இன்று பிந்துனுவேவ புனர்வாழ்வு மையப்படுகொலையின் ஓன்பதாம் ஆண்டு நினைவு நாளாகும்.
இலங்கை அரசாங்கம், பண்டாரவளை மவட்டத்தில் பிந்துனுவேவ என்னும் இடத்தில் புனர்வாழ்வு மையம் அமைந்துள்ளது. இங்கு விடுதலைப்புலி சந்தேகநபர்கள் மற்றும் சரணடைந்த புலிஉறுப்பினர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள், நிதிமன்றின் அனுமதியுன் சட்டரீதியாக தடுத்து வைத்திருந்தது. இவர்களை பாதுகாப்பதற்காக ஆயுதம் தாங்கிய பொலிசார் பலர் சுற்றிவர நிறுத்தப்பட்டிருந்தார்கள்.
2000.10.25 அன்று அதிகாலை ஐந்து மணியளவில் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் நுழைந்த பலநூறு சிங்களகடையர்கள் என சொல்லப்படும் அவ்வூர் கிராமவாசிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்களை மிக மோசமாக தாக்கினார்கள். வாள், கத்தில், கோடாரி போன்ற கூரிய ஆயுதங்கள் இவர்களினால் பயன்படுத்தப்பட்டன. தடுப்பு முகாம் கடையர்களினால் தீயிட்டு கொழுத்தவும் பட்டது. சிங்கள கடையர்களின் இத்தாக்குதலில் 25 தடுத்து வைக்கபட்டடிருந்த இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் மேலும் 14 பேர் வரையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படார்கள்.
தடுத்து வைத்திருந்த இளைஞர்களை சிங்கள கடையர்கள் தாக்கியபோது, அங்கு பாதுகாப்பிற்கு நின்ற ஆயுதம் தரித்த பொலிசார் எந்தவித எதிர் தாக்குதலையும் கடையர்கள் மீது மேற்கொள்வில்லை.
என்பதும் கடையர்கள் தமது தாக்குதலை முடித்து வெளியேறி செல்லும்வரை தடுத்து வைத்திருந்த இளைஞர்களை காப்பாற்ற எந்த விதமான நடவடிக்கைகளும்; மேற்காள்ளப்படவில்லை.
இப்படுகொலை தொடர்பான விசாரனைகளை மேற்கொவதற்கு அரசினால் விசாரனைக்குழு நியமிக்கபட்டது. 2005ம் ஆண்டு விசாரனைகள் பூர்திசெய்யப்பட்து. ஆனால் யாரும் இதுவரை தண்டிக்கபடவில்லை. மேலும் யார் யார் அன்று படுகொலை செய்யபட்டார்கள் என்ற விபரமும் இதுவரை அரச தரப்பினால் வெளிவிடப்டாது உள்ளது.
இதே போன்று 1983ம் ஆண்டும் வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையும் நடைபெற்றது. அன்றும் சிறைச்சாலையில் பாதுகாப்பிற்கு நின்ற ஆயுதம் தரித்த பொலிசர் சிங்கள கடையர்களின் தாக்குதலை நிறுத்த எந்தவதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வில்லை.
இதே போன்று இன்று பல தடுப்பு முகாங்கள் புனர்வாழ்வு மையம் என்னும் பெயரில் சிறிலாங்கா அரச படைகளின் பாதுகாப்பிலுள்ளது. இவற்றிலும் விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படும் இளைஞர், யுவதிகள் பல ஆயிரக்கணக்கில் தடுத்து வைக்கப்ட்ள்ளார்கள். இவற்றிலும் பல தடுப்பு முகாங்கள் திட்டமிட்ட முறையில் சிங்கள மக்கள் மட்டும் வாழும் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
அரசினால் தடுத்து வைக்கப்ட்டுள்ள விடுதலைப்புலி சந்தேக நபர்கள் பலர் சித்திரவதை செய்யபட்டு கொல்லப்பட்டதாக தற்போது பல செய்திகள், படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவையனைத்தும் தமிழ் மக்கள் மத்தியில் வெலிக்கடை, பிந்துனுவேவ போன்ற படுகொலைச்சம்பவங்கள் அரங்கேரலாம் என்ற அச்சத்தினை ஏற்படுத்தி உள்ளன.
0 கருத்துரைகள் :
Post a Comment