Friday, March 9, 2012

சிறிலங்கா மீதான அனைத்துலக அணுகுமுறையும் இந்தியாவின் ஒத்துழையாமையும்

இந்திய அரசியல் கோட்பாடுகள் மற்றும்இந்திய அதிகார பீடத்தைதொடர்ச்சியாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த உயர் மட்ட அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகளால் சிறிலங்காவில் நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு மனிதப் பேரழிவுகள் இடம்பெற அனுமதிக்கப்பட்டன.  இவ்வாறு SAAG - the South Asia Analysis Group     ஆய்வு நிறுவனத்திற்காக பேராசிரியர் இராமு.மணிவண்ணன் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடர்தொடர்பில் இந்தியாவில் வழமைக்கு மாறான அமைதி நிலவுகின்றது. இந்தியாவானது தொடர்ந்தும் தனது அயல்நாட்டுடன் நெருங்கிய உறவைத் தக்கவைத்துக் கொள்ள விரும்புகின்ற போதிலும் உலகநாடுகள் இந்த விடயத்தில் தொடர்ந்தும் அமைதி பேணவிரும்பவில்லை.

இதேவேளையில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் சிறிலங்காவுக்கான தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தபோது சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களிடம் எமது அன்பை வெளிக்காட்டிக் கொள்வதற்காக தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் திருநாளில் கலந்து கொண்டு சிறப்பித்தது போலஇ ஜெனீவாவிலும் மண்பானைகளை காவிச்செல்வதற்கான சந்தர்ப்பத்தை இந்திய அரசாங்கம் தவறவிடாது இருக்கலாம்.

சிறிலங்கா அரசாங்கத்தாலும், அதன் அதிகாரிகளாலும் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தீர்வை நோக்கிய நடவடிக்கையின் இறுதிக் கட்ட மாதங்களில் இந்தியாவானது சிறிலங்காவுக்கு அரசியல் மற்றும் இராஜீக ஆதரவுகளை வழங்கியிருந்தது. இந்தியாவை காயப்படுத்துகின்ற மிகக் கொடிய உண்மையாக இது உள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற இனப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் தெரிவு செய்யப்பட்ட இராணுவ வழித் தீர்வின் விளைவாகசிறிலங்காத் தமிழர்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்த இந்தமக்களின் புனர்வாழ்வு மற்றும் அவர்களின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக இந்திய மக்களுக்கு விளக்க வேண்டிய பாரிய பொறுப்பை இந்திய அரசாங்கம் கொண்டுள்ளது.

இந்திய அரசியல் கோட்பாடுகள் மற்றும் இந்திய அதிகார பீடத்தை தொடர்ச்சியாககட்டுப்பாட்டில் வைத்திருந்த உயர் மட்ட அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகளால் சிறிலங்காவில் நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு மனிதப் பேரழிவுகள் இடம்பெற அனுமதிக்கப்பட்டன.

ஐக்கிய அமெரிக்க குடியரசுக்கான இந்தியாவின் தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்னர்ஓய்வுபெற்ற இந்திய வெளியுறவுச் செயலர், சிறிலங்கா அதிபரின் தனிப்பட்ட அழைப்பின்பேரில் கொழும்புக்கு விருந்தாளியாக சென்றிருந்தமையானது இந்தியாவின் தார்மீகக் கடப்பாட்டுக்கு அப்பாலான நடவடிக்கையாக உள்ளது.

சிறிலங்கா அரசாங்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் இந்திய –  சிறிலங்கா நாடுகளுக்கிடையிலான பூகோள அமைவிடத்தை இந்தியா கருத்திற் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், மறுபுறம் இம்மாதம்  ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படக் கூடாது என தமிழ்நாட்டு முதல்வர் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் இந்திய அரசாங்கமானது இருதலைக்கொள்ளி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இவ்விரு நிலைப்பாடுகளையும் கருத்திற் கொண்டு இந்தியா தீர்மானம் எட்டவேண்டும் எனில், பாடசாலை மாணவன் ஒருவர் பரீட்சை ஒன்றுக்குஉரிய நேரத்தில் சமூகமளிக்காதிருப்பது போலவே, இந்தியாவும் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் எடுக்கும் போது அதில் கலந்து கொள்ளாதிருக்கவேண்டும்.

அமெரிக்கா மற்றும் நோர்டிக் நாடுகளால் முன்வைக்கப்படும் பிரேரணை தொடர்பில் இந்தியாவானது செல்வாக்குச் செலுத்த முடியாவிட்டால், இதற்கான வாக்கெடுப்பில் இந்தியாவானது கலந்து கொள்ளாது தவிர்க்க வேண்டும். சிறிலங்காவில் தொடரப்பட்ட மிகக் கொடிய இராணுவத் தீர்வுக்கான நடவடிக்கைகளில் எவ்வாறான பங்களிப்பை வழங்கியிருந்தது என்பது தொடர்பில் இந்தியா உலகத்தை நம்ப வைப்பதற்கு முயல்கின்றது என்பதற்கு சற்று அதிகமாக உலகம் இந்தியாவின் நடவடிக்கையை நன்கறிந்து வைத்துள்ளது.

இவ்வாறான நிலைப்பாட்டைக் கருத்திற் கொள்ளும் போது, இந்தியாவானது சிறிலங்காவுக்கு எதிரான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருப்பதானது சிறிலங்காவின் அரசியலுக்குள் இந்தியா தனது பாதங்களைப் பதித்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும். இந்தியாவான சிறிலங்காவை எதிர்த்து செயற்படுமிடத்து சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவை அச்சுறுத்தும் பாணியில் தனது இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளலாம். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியாவானது ஆழமாகயோசித்து செயற்படவேண்டியுள்ளது. இந்திய அரசாங்கமானது சிறிலங்கா மீதானசீனாவின் செல்வாக்குத் தொடர்பில் அச்சுமுற்றால், சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் பிறிதொரு திபேத்திய நிலைப்பாடு உருவாவதற்கு இந்தியா வழிவகுக்கக் கூடாது.

தற்போது ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரில் இந்தியா அடிப்படையில் கருத்திற் கொள்ள வேண்டிய மூன்றுவிடயங்கள் உள்ளன.

முதலாவதாகஇ சிறிலங்கா தொடர்பான அரசியல் கடப்பாட்டை நிறைவு செய்வதற்கு ஏதுவான திட்ட வரைபொன்றில் கலந்து கொள்ளாது தவிர்த்தல்.

இரண்டாவதாக, சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்களுக்கு இந்தியாவானது ஆதரவாகஇருந்து விட்டு, அதற்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணை தொடர்பானவாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது தவிர்த்தல்.

மூன்றாவதாக, சிறிலங்கா அரசாங்கம் மீதான கோரிக்கைகளை வலியுறுத்தும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தல்.

இம் மூன்று விடயங்கள் தொடர்பாகவும் இந்தியாவானது ஆழமாக எண்ணிப்பார்க்கவேண்டும். தற்போது இந்தியாவின் மூன் இம்மூன்று தெரிவுகள் உள்ளன. ஆகவேமூன்றாவது தெரிவை இந்தியா தேர்ந்தெடுத்துக் கொண்டால், இந்தியாவானதுவெளிப்படையாக சீனாவின் சிறிலங்கா மீதான அரசியற் செல்வாக்கால் ஏற்படும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியேற்படும்.

சிறிலங்காவில் வாழும் தமிழ்மக்களின் நீதிக்காக இந்தியாவானