போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப்பாவும்-பகுதி 3


1970 – 1977  காலப்பகுதியில நாட்டினைத் தன்னிறைவு  நோக்கிய பாதையில் கொண்டுசெலுத்திய சிறிமாவோபண்டாரநாயக்கா  என்.எம்.பெரேரா   ஹெக்டர் ஹொப்பேக்கடுவாபோன்றோர் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பலபொருட்களிற்கும் தடைவிதித்திருந்தனர். அதையும்மீறி இறக்குமதி செய்யமுற்படும் பொருட்களிற்கு அதிகவரியினை விதித்து உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவித்துவந்தனர்.

இதனால் அரிசிபோன்ற அத்தியாவசியப்பொருட்களிற்கே பெரும்தட்டுப்பாடு நிலவியது. இதனால் பொருட்களைப் பங்கீடுசெய்வதற்காக நாட்டின் பலபகுதிகளிலும் பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்கள் உருவாக்கப்பட்டு வளர்தெடுக்கப்பட்டிருந்தன. இவைகள் கூட்டுறவுசங்கம் என்ற பெயரில் அரசதாபனங்கள் போன்று செயற்பட்டன. அன்றையபொருளாதாரநிலையில்   வங்கிகளைவிட அதிகளவு பணம் பரிமாறும்  நிறுவனங்களாக  இவைவிளங்கின.  குறிப்பாககூறினால்   யாழ்ப்பாண குடாநாட்டில் பணம்புரளும்  ஸ்தாபனங்களாக இவையேவிளங்கின.

இதனைவிட   நகரங்களிலிருந்த   வங்கிகளைப்போலன்றி   சிறுசிறுகிராமங்களில்கூட  இவைகள்  கிளைவிட்டு பரவியிருந்தன.  இதனால் ஒவ்வொருகிளையிலும் சேரும்பணத்தினை திரட்டி   தாய்ச்சங்கத்தில்  ஒப்படைக்கும்  பணியிலும்  சிலர்  நியமிக்கப்பட்டு இருந்தனர். வங்கிகளில்சேர வைப்பிலிடப்படும்  இத்தொகைப்பணம்  கொழும்பில்  அரச  மற்றும் கூட்டுத்தாபனங்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் பொருட்களின் விலைக்குமாற்றாக  வழங்கப்படும்.   இப்பணம் சிறுசிறு உற்பத்தியாளர்கட்கு   அவ்வப்பகுதி   கூட்டுறவுசங்கங்களின் மூலம்  கடனாகவும்   வழங்கப்படுவதுமுண்டு.   இவ்வகையில் 1970  ஆரம்பகாலங்களில் உருவாகிய போராளிக்குழுக்களின் பார்வையில் இவை இலகுவாக சிக்கிக்கொண்டன.

1973இல்  வல்வெட்டித்துறை கெருடாவில்வீதியில் வைத்து    பருத்தித்துறை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு  கொண்டுசெல்லப்பட்ட   36.000 ரூபாயும்   1974 நவம்பர் மாதத்தில்   தெல்லிப்பளை கூட்டுறவுச் சங்கத்திற்கு   சொந்தமான பணம் 107000.00  ரூபாய் மற்றும் காசோலைகளும் இளைஞர்களினால் பறித்தெடுக்கப்பட்டிருந்தன.

இதுபோலவே  1975மே மாத இறுதியில்   அளவெட்டி கூட்டுறவுச்சங்கத்திற்கு உரிய சுமார்   37.000 ஆயிரம்ரூபாய்   பிரபாகரன் தலைமயிலான ‘புதிய தமிழ்ப்புலிகள்’ மற்றும்   செட்டி குழுவினரால் பறித்தெடுக்கப்பட்டது.   இத்தாக்குதல் நிகழ்விற்கான தரவுகள்   பற்றிக்கால் எடுக்கப்பட்டன.  அதேபோல் இந்த முன்முயற்சிக்கான   கார் சாவகச்சேரியில்  இருந்து பிரபாகரன்  கலாபதி  பற்றிக்  அவருடைய நண்பனான இன்பம் என்போரால் பறித்து வரப்பட்டிருந்தது. திருநெல்வேலியில் அனுபவமிக்க செட்டிசாரதியாக அமர்ந்து கொள்ள அதுவரைசாரதியாக இருந்த பற்றிக் வேவுக்காரராக மாற்றப்பட்டு வெற்றிகரமான இப்பணப்பறிப்பு நடைபெற்றது.

இவ்வாறு திரட்டப்பெற்ற பணத்தினைவைத்து துரையப்பாவை குறிவைப்பதில் தலைவர்பிரபாகரன் திட்டங்களை வகுக்க முற்;ப்பட்டார். ஆனால் செட்டியுடைய எண்ணமெல்லாம் மேலும் பணத்தினை தேடுவதாகவே அமைந்திருந்தது. செட்டியை தம்முடன் இணைத்துக்காள்ள மறுத்த பெரிய சோதி மற்றும் தங்கத்துரையின் கூற்றுக்கள் உண்மையானநிலையில் செட்டியுடன் கருத்து வேறுபாடுகொண்;ட தலைவர்பிரபாகரனும் பிரிந்து தனியாக செயற்படவாரம்பித்தார்.

அளவெட்டிபணப்பறிப்பு  சம்பவத்தின்பின் செட்டியுடன் முரண்பட்ட இன்பம் இக்குழுவினரிடமிருந்து ஏற்கெனவே பிரிந்துசென்றிருந்தார். ஆனால் மனந்தளராத தலைவர் தொடர்ந்தும் துரையைப்பாவையே தனது முதல்க்குறியாக கொண்டு செயற்படலானார். தான் அறிந்தகாலம் முதல் தலைவர் பிரபாகரனின் தீர்க்கமான குணத்தை புரிந்துகொண்டிருந்த செட்டி ஒருசில நாட்களிலேயே தன்தவறை உணர்ந்து கொண்டார் போலும்   தானாகவே தலைவரைத் தேடிவந்து கெருடாவில் கந்iசாமி கோவிலடியில் அவரைச்சந்தித்து சமரசம் செய்துகொண்டார்.   இவ்வாறு செட்டி மீண்டும் இணைந்து செயலாற்ற சம்மதம் தெரிவித்த ஒருசிலநாட்களில் பொலிசாரினால்  கைதுசெய்யப்பட்டார்.

குற்றச்செயல்களைப் புரிவதில் பிரியமும் அசாதரண துணிச்சலும் கொண்டவர் செட்டி ஆவார். எனினும் தலைவர்பிரபாகரனிடம் நிரம்பியிருந்த தமிழினத்திற்கான வேட்கையையும் அதற்காக அவர் வகுத்துக்கொண்ட  தீர்க்கமான பாதையையும் பிரபாகரனுடைய திடமான போராட்டவெறியினையும் இனங்கண்ட ஒருவராகவே ஆரம்பத்தில் காணப்பட்டார். எனினும் பழக்கதோசமும் பொலிசாரின் தொடரான நெருக்குதலும் காரணமாக இறுதியில் பொலிசாரின் உளவாளியாக மாற்றமடைந்தார். இதனால்  1981 மார்ச் 16  இல் குட்டிமணியுடன் சென்ற தலைவர் பிரபாகரனினால்  அவரது பிறப்பிடமான கல்வியங்காட்டிலேயே செட்டி சுட்டுக்கொல்லப்பட்டார். தனபாலசிங்கம் எனும் இயற்பெயரைக் கொண்ட இவரை A SOLDIER'S VERSION என்னும் நூலில் அதன் ஆசிரியரான முன்னால்  குருநகர் இராணுவமுகாம் பொறுப்பதிகாரியும்  ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ அதிகாரியும் பேச்சாளருமான சரத்முனசிங்கா Police informant  ஆகவே தனது  நுலின் 251வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளமை இங்கே சுட்டிக் காட்டத்தக்கது.

