இலங்கைத் தமிழர் உரிமைகள் பெற தீர்மானம் நிறைவேற்றுவதைத் தவிர, வேறு என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு தெரியவில்லை என்று, “டெசோ’ மாநாட்டில் கருணாநிதி பேசினார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் போரில் இறந்து கொண்டிருந்த நேரத்தில், மத்திய அரசுக்கு தி.மு.க., அளித்த ஆதரவை, திரும்பப் பெறாத கருணாநிதி, தற்போதைய மாநாட்டு பேச்சிலும், “ஐ.நா., மீது அழுத்தம் தர வேண்டும்’ என்று பேசி, மத்திய அரசை சீண்டாமல் நழுவியுள்ளார்.நான்காம் ஈழப் போரின் போது பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் எங்கும் போராட்டங்களும், பொதுக் கூட்டங்களும், உண்ணா விரதங்களும் நடத்தினர். ஆனால், இவற்றின் நோக்கு வெற்றி பெறுவதற்கு தேவையான ஆதரவை அந்த நேரத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி தரவில்லை. சில கண்துடைப்பு கூட்டங்கள், மனித சங்கிலி, ராஜினாமா நாடகம், உண்ணாவிதரம் என்று முடித்து விட்டார். தற்போதும் மாநாட்டை கூட்டிவிட்டு புதிததாக எதுவும் செய்யாமல் பழைய பாட்டையே பாடியுள்ளார். இது, இலங்கை தமிழர் மேல் அக்கறை கொண்ட பல தரப்பினருக்கும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
“டெசோ’:“இலங்கையில் தமிழ் ஈழம் பெற்றுத் தர வேண்டும்’ என்ற நோக்கோடு, தி.மு.க., தலைவர் கருணாநிதி, “டெசோ’ (தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு) அமைப்பை, கடந்த ஏப்ரல் மாதம், மீண்டும் துவக்கினார். இந்த அமைப்பின் சார்பில், ஆக., 12ம் தேதி (நேற்று), சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடக்கும்; மத்திய அமைச்சர்கள், இலங்கைத் தமிழ் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பர் என, அறிவிக்கப்பட்டது. திடீர் “பல்டி’:இலங்கையில், “தனி ஈழம்’ அமைய வலியுறுத்தி, “டெசோ’ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், “தனி ஈழத் தீர்மானம், மாநாட்டில் நிறைவேற்றப்படாது’ என்று கடந்த மாதம், திடீரென கருணாநிதி அறிவித்தார்.
மேலும், “ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு’ என மாநாட்டின் பெயரையும் அவர் மாற்றினார். மத்திய அரசின் நெருக்கடி காரணமாக, இந்த நிலையை அவர் எடுத்ததாகக் கூறப்பட்டது. நெருக்கடி :இருப்பினும், “டெசோ’ மாநாட்டில் பங்கேற்க, சிறப்பு விருந்தினர்களை அழைத்து வருவதிலும், மாநிலம் முழுவதும் இருந்து தி.மு.க., தொண்டர்களைத் திரட்டுவதிலும் தி.மு.க., தீவிரம் காட்டியது; மாநாட்டு செலவுகளுக்காக நிதி திரட்டுவதும் சூடுபிடித்தது.மாநாட்டுக்கான நாள் நெருங்கிய நிலையில், “ஈழம் என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாது’ என மத்திய அரசின் வெளியுறவுத் துறை, கடந்த 10ம் தேதி, திடீரென நெருக்கடி கொடுத்தது. இதனால், அதிர்ச்சியடைந்த தி.மு.க., தலைமை, விளக்கங்களை அளித்து, இந்த உத்தரவில் இருந்து, கடைசி நேரத்தில், நிபந்தனைகளின் பேரில், விலக்கு பெற்றது.இடமாற்றம்:“டெசோ’ மாநாட்டிற்கு தடை விதிக்க பரூக் அப்துல்லாவேண்டுமென்று, ஐகோர்ட்டில் தொடுக்கப்பட்ட வழக்கு, அடுத்த நெருக்கடியாய் அமைந்தது. “மாநாட்டுக்கான அனுமதி குறித்து, காவல் துறை முடிவெடுக்கலாம்’ என ஐகோர்ட் கூறிய நிலையில்,சென்னை மாநகர காவல் துறை, 11 காரணங்களை பட்டியலிட்டு, மாநாட்டுக்கு அனுமதி மறுத்தது. இதனால், “டெசோ’ மாநாடு நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.”எப்படியாவது மாநாட்டை நடத்த வேண்டும்’ என முடிவு செய்த தி.மு.க, தலைவர் கருணாநிதி, கடைசி நேரத்தில், கட்சித் தலைமை அலுவலகமான, அண்ணா அறிவாலயத்தில் மாநாடு நடத்த, முடிவு செய்தார். இந்நிலையில், ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஒய்.எம்.சி.ஏ., திடலில் மாநாடு நடத்த, நேற்று அனுமதி கிடைத்தது.
சம்பிரதாயமாய்…:இத்தனை ஆரவாரங்கள், பரபரப்புகளுக்கிடையே நடந்த, “டெசோ’ ஆய்வரங்கம் மற்றும் மாநாட்டு நிகழ்வுகள், சம்பிரதாயமாய் நடந்து முடிந்தன. மத்திய அரசின் இந்த நெருக்கடி காரணமாக, மாநாட்டில் பங்கேற்கவிருந்த மத்திய அமைச்சர்கள் சரத் பவார், உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்காமல், தங்கள் பிரதிநிதிகளை மாநாட்டுக்கு அனுப்பி வைத்திருந்தனர். மேலும், இலங்கையில் இருந்து பங்கேற்பதாக அறிவித்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.,க்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிர்வாகிகளும் மாநாட்டை புறக்கணித்தனர்
0 கருத்துரைகள் :
Post a Comment