இன்று அராலித்துறை பகுதியில் இந்திய அமைதிப்படையினரால் கொல்லப்பட்ட 35 இற்கும் மேற்பட்ட பொதுமக்களின் 22ம் ஆண்டு நினைவு தினமாகும்.
அராலித்துறை யாழ் மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. சிறிலாங்கா இராணுவம் யாழ்கோட்டைப்பகுதியில் நிலைகொண்டிருந்ததால், யாழ் கோட்டைப் பகுதியின் அருகாமையிலுள்ள பண்ணைப் பாலம் ஊடான தீவு பகுதிகளுக்கான பிரதான போக்குவரத்துத் தடைப்பட்டிருந்தது. இதன் காரணமாக தீவுப் பகுதிக்கான பிரதான போக்குவரத்துப் பாதையாக அராலித்துறை விளங்கியது.
வழமை போல தீவுபகுதியினை சேர்ந்த 200ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் 1987.10.22 அன்றும் யாழ் நகரம் நோக்கி பதினைந்து இயந்திரப் படகுகளில் வந்து கொண்டிருந்தனர். நண்பகல் அராலித்துறையினை வந்தடைந்த பொதுமக்கள் மீது திடீரென இந்திய அமைதிப்படையின் உலங்குவானூர்திகள்; தாக்குதலை நடத்தின. பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாது பாதுகாப்பு தேடி குழந்தைகள் பெண்கள் என அனைவரும் சிதறி ஒடினார்கள். ஓடியவர்களில் ஒரு பகுதியினர் அராலித்துறை மடத்தில் தஞ்சம் புகுந்தனர். மண்டபத்தில் தஞ்சமடைந்த மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளபட்ட குண்டு வீச்சில் பயணிகள் முப்பத்தைந்து பேர் உயிரிழந்தனர். முப்பதிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். ஏழிற்கும் மேற்பட்ட படகுகள் முழுமையாக சேதமடைந்தன. சில படகுகள் பகுதியளவில் சேதமடைந்தன.
இந்திய அமைதிப்படை பொதுமக்கள் மீது நடாத்திய தாக்குதலில் இறந்தவர்களின் உடல்கள்;, காயப்பட்டவர்கள் மீள மறுகரையில் உள்ள ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு உழவு இயந்திரம் மூலம் எடுத்து செல்லப்பட்டார்கள். இறந்தவர்களில் தீவுப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள், அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள், எனப்பலரும் அடங்குவர்.
1987.10.22 அன்று கொல்லபட்ட பொதுமக்களில் எமக்கு ஆறுபேரின் விபரங்களே கிடைக்கப்பற்றுள்ளன. அவர்களின் விபரம் வருமாறு.
யேசுதாசன் ஜீவகுமார் - மாணவன் 06, ஆரோக்கியம் - வீட்டுப்பணி 40, யேசுதாசன் குமுதினி - மாணவி 09, செ.சேவியர் - கடற்றொழில் 70, கிறிஸ்ரிராஜரி றீற்றம்மா - வீட்டுப்பணி 31, கிறிஸ்ரிராஜா சகாயநாயகி - மாணவி 06
அன்றைய தினம் இவர்களுடன் படுகொலை செய்யபட்ட அனைத்து பொதுமக்களையும் நினைவு கூறும் அதேவேளை இதே நாள் வேறு சம்பவங்களில் படுகொலை செய்யபட்ட அப்பாவி பொதுமக்களையும் நினைவுகூறுவோமாக. மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் தயவு செய்து தகவல்களை பின்னுட்டலில் சேர்த்துவிடவும்
இன்றைய தினம் நினைவு கூறவேண்டிய வேறு சில சம்பவங்கள்
1. 2008.10.22 அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள திருக்கோவில் பகுதியில் ஆழ ஊடுருவும் சிறிலாங்கா படையினரால் மேறகொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஒருவர் கொல்லபட்டதுடன் இருவர் காயமடைந்தார்கள்.
2. 2007.10.22 அன்று யாழ் மாவட்டம் கைதடிப்பகுதியில் யாழ். கூட்டுறவுசங்கங்களின் சம்மேளத்தலைவர் சுப்பிரமணியம் கடத்தப்பட்டு இனம் தெரியா ஆயுததரிகளினால் படுகொலை செய்யபட்டார்.
3. 22.10.2006 அன்று மன்னார் பேசாலை கடற்கரைப்பகுதியில் இனம் தெரியதா நபர்களினால் சாபரீன் றோபின்சன் பூஜா (19), சாகாயம் அஜித் குரூஸ் ஆகிய இரு இளைஞர்களும் கடற்தொழிலுக்கு சென்ற சமயம் படுகொலை செய்யப்படார்கள்.
சிங்கள இராணுவத்தின் கொலை வெறிக்கு இரையாகிப் போன இந்த அப்பாவிகளை நினைவு கூறும் இந்நாளில் உயிரிழந்த அனைத்து மக்களுக்குமாக ஒரு நிமிடம் வணங்கவோம்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் தங்களின் கருத்துக்களை பின்னுட்டலில் சேர்த்துக் கொள்ளவும். அத்துடன் இந்நாளில் கொல்லப்பட்ட விபரங்கள் இருப்பின் அவற்றையும் பின்னுட்டலில் சேர்த்து சிங்களத்தின் கோரசம்பவங்களை வெளிக்கொணர உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

0 கருத்துரைகள் :
Post a Comment