2008.11.02 நாள் 21.15 மணியளவில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ள குறுந்தியடி கிராமத்தில் விசேட அதிரடிப்படையினரால் நாடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அப்பகுதியில் மதுபான கடையின் முன் நின்ற ஐந்து தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யபட்டார்கள்.
தமிழ் - முஸ்லிம் மக்களிடையே கலவரத்தினை தூண்டும் முகமாக படுகொலையானவர்கள் கருணா குழுவை சேர்ந்தவர்கள், இவர்களை முஸ்லிம்கள் தான் படுகொலை செய்ததாக விசேட அதிரடிப்படையினரால் கூறப்பட்டது. ஆனால் இவர்களை படுகொலை செய்தது விசேட அதிரடிப்படையினர் என்பது தெரியவந்துள்ளது. இது வரை யாரும் தண்டிக்கப்படவில்லை.
படுகொலை செய்யபட்ட ஐந்து இளைஞர்களினதும் பெயர் விபரம் வருமாறு:
1.ஜெசிகர் துசாந்தன் (20)
2.ராஜாகுபேந்தன் யோகப்பிரகாஸ் (28)
3.முத்துப்பிள்ளை சிறிசுதர்சன் (28)
4.சோமசுந்தரம் கார்த்திக் (26)
5.கதிரவடிவேல் ராஜாசோரூபன் (26)
0 கருத்துரைகள் :
Post a Comment