A group that took the votes of the Jaffna people and got a ministry thinks that it can threaten and intimidate journalists and establish their anarchic writ here. Jaffna journalists should not limit their actions to merely condemning Nimalrajan's murder. They should expose the perpetrators"
A leaflet issued by the Jaffna University Students' Association titled "Is this Rehabilitation in Jaffna" charged that a group that feared the truth will come out from Jaffna murdered Nimalrajan.
"The party which got the Ministry for Rehabilitation (North) has rewarded the people with a murder. Nimalrajan was murdered to cover up the genocide of Tamils by the Sri Lanka army and the perpetuation of the group's anarchic rule" the leaflet by the Jaffna University Students Association said.
The leader of the Eelam People's Democratic Party is the Minister for Northern rehabilitation and Notheastern Tamil affairs. The EPDP did not send a representative for Nimalrajan funeral today.
Nimalarajan remembered by Jaffna Journalists
ReplyDelete[TamilNet, Friday, 20 October 2006, 00:05 GMT]
North Lanka Journalist Association (NLJA) assisted by Jaffna journalists observed 6th death anniversary of Mylvaganam Nimalarajan, BBC correspondent and a senior journalist, Thursday, civil society sources in Jaffna said. Members of the paramilitary Eelam Peoples Democratic Party (EPDP) are widely believed to have been responsible for the 19 October 2000 killing.
Many journalists and public participated in a special mass held near the memorial stone for Nimalarajan located at St. Mary's church, Jaffna, attending journalists said.
Following the mass, meals were provided to the internally displaced people (IDPs) from Allaippiddy and Mandaithivu who are staying in a church in Jaffna town for more than 2 months.
In a press communiqu, NLJA criticized the Government of Sri Lanka (GoSL) for not bringing the murderers of Nimalarajan to justice and for allowing the accused to escape justice by dragging out the case.
"Nimalarajan loved his people, served for improving their lives, and worked in difficult circumstances to highlight the plight of Jaffna residents to the outside world. People of Jaffna still remember his service to his people," the communiqu further said.
3 Sinhalese contract workers shot dead in Batticaloa
ReplyDelete[TamilNet, Tuesday, 21 October 2008, 08:59 GMT]
Unknown attackers shot and killed three Sinhalese building contractors while they were sleeping in a house at Arasadi in Kokkaddichchoalai, 15 km south of Batticaloa city Monday around 9.30 p.m., police said.
The victims have gone from Kuliyapitiya to work in a construction site. The victims were identified as Snajeewa Pushpa Kumara, 26, Lahiru Pathum Piyadarshana, 28 and Roshan, 25.