வெளிநாடுகளில் இருந்து 100 இற்கும் அதிகமான பிரதிநிதிகள் வரவுள்ளதாக கூறப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளில் இருந்து வந்த மொத்தப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை வெறும் 56 மட்டும் தான். இதில், இந்த கருத்தரங்கில் உரையாற்றுவதற்கு இலங்கை இராணுவத்தால் அழைக்கப்பட்ட வல்லுனர்களும் அடங்கியிருந்தனர். இந்த கருத்தரங்கில் பங்கேற்க தமது நாட்டு இராணுவப் பிரதிநிதிகளை அனுப்பியவை, மொத்தம் 25 நாடுகள் மட்டுமே. இந்தக் கருத்தரங்கில் 42இற்கும் அதிகமான நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும், அது 35 வரையில் தான் என்பதே உண்மை. அதிலும் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்குல நாடுகள் தமது பிரதிநிதிகளை இந்தக் கருத்தரங்கிற்கு அனுப்பி வைக்கவில்லை. அமெரிக்காவில் இருந்தும், பிரித்தானியாவில் இருந்தும் வந்தவர்கள், இந்த கருத்தரங்கிற்கு உரையாற்ற அழைக்கப்பட்ட துறைசார் வல்லுனர்களாவர். அவர்கள் அந்த நாடுகளின் பிரதிநிதிகளாக வரவில்லை, தனிப்பட்ட ரீதியாகவே இதில் பங்கேற்றனர். இலங்கை அரசினால் அழைப்பு விடுக்கப்பட்ட பெரும்பாலான நாடுகள் கருத்தரங்கில் பங்கேற்காததும், மேற்குலக நாடுகள் பெரும்பாலும் கலந்து கொள்ளாததும் இலங்கைக்கு கவலையை ஏற்படுத்தக் கூடிய விவகாரமாகும்.
சர்வதேச சமூகம் இந்தக் கருத்தரங்கை எந்தக் கண்ணோட்டத்துடன் பார்த்தாலும் சரி, இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவத்தைப் பொறுத்த வரை இது கவலைப்பட வேண்டிய விவகாரமாகும். ஏனென்றால், இந்தக் கருத்தரங்கின் அடிப்படை நோக்கத்தை சரியாக எட்டமுடியவில்லை. மேற்குலக நாடுகள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்காததால், இலங்கை அரசாங்கம் சொல்ல விரும்பிய செய்தி, அவர்களின் காதுகளைச் சென்றடையத் தவறியுள்ளது. இதனால், இந்தக் கருத்தரங்கை எந்தவகையிலும் இராணுவத்தினால் வெற்றிகரமானதாக அடையாளப்படுத்த முடியாது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், இரண்டாவது பாதுகாப்புக் கருத்தரங்கை இலங்கை இராணுவம் கடந்தவாரம் நடத்தியிருந்தது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட முதலாவது பாதுகாப்புக் கருத்தரங்கு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் நடத்தப்பட்டது.ஆனால் இம்முறை போருக்குப் பிந்திய சூழலை மையப்படுத்தி- புனர்வாழ்வு, புனரமைப்பு விவகாரங்களை முக்கியத்துவப்படுத்தி நடத்தப்பட்டுள்ளது. அதாவது இலங்கை அரசாங்கம் சர்வதேச அளவில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு தொனிப்பொருள் இது. போருக்குப் பின்னர் இலங்கை இராணுவம், சர்வதேச அளவில் எதிர்கொண்டு வரும் குற்றச்சாட்டுகளில் இருந்து, தப்பிக் கொள்வதற்கான ஒரு வழியை தேடுவதற்கு இந்தத் தொனிப்பொருள் மிகவும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் – வரும் நவம்பர் மாதம் இலங்கை தொடர்பான மீளாய்வுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில்- இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது. ஆனால் அந்த நோக்கத்தை அடைவதற்கு இந்தக் கருத்தரங்கு எந்தளவுக்கு உதவியுள்ளது என்பது கேள்விக்குரியதாக உள்ளது.
மூன்று நாட்கள் நடந்த இந்தக் கருத்தரங்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களும், இதற்கு சர்வதேச நாடுகள் கொடுத்த முக்கியத்துவமும் ஆழ்ந்து ஆராயப்பட வேண்டிய வியடங்களாகும். இந்தக் கருத்தரங்கிற்கு இலங்கை இராணுவத்தினால் அழைப்பு விடுக்கப்பட்ட நாடுகளின் மொத்த எண்ணிக்கை 63 ஆகும். இதைவிட, கொழும்பில் உள்ள 42 நாடுகளின் தூதுவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால் இதில் பங்கேற்ற நாடுகளின் எண்ணிக்கை மிகக்குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் இருந்து 100இற்கும் அதிகமான பிரதிநிதிகள் வரவுள்ளதாக கூறப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளில் இருந்து வந்த மொத்தப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை வெறும் 56 மட்டும் தான். இதில், இந்த கருத்தரங்கில் உரையாற்றுவதற்கு இலங்கை இராணுவத்தால் அழைக்கப்பட்ட வல்லுனர்களும் அடங்கியிருந்தனர். இந்த கருத்தரங்கில் பங்கேற்க தமது நாட்டு இராணுவப் பிரதிநிதிகளை அனுப்பியவை, மொத்தம் 25 நாடுகள் மட்டுமே.
