![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtMPie9DoRGAaHIQZms9zk8pr4I7KQ_h2O6PyPaRBeLOhDofv5PgDjbckBHt3LeDWzKHx7Ky2JniEmLdjCo0oozLItsI2lEtP8PMsjugUlnj__ChGF3MP3dqHnB-y7jY1YTGqCVVwnPNI/s400/kuru.jpg)
இன்று யாழ் குருநகர் புனித யாகப்பர் தேவாலயம் மீதான தாக்குதலின் 16ம் ஆண்டுகள் நினைவுதினம் இன்றாகும். தமிழ் மக்களை அழிக்கும் நோக்குடன் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களை இலக்கு வைத்து சிறிலங்கா இராணுவம் தாக்குதல்களை நடாத்தி பொதுமக்களை கொல்லும் நிகழ்ச்சித்திட்டம் பலநடந்தேறியது. குறிப்பாக உலக அளவில் மிகவும் பிரசித்திபெற்ற வழிபாட்டுதளங்கள் மீது திட்டமிட்ட முறையில் மக்கள் வழிபாடுகளில் இருக்கும் போது அல்லது இவ்வாலயங்கள் தான் பாதுகாப்பு என அப்பாவி பொதுமக்கள் தஞ்சம் புகுந்து இருக்கும் வேளைகளில் தனது தாக்குதல்களை மேற்கொள்கின்றன. என்பது தமிழ் மக்கள் வரலாற்றில் என்றும் மறக்கமுடியாத சம்பவங்கள். இவ்வாறான சம்பவங்களில் ஒ;னறுதான் 13.11.1993 ம் ஆண்டு நடைபெற்றதும்.
குருநகர்க் கிராமம் யாழ்ப்பாண நகரத்திலிருந்து தெற்குப் புறமாக இரண்டு மைல் தூரத்தில் கடற்கரையோரமாக அமைந்துள்ளது. குருநகர்ப் பகுதியில் 1861ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டு 1881 ஆம் ஆண்டு புனித யாகப்பர் ஆலயம் அமைக்கப்பட்டது. இவ்வாலயச் சூழலில் 1973ஆம் ஆண்டு இறந்த 'அருட்திரு யோசவ் றேயை'அவர்கள் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்ட நினைவுக்கல்லும் உள்ளது.
13.11.1993 அன்று சனிக்கிழமை காலை 7:20 மணிக்கு அவ்வூர் மக்கள் இறைவழிபாட்டுக்காக ஆலயத்தில் ஒன்று கூடியிருந்த நேரம் குடாநாட்டு வான்பரப்பிற்குள் பிரவேசித்த விமானப்படையின் சீன நாட்டுத் தயாரிப்பான 'சுப்பர்சொனிக்' விமானங்கள் இரண்டு குருநகர் புனித யாகப்பர் ஆலயம்மீது இரு குண்டுகளை வீசின. இவ்வாலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருந்தவர்களில ; பதினமூ;ன்று பேர் உயிரிழகக் , இருபத்தைந்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததுடன், தேவலாயமும் சேதமடைந்தது.
குருநகர் புனித யாகப்பர் தேவாலயம்மீதான தாக்குதலை அரசியற் தலைவர்களோடு உலகநாடுகள் பலவும் கண்டித்திருந்தன. தேவாலயத்தின் மீதான குண்டு வீச்சினால் மண்டபத்தினைத் தாங்கிய தூண்கள் துண்டங்களாகின. அந்தத் தூண்கள் இன்றும் யாகப்பர் சிலையின் அருகே ஞாபகச் சின்னமாக வைக்கப்பட்டுள்ளன. புனித யாகப்பர் ஆலயத்தில் உயிர் நீத்த மக்களின் நினைவாக குருநகர் மக்களால் ஆலயப் படிக்கட்டில் 'நீதிக்கான
நினைவாலயம்' என்னும் நினைவுச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
13.11.1993 யாழ்.;.குருநகர் புனித யாகப்ப்பர் ஆலயம் மீதான சுப்ப்பசொனிக் விமானக் குண்டு; வீச்சில் கொல்ல்லப்ப்பட்;டோர் விபரம்
01. குரூஸ் அக்கினேஸ் - ஓய்வுபெற்றவர் - 60
02. கபிரியல் அன்ரன் - கடற்றொழில் - 48
03. அன்ரன் புஸ்பலீலா - 41
04. அன்ரன் அஞ்சலா - குடும்பப்பெண் - 40
05. அக்கினேஸ் குருசுப்பிள்ளை - 80
06. ஆரோக்கியநாதர் சில்வன் சஜீவன் - மாணவன் - 18
07. ஜோன்லூத்து சேவியர் - தொழிலாளி - 45
08. தோமஸ் பெனடிற் - கமம் - 55
09. மேரி ஜெயசீலி தாசியஸ் - வீட்டுப்பணி - 50
10. மேரிசிந்துயா மதுரநாயகம் - குழந்தை - 2.5
11. மேரிவெண்ணிலா அந்தோனிப்பிள்ளை – ஆசிரியை - 27
12. சிங்கராயர் ஜானி கனோஜி - மாணவன் - 08
13. சிங்கராசா யூஜின் காமலிற்றா - மாணவி - 15
0 கருத்துரைகள் :
Post a Comment