2002.02.22ம் நாள் உருவான சமாதான உடன்படிக்கையின் பின்னர் மீண்டும் 2005ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம், 2006ம் ஆண்டின் நடுப்பகுதியில் மிகவும் தீவிரமான கட்டத்தை எட்டியது. இக்காலகட்டத்தில், சிறிலாங்கா அரச படைகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இலங்கை தீவின் கிழக்குப் பிரதேசத்தினை நோக்கி தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளத் தொடங்கினர். இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் போது பல நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள், பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர்ந்து அகதிமுகாங்களில் தங்கினார்கள்.
இவ்வாறு இடம் பெயர்ந்து கதிரவெளி விக்கினேஸ்வரா பாடசாலையிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் தங்கியிருந்த பொதுமக்கள் மீது 08.11.2006 அன்று சிறிலாங்கா இராணுவம் கண்மூடித்தனமாக பல்குழல், ஆட்லறி போன்ற கனரக எறிகணைத் தாக்குதல்களினை மேற்கொண்டது. அன்றைய தாக்குதல்களில் மட்டும் நாற்பதுக்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். படுகொலை செய்யபட்டவர்களில் குழந்தைகள், கர்ப்பிணிகள், சிறுவர்கள், முதியவர்கள் என அனைத்து வகையினரும் உள்ளடங்குவார்கள். மேலும் நூற்று இருபதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்தனர். இவர்களில் பலர் சிகிச்சை பின்னர் பலனளிக்காது உயிரிழந்தார்கள்.
இத்தாக்குதல் நடைபெற்று இன்று மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இவர்களுக்கான எந்தவிதமான இழப்பீடுகளும் இதுவரை வழங்கப்படவில்லை என்பதுடன் இத்தாக்குதல்களுக்கு உத்தரவிட்ட இராணுவ அதிகாரிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை.
இன்று உலகம் சிறிலாங்கா அரசு மீது கொடுக்கும் அழுத்தத்தினை இத்தாக்குதல்கள் நடைபெற்ற போதே கொடுத்திருந்தால் பின்நாட்களில் தமிழ்மக்கள் மீது நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கைகள் சிலவேளைகளில் நடைபெறாமல் இருந்திருக்கும்.
இத்தாக்குதலில் கொல்லபட்ட பொதுமக்களின் பெயர்விபரங்கள், மேலதீக விபரங்கள் தெரிந்தவர்கள் தயவு செய்து பின்னிணைப்பில் சேர்த்து எமக்கு உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
0 கருத்துரைகள் :
Post a Comment