முதலாவது இலக்கை செயல்ப்படுத்துவதற்கு முன்பாகவே  செட்டி கைதுசெய்யப்பட்டதால் அவரிடம் இருந்த அளவெட்டிப்பணத்தின் கணிசமான பகுதி போராட்டத்திற்கு பயன்படாது போயிற்று. அத்துடன் இவர்களிடமிருந்த ஒரேயொரு 4.05 துப்பாக்கியுடனேயே செட்டி கைது செய்யப்பட்டிருந்தார். செட்டி கைது செய்யப்பட்டதால் புகலிடம்தேடிய அவரது நண்பனான பற்றிக் வேறு வழியின்றி தலைவருடன் ஒட்டிக்கொண்டார்.  தலைவர்பிரபாகரன் தன்னிடமிருந்த பணத்தில் எதையும் வியாபாரமாகக் கொள்ளும் பற்றிக் மூலமாக இரண்டு கைத்துப்பாக்கிகளை கொள்வனவுசெய்தார். சுப்பிரமணியம் பற்குணராசா என்ற இயற்பெயரையுடைய  இவர் பற்குணம் எனவும் அழைக் கப்பட்டார். அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த கெக்கிராவை செல்லையாவின் கடையில் பற்றிக் ஊழியராக இருந்தவர். கெக்கிராவை உட்பட மேலும் பலஇடங்களில் மதுபானவிற்பனைநிலையம் மற்றும் பலசரக்கு கடைகளையும் வெற்றிகரமாக நடத்திவந்தவர் செல்லையா ஆவார். செல்லையாவின் வாடிக்கையாளரான ஒருபொலிசாரின் உதவியினால் பிரபாகரனின் ஆலோசனையை முன் யோசனையாக ஏற்றுக்கொண்டு இரண்டாம் உலகமகாயுத்த காலத்திற்குரிய 38 இலக்கரக  இரண்டு ரிவோல்வர் வகையான கைத்துப்பாக்கிகளையும் அவற்றுக்குரிய இரண்டு குண்டுகளினையும் பன்னிரண்டு வெற்றுத்தோட்டாக்களினையும் பற்றிக் கொள்வனவு செய்திருந்தார்.

தலைவர்பிரபாகரனின் வழிகாட்டலில் வெறுமனே  இரண்டுகைத்துப்பாக்கிகள் இரண்டுகுண்டுகளுடனும் முதன்நிலைப் போராளியான கலாபதியும் நண்பனும்  செட்டியின் நண்பனான பற்றிக் ஆகிய நால்வரும் துரையப்பாவின் மீதான தாக்குதல் முயற்சிக்கு முன்னுரிமை அளித்து செயற்படமுனைந்தனர். ஆனால் வல்வெட்டித்துறையிலே வாழ்ந்த முன்னைய மூவருக்கோ யாழ்ப்பாணத்திற்கு வெளியிலேயே  பணியாற்றி வாழ்ந்த   நாலாமவரான பற்றிக் இவர்களில் யாருக்குமே துரையப்பாவை தெரியாது.  இதுபோலவே அவரது நடமாட்டங்களைப் பற்றிய எவ்விததகவல்களும் உடனடியாக இவர்களிற்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில் யூலைமாத ஆரம்பநாட்களில் தலைவருடன் இந்தியாவில் அறிமுகமாயிருந்த  கிருபாகரன்  தலைவர் பிரபாகரனைச்சந்தித்து  அந்த அரிய தகவலைக் கூறினார். பழம்நழுவி பாலில்விழுவது எனும் சொற்றொடருக்கு இசைந்தவாறு  அமைந்த அத்தகவல்   யாழ்மேயர் அல்பிரட் துரையப்பா ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளில் மானிப்பாய் அந்தோனியார் கோவில் என்பவற்றிற்கு வழிபாட்டிற்காக செல்பவர் என்பதுடன்  கத்தோலிக்கரானபோதும் ஞாயிற்றுக்கிழமைகளில்  பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோவிலிற்கும்  தவறாது  செல்கின்றார் என்பதேயாகும்.  மேற்கூறிய தகவலை கிருபாகரன் உறுதிப்படுத்தியதும்  தலைவர் தனது அடுத்தநகர்விற்கு தயாரானார்.


