வவுனியா மாவட்டத்தின் தாண்டிக்குளம் பகுதியில் வவுனியா விவசாயக்கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லுரிக்கு நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றார்கள். கல்வி கற்கும் மாணவர்களில் பெரும் பகுதியினர் தமிழ் மாணவர்கள் ஆவாhகள்;.
2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 நாள் ஜனாதிபதி மகிந்த ராஜபாக்ச அவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருடம் பூர்த்தியடைந்த தினமன்று இலங்கை அரசபடைகள் மீது கிளைமோர் தாக்குதல் நடைபெற்றது. இக் கிளைமோர் தாக்குதலினை காரணம் காட்டி கல்லுரியில் செய்முறை பயிற்சியில் ஈடுபட்டுக்கொணடிருந்த மாணவர்கள் மீது சிங்கள இராணுவம் கொடூர தாக்குதலினை மேற்கொண்டது. கல்லூரியினுள் இராணுவ சீருடையுடன் நுழைந்த சிங்களப்படைகள் மாணவர்களினை தங்களின் அருகில் அழைத்து சுட்டு படுகொலை செய்தார்கள். இத்தாக்குதலின் போது நான்கு மாணவர்கள் தளத்தில் உயிர் இழந்தார்கள். காயமடைந்த ஒன்பது மாணவர்களில் ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
இத்தாக்குதல் மிகவும் மோசமான மனித உரிமை மீறல் என அனைத்து தரப்புகளும் கண்டித்திருந்தார்கள். ஆனால் போர் நிறுத்த கண்கானிப்பு குழு உட்பட யாரும் எந்த விதமான காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. எந்த இராணுவ வீரனும் இதுவரை தண்டிக்கப்படவுமில்லை. என்பது தான் வரலாறாக உள்ளது. ஆதாரங்கள், சட்சிகள் எல்லாம் இருந்த போதும் சிங்கள இராணுவ வீரர்கள் தமிழ் மக்களை கொன்றார்கள் என்ற ஒரே காரணத்தால் யாரும் தண்டிக்கப்படவில்லை.
அன்றைய தினம் சிங்கள படைகளினால் படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரம்.
01 இராமச்சந்திரன் அச்சுதன் 25 - மட்டக்களப்பு
02 சித்திரவேலு கோபிநாத் 22 - மட்டக்களப்பு
03 நிசாந் முகமட் 22 – அம்பாறை
04 திருநாவுக்கரசு சிந்துஜன் 21 – வவுனியா
05. கின்டுயன் - மட்டக்களப்பு
இச்ச்சம்ப்பவத்த்தின் போது காயமடைந்தோர் விபரம்
01 கே.விமலினி 22
02 எஸ்.சிவாஜினி 23
03 ஐ.யுனைட்ற் --
04 சின்னராசா லோகநாதன் 28
05 மகாதேவன் குமுதினி 21
06 கே.அம்பிகா 24
07 ஆர்.ராஜினி 23
08 எஸ்.ருசானி --
09 ஆர்.நவ்சார் --
0 கருத்துரைகள் :
Post a Comment