இந்திய முறையிலான அரசமைப்புக் கட்டமைப்பை இலங்கைக்கு ஏற்படுத்துவதன் மூலம் இனப்பிரச் சினைக்குத் தீர்வுகாண வலியுறுத்துமாறு தமிழக முதல் வர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி யின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி கடிதம் எழுதியிருக்கின்றார்.
அறுபது ஆண்டுகாலம் உரிமைவேண்டி கௌரவ வாழ்வை நாடி ஈழத் தமிழர்கள் நடத்திய போராட்டத் தின் இலக்கு அதுதானா, அத்தகைய தீர்வு இலங்கைத் தமிழர்களின் நீதி,நியாயமான அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யுமா என்பவை எல்லாம் வேறு அம்சங்கள்.
ஆனால், ஆனந்தசங்கரியின் இந்தக் கோரிக்கை தொடர்பில் பின்வரும் விடயங்கள் அதில் பொதிந்திருக் கின்றமையை நாம் அவதானித்தேயாக வேண்டும்.
* விடுதலைப் புலிகள் பலமாக இருந்த சமயத்தில் தாம் எதைக் கூறினாரோ, அதனைத்தான் இன்று புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டனர் என அறிவிக்கப் பட்டு ஆறுமாதம் கழிந்த பின்னரும் ஆனந்தசங்கரி பகிரங் கமாகக் குறிப்பிட்டு அதில் விடாப்பிடி நிலையைக் காட்டி யிருக்கின்றார். அதில் ஓர் அரசியல் நேர்மைத் தன்மை பொதிந்துள்ளது.
* இலங்கை, இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி முறையிலான எந்தவொரு அரசியல் தீர்வு வழங்கப்பட் டாலும் அது, கடும் போக்காளர்கள் அநாவசியமாக எதிர் காலத்தில் தலையிட வாய்ப்பைக் கொடுத்துவிடும் என்று சங்கரி சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
* ஆகவே, இந்திய முறையிலான ஆட்சி முறைமை என்று கூறுவதன் மூலம் "ஒற்றையாட்சி", "சமஷ்டி" ஆகிய வார்த்தைகளை விரும்பாதவர்களுக்கும் அது ஏற்புடைய தாக இருக்கும் என்று சங்கரி தெரிவித்துள்ளார்.
இப்படி சங்கரி சுட்டிக்காட்டிய விடயங்களை நாம் சிலாகிக்கின்றமையால் அதுவே உகந்த தீர்வு என்று நாம் சிபார்சு செய்கின்றோம் என்று யாரும் அர்த்தப்படுத்தி விடக் கூடாது. இந்த விடயங்களை நாம் விசேடமாக இங்கு குறிப்பிட்டுக் காட்டுவதற்கு சில அர்த்தங்கள் உள்ளன.
விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும்வரை வட்டுக் கோட்டைத் தீர்மானம், சுயநிர்ணய உரிமை குறித்தெல்லாம் குரல் எழுப்பி வந்த சில தமிழ்த் தலைவர்கள் புலிகளின் இராணுவப் பின்னடைவை அடுத்து, மனம் பேதலித்து, அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்குப் பின்னால் ஒதுங் கிக்கொள்வதே மேல் என்ற நிலைக்கு வந்து விட்டனரோ எனும் சந்தேகம் வலுக்கத் தொடங்கியுள்ளது. இது விடயத்தில் புதுடில்லியோடு இணைந்து இரகசியக் காய் நகர்த்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அரசல் புரசலாகக் கதைகள் கட்டவிழத் தொடங்கியுள்ளன. அந்தப் பின்னணியில் சங்கரியின் வெளிப்படையான கருத்து முன்வைப்பை ஒப்பிட்டு சில விடயங்களை நமக் குள் உசாவிக் கொள்வதே இப்பத்தியின் இலக்காகும்.