ஏனெனின் கிருபாகரன் துரையப்பாவின் வசிப்பிடமான  கொய்யாத்தோட்டத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த அரியாலையை சொந்த இடமாகக் கொண்டிருந்தவர். இதனால் துரையப்பாவை நன்கு தெரிந்திருந்தார்.  தலைமறைவாக இந்தியாவில் இருந்தகாலத்திலும் 1974 ஒக்டோபரில் துரையப்பாவின் மரியாதைக்குரிய ‘பிரதமர்’ ஸ்ரீறிமாவே பண்டாரநாயக்காவின்   இந்தியவருகையை எதிர்த்து  சென்னையில் அமைந்திருந்த  சிறிலங்கா தூதுவராலயத்தையும்  இராஜரட்ணம் ஸ்ரேடியத்திற்கு அண்மையில் இருந்த  பௌத்தகோயிலையும் கிருபாகரனும்  நண்பர்களும் குண்டுவைத்து தகர்க்கமுயற்சித்தனர்.  இதற்காக கைதுசெய்யப்பட்ட இவருக்கும் இவரது நண்பர்களிற்கும் எதிராக சென்னை நீமன்றத்தில் குற்றம்சாட்டப் பெற்றிருந்தது  இவ்வழக்கின் விசாரணைக்காலங்களில் கோடம்பாக்கத்தில் வாழ்ந்திருந்த  பெரியசோதி நடேசுதாசன்  குலம் என்பவர்களுடன்  தலைவரும் நடந்து சென்றே மேற்படி வழக்கினைப் பார்த்திருந்தார். அத்துடன் துரையப்பாவின்மீது தனிப்பட்டவன்மத்தை முன்னிறுத்திய காண்டீபன் அமிர்தலிங்கமும் அவரது நண்பனான    கிருபாகரனும்   தொடர்ச்சியாக துரையப்பாவை தாக்குவதற்கு தருணம்பார்த்து செயலாற்றிவந்தனர்.

மேற்படிவிடயங்களை   நன்கு தெரிந்திருந்த தலைவர் பிரபாகரனும் மீண்டும் அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் துரையப்பாவின்  மேற்படி நடவடிக்கையை உறுதிசெய்தபின் தொடர்ந்துவரும் ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்ட பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோவிலடியில் வைத்து துரையப்பாவைத் தாக்கலாம் எனமுடிவு செய்தார். ஏனெனில் கிருபாகரனின் தகவலின் அடிப்படையில்  துரையப்பாவை வேறுபலரும் குறிவைத்து இருப்பதால்  மானிப்பாயிலும் அவ்வாறனவர்களில் சிலர் துரை யப்பாவின் வருகைக்காக காத்திருக்கக்கூடும் என எதிர்பார்தார். இதனைவிட மக்கள் செல்வாக்குப் பெற்ற துரையப்பாவை பொதுமக்கள் நடமாட்டம் குறைந்த இடத்தில் தாக்குவதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கமுடியும் என்பதையும் தீர்க்கதரிசனமாக தலைவர் முடிவுசெய்தார். காரணம் துரையப்பாவை ஆரம்பத்தில் தீர்துக்கட்டமுயன்ற பொன்.சிவகுமாரனை இறுதியில் பிடிக்கத்துரத்தியவர்கள் பொதுமக்கள்தான் என்பதையும் இதனாலேயே பொலிசாரின் முற்றுகைக்குள் சிவகுமாரன் அகப்பட்டு  சயனைட் உட்கொண்டு   வீரமரணமடைந்நதும்  பகிரங்கரகசியம் ஆகும்.

வருணகுலத்தான் பார்வையில்

போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப்பாவும்-பகுதி 2

போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப்பாவும்-பகுதி 1

Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. Kollaiyar, Kolaikaarar hal iranthaal allathu kollappattal athu veeramaranam enpathu poaraalihalin puthiya thaththuvam/

    ReplyDelete