மூளாய்க் கிராமம், யாழ் மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேசசெயலர் பிரிவினுள் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமன்றி மூளாய் கிராமத்தினை சுற்றியுள்ள பொன்னாலை, காரைநாகர், வட்டுக்கோட்டை எனது அயல் கிராமங்கள் அனைத்திற்குமான மருத்துவ வசதியினை வழங்கும் இடமாக மூளாய் வைத்தியசாலை அமைந்துள்ளது.
பெரும் இன்னல்களுக்கும், பெரும் மருத்துவ நெருக்கடிகளுக்கும் மத்தியில் வாழ்ந்த மூளாய்க் கிராமத்து மக்கள், 1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் நாள் சிகிச்சைக்காக மூளாய் வைத்தியசாலையில் இருந்தபோது இந்திய இராணுவத்தினரின் பீரங்கித் தாக்குதலிற்குள்ளாகினர். ஐந்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தார்கள். மருத்துவமனையும் சேதமடைந்தது.
இந்திய அமைதி காக்கும் படையினர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் நடத்துகின்றோம் என கூறிக்கொண்டு ஈழத்தமிழல் மக்களை இழக்கு வைத்தே பல தாக்குதல்களை நாடத்தினார்கள் அதுவும் ஒரு யுத்தத்தின் போது எங்கு எல்லாம் தாக்குதல்கள் நடாத்தப்படுவது தவறு என சர்வதேச சட்டதிட்டங்கள் கூறுகிறதோ அத்தனை இடங்களிலும் இந்திய அமைதிப்படையினரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்ட்டன. தமிழ் மக்கள் வகை தொகையின் கூட்டம் கூட்டமாக படுகொலை செய்யபட்டார்கள் என்பது ஈழத்தமிழ் மக்களின் வரலாறாக உள்ளது.
05.11.1987 அன்று;று மூளாய் வைத்த்தியசாலைப் படுகொலையில் கொல்லப்ப்பட்டோர் விபரம்
01 நாகர் மகேந்திரன் - வியாபாரம் - 44
02 கந்தையா மகாதேவன் - சாரதி - 48
03 கந்தசாமி சிறீதரன் - வியாபாரம் - 18
04 ஐயாத்துரை பேரின்பநாயகம - ஓய்வூதியம் - 58
05 யோசேப் யோகராசா - தொழிலாளி - 35
0 கருத்துரைகள் :
Post a Comment