13 ஆவது அரசமைப்புத் திருத்தம் என்பது இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை இந்திய அரசு களின் தீர்மானம். தமிழர் தரப்புகள் சில, இந்த முடிவுக்கு இணங்குமாறு பின்னர் பலவந்தப்படுத்தப்பட்டு, இசைவு தெரிவிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டனவே தவிர, 13 ஆவது திருத்தம் என்பது இனப்பிரச்சினையில் சம்பந்தப் பட்ட பிரதான தரப்பான தமிழர்களின் இணக்கத்தோடு விருப்போடு தயாரிக்கப்பட்டதல்ல. மேலும் விளக்கமாகக் குறிப்பிடுவதானால் அது தமிழர்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு குப்பைக்கூடைக்குள் வீசப்பட்ட விவ காரம் ஆகும்.
அதன்பின்னர், இலங்கை அரசும், தமிழர் தரப்பும் இணங்கிக்கொண்ட கடைசியாக இணங்கிக்கொண்ட ஒரு விடயம் உள்ளது. அதுதான் "உள்ளக சுயநிர்ணய அடிப்படையுடன் கூடிய சமஷ்டித் தீர்வு மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றை எட்டுவது" என்ற ஒஸ்லோ கூட்டறிவிப்பு ஆகும்.
அதில் சம்பந்தப்பட்ட தமிழர் தரப்பு விடுதலைப் புலி கள் அமைப்பு. அந்த அமைப்பை இராணுவ ரீதியில் அழித்தொழிப்பதற்கு இலங்கை அரசுக்கு நேரடியாகத் துணை போனது இந்தியாவே என்று தமிழர்கள் குமுறிக் கொண்டிருக்க
ஏற்கனவே காணப்பட்ட சமஷ்டித்தீர்வு இணக்கத்தை இந்தியா புறம்தள்ளிவிட்டு, மீண்டும் "பழைய குருடி கத வைத் திறவடி" என்ற பாணியில் 13 ஆவது திருத்த மொந் தையைத் தூக்கிப் பிடிப்பதும், அதற்கு சில தமிழ்த் தலை மைகள் ஜால்ரா போடுவதும் நியாயமானவையல்ல.
இப்படி சுயநிர்ணய உரிமை, இடைக்கால நிர்வாக அதிகாரசபை, தனிநாடு என்று கோஷம் போட்டவர்கள், ஆறு மாதத்துக்குள் புதுடில்லி மந்திரத்துக்குக் கட்டுப் பட்டு 13 ஆவது திருத்தத்துக்குள் அடங்கிப்போக
தான் நீண்டகாலம் வலியுறுத்தி வந்த விடயத்தையே ஒற்றையாட்சிக்கு வெளியே வருகின்ற திட்டத்தையே சமஷ்டி சாயல் உடைய வடிவத்தையே வற்புறுத்தி நிற்கின்ற ஆனந்தசங்கரி எவ்வளவோ மேல் என்று சுட்டிக் காட்டுவது இன்று காலத்தின் கட்டாயமாகின்றது.
தமிழர்கள் இராணுவ ரீதியில் பலமாக இருந்தபோது சமஷ்டி அடிப்படையில் உள்ளக சுயநிர்ணய உரிமை யுடன் கூடிய தீர்வை வழங்க கொழும்பு இணங்கியது. சர்வதேச மத்தியஸ்தத்தின் முன்னிலையில் அது அத னைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு அறிவிக்கவும் செய்தது.
அந்த ஒப்புதலின் அடிப்படையில் தீர்வுக்கு வலியு றுத்தாமல், செத்துப் புதையுண்டு போன 13 ஆவது திருத்தத்தை தனது இருபது ஆண்டு பழைமையான தயாரிப்பை இந்தியா தோண்டி எடுத்துத் தூக்கிப் பிடிக்க முயல்கின்றமை
அதற்குப் பின்னான சமஷ்டித் தீர்வுக்கு வழிப்படுத் திய புலிகள் அமைப்பு பேரழிவுக்குட்படுத்தப்பட்ட பின் னணியில் அந்த அழிப்பு வேலையில் இந்தியாவின் பங் களிப்புக்கான நோக்கத்தை எமக்குத் தெளிவுபடுத்தி நிற் கின்றது.
0 கருத்துரைகள் :
Post a Comment