புரூணை, மாலைதீவு, அவுஸ்ரேலியா, பங்களாதேஸ், பிறேசில், நைஜீரியா, மலேசியா, சவுதி அரேபியா, சீனா, கென்யா, துனிசியா, இந்தியா, தாய்லாந்து, பாகிஸ்தான், சம்பியா, கானா, இந்தோனேசியா, துருக்கி, தென்கொரியா, நமீபியா, சூடான், செனகல், ரஸ்யா, வியட்னாம், ஈரான் ஆகியனவே அவை. இவை தவிர சுமார் 13 நாடுகளின் கொழும்பிலுள்ள தூதுவர்கள் அல்லது பிரதிநிதிகளும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர். இந்தக் கருத்தரங்கில் 42இற்கும் அதிகமான நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும், அது 35 வரையில் தான் என்பதே உண்மை. அதிலும் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்குல நாடுகள் தமது பிரதிநிதிகளை இந்தக் கருத்தரங்கிற்கு அனுப்பி வைக்கவில்லை. அமெரிக்காவில் இருந்தும், பிரித்தானியாவில் இருந்தும் வந்தவர்கள், இந்த கருத்தரங்கிற்கு உரையாற்ற அழைக்கப்பட்ட துறைசார் வல்லுனர்களாவர். அவர்கள் அந்த நாடுகளின் பிரதிநிதிகளாக வரவில்லை, தனிப்பட்ட ரீதியாகவே இதில் பங்கேற்றனர். இலங்கை அரசினால் அழைப்பு விடுக்கப்பட்ட பெரும்பாலான நாடுகள் கருத்தரங்கில் பங்கேற்காததும், மேற்குலக நாடுகள் பெரும்பாலும் கலந்து கொள்ளாததும் இலங்கைக்கு கவலையை ஏற்படுத்தக் கூடிய விவகாரமாகும்.
கடந்த ஆண்டு முதலாவது பாதுகாப்புக் கருத்தரங்கை நடத்திய போதே கடும் சர்ச்சை உருவானது. மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒரு இராணுவம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வைப் புறக்கணிக்க வேண்டும் என்று சர்வதேச மனிதஉரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. கடந்தமுறை விடுதலைப் புலிகளை தோற்கடித்த அனுபவங்கள் என்ற முக்கியமான தொனிப் பொருளில் நடந்த கருத்தரங்கையே கணிசமான நாடுகள் புறக்கணித்திருந்தன. இம்முறை அதிக நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்ட போதிலும், அதிக வரவேற்பு கிடைக்கவில்லை. கடந்த முறை 80 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றதாக இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கூறியிருந்தார். ஆனால் இம்முறை 56 பிரதிநிதிகள் தான் வந்துள்ளனர். அதிலும் கொழும்பிலுள்ள 42 நாடுகளின் தூதுரகங்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்ட போதும், 13 நாடுகளின் தூதரகப் பிரதிநிதிகளே பங்கேற்றுள்ளனர். இது போருக்குப் பிந்திய இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகள் குறித்து ஏனைய நாடுகள் அறிய விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்துகிறதா அல்லது கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் புறக்கணிக்க எடுத்துள்ள முடிவா என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது.
சர்வதேச சமூகம் இந்தக் கருத்தரங்கை எந்தக் கண்ணோட்டத்துடன் பார்த்தாலும் சரி, இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவத்தைப் பொறுத்த வரை இது கவலைப்பட வேண்டிய விவகாரமாகும். ஏனென்றால், இந்தக் கருத்தரங்கின் அடிப்படை நோக்கத்தை சரியாக எட்டமுடியவில்லை. மேற்குலக நாடுகள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்காததால், இலங்கை அரசாங்கம் சொல்ல விரும்பிய செய்தி, அவர்களின் காதுகளைச் சென்றடையத் தவறியுள்ளது. இதனால், இந்தக் கருத்தரங்கை எந்தவகையிலும் இராணுவத்தினால் வெற்றிகரமானதாக அடையாளப்படுத்த முடியாது.
நன்றி இன்போதமிழ்
நன்றி இன்போதமிழ்
0 கருத்துரைகள் :
Post a Comment