![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJMHFcA28_JKEsW6Sn-jJ3BjqozPFkkfpJX0kqccnEKO2YKml2NEQ8ojrETjHub46N4cw9X2Cb4abUYJNZ_5iQzyN_O0mLZTmLFQI2zrL-MI4EqGp79Op0HDQE3jwpgWvjuph2Rhg4Qng/s400/6a00d8341d922253ef0120a6104031970b-800wi.jpg)
இலங்கையிலிருந்து எப்படியோ வெளியேறி வெளி நாடுகளில் தஞ்சம் கோரும் மனப்போக்கு நம்மவர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றமை குறித்து பிரஸ் தாபிக் கப்பட்டிருக்கின்றது.
இலங்கையிலிருந்து படகுகளில் ஏறி, உயிரையே பண யம் வைக்கும் ஆபத்து மிகுந்த பயணங்களில் ஈடுபட்டு, சட்ட விரோதமாக வெளிநாடுகளில் குடியேற முயலும் இலங்கையரின் விவகாரம் குறித்து இலங்கை அரசுடன் உயர்மட்டப் பேச்சுகளில் ஈடுபடுவதற்காக, ஆஸ்தி ரேலியப் பிரதமரின் விசேட தூதுவராக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஆஸ்திரேலியாவின் பிரபல இராஜதந்திரியான ஜோன் மக்காந்தியே இவ்விடயத்தைக் குறிப் பிட்டுள்ளார்.
இலங்கை அரசினால் தமிழர்களுக்கு ஏராளமான விட யங்கள் செய்யப்படவேண்டியுள்ளன. அப்படியான விட யங்கள் நிறைவு செய்யப்பட்டால்தான், சட்ட விரோதமான முறையிலேனும் நாட்டை விட்டுத் தப்பியோட வேண்டும் என்ற சிந்தனையிலிருந்து தமிழர்கள் விடுபடு வார்கள். இவ்வாறான உயிராபத்து மிகுந்த பயணங்களை மேற்கொண்டேனும் நாட்டை விட்டுத் தப்ப வேண்டும் என்ற போக்கைத் தடுத்து நிறுத்தும் சூழலும் அப்போது தான் ஏற்படும் என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
ஆழ்ந்த கருத்துகள் பொதிந்த விடயம் இது. அந்தப் பின்புலத்தில் இக்கருத்தை நோக்கவேண்டும்.
இலங்கையில் யுத்தம் முடிந்துவிட்டது. நாட்டுக்கு ஏற்பட்ட தேசிய அச்சுறுத்தல் முறியடிக்கப்பட்டு விட்டது என்று கருதி, திருப்திப்பட்டுக் கொள்கின்றது தென்னி லங்கை. அரசுத் தலைவர்கள் அந்தச் "சாதனையை' வெளிப் படையாகவே குறிப்பிட்டு ஆசுவாசப்பட்டுக் கொள்கின் றார்கள்.
ஆனால் இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட தரப்பான சிறுபான்மையினரான தமிழ் மக்களின் மனநிலைமை அப்படி இல்லை. ஏதோ நிரந்தர பீதிக்குள் வீழ்ந்துவிட் டோம் என்ற பேரச்சமே அவர்களைப் பீடித்து நிற்கின்றது. இலங்கைத் தீவில் இனி, மீளமுடியாத அடிமைத்தனமே தங்கள் இனத்துக்கு சாசுவதமானது, மாற்றமுடியாதது என்ற அவநம்பிக்கை இருள் தமிழ் இனத்தின் மனதைச் சூழ்ந்து ஆக்கிரமித்து நிற்கின்றது.
தங்களின் நீதி, நியாயமான அபிலாஷைகள் நிறைவு செய்யப்படப் போவதில்லை,மற்றைய இனத்தவருடன் குறிப்பாகப் பேரினத் தரப்பினருடன் சம அந்தஸ் துடனும், ஒரே கௌரவத்துடனும் வாழும் பாக்கியம் நமக்குக் கிட்டவே மாட்டாது என்ற மனநிலையே தமிழர்கள் மனதில் ஓங்கி நிற்கின்றது.
உரிமைகளுக்காக, விழ விழ எழுந்து நின்று போராடிய தமிழினம், இன்று யுத்தப் பேரிழப்புகளின் முடிவில் துவண்டுபோய்க் கிடக்கின்றது. ஆனால் அப்படிப் பாதிக்கப்பட்டுக் கிடக்கும் தமிழினத்தை அரவணைத்துத் தூக்கி நிறுத்தி, நீதி, நியாயம் வழங்கும் தாராண்மை யுத்தத் தில் வெற்றியீட்டினோம் என மார்தட்டும் தரப்புக்கு இல்லவே இல்லை; அறவே இல்லை.
கடந்த மே மாதம் நடுப்பகுதிக்குப் பின்னர் இலங் கைத் தீவில் கட்டவிழ்ந்த சம்பவங்கள், போக்குகள் இத னைத்தான் தமிழர்களுக்கு உணர்த்தி நிற்கின்றன.
இதனால்தான், இனிமேலும் இங்கிருந்தால் ஆகப் போவது ஒன்றுமில்லை, எப்படியேனும் இலங்கைத் தீவை விட்டு வெளியேறி, அமைதியும், சமாதானமும், கௌரவ வாழ்வும் கிட்டும் ஏதேனும் ஓரிடத்துக்கு பூமிப்பந்தின் ஏதோ ஒரு பிரதேசத்துக்கு தப்பிச் செல்வோம் என்ற கருத்து நிலைப்பாடு தமிழர்கள் மனதில் வளர்ந்து வருகின்றது.
அதன் பெறுபேறாகவே பல்வேறு நாடுகளுக்குள் ளும் நுழைய முயலும் சட்டவிரோதக் குடியேற்றக்காரர் களான ஈழத் தமிழர்கள், ஆங்காங்கே பிடிபடும் சம்பவங் கள் பற்றிய செய்திகள் தாராளமாக வெளியாகத் தொடங் கியிருக்கின்றன.
இவ்வாறு குடியேற முயலும் மக்களைத் தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தத்தமது சட்டங்களின் இரும்புப் பிடியை ஏவிவிடும் இந்த நாடுகள், அந்த மக்களை நோகாமல், அவர்களுக்கு அந்த நிலையை ஏற்படுத்தக் காரணமான அந்த மக்களின் தேச ஆட்சியாளர்களை நோவதுதான் நியாயமாக இருக்கும்.
இப்படி சட்டவிரோதக் குடியேற்றவாசிகளாகக் குடி யேற முயலும் மக்கள் விடயத்தில், தங்களின் எல்லை களை இறுக்கிப் பூட்டி, கடற் பிராந்தியங்களில் பந்தோ பஸ்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் இந்த நாடு கள், அந்த மக்களை அப்படி உயிரையும் பணயம் வைக் கும் பயணங்களில் ஈடுபடத் தூண்டும் அடிப்படைப் பிரச்சினையை பிரதான விவகாரத்தை கவனிக்காமல் இருப்பது கவலைக்குரியது.
இலங்கைத் தீவில் சிறுபான்மையினரான தமிழர்களுக் குத் தொடர்ந்து அநியாயம் இழைக்கப்படுகின்றது; நியா யம் மறுக்கப்படுகின்றது; அவர்களைத் தொடர்ந்தும் அடி மைப்படுத்தும் பேரினவாத மேலாண்மையே இத்தீவின் காட்டாட்சியாகத் தொடர்கின்றது.
இந்தப் போக்கு நீடிக்கும் வரை இங்கிருந்து மக்கள் நியாயம் தேடி அமைதி வாழ்வு தேடி கௌரவம் கிட்டும் நிலை தேடி வலசை போகும் பறவைகளாகப் பறந்து செல்ல முயல்வது தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.
இந்த மக்கள் இப்படிப் புறப்பட்டு, அலைவதற்குக் காரணமான உள்நாட்டு நிலைவரத்தை இங்கு சரிசெய் வதற்கு முயலாமல், அப்படி அந்த மக்கள் தத்தமது நாடு களுக்குள் நுழையாமல் இருப்பதற்கான இரும்பு வேலியை மட்டும் அமைப்பதற்கு அந்தந்த நாடுகள் முயல்வது "கயிற்றை விட்டுவிட்டுத் தும்பைப் பிடிப்பதற்கு' ஒப்பானதாகும்
0 கருத்துரைகள் :
Post a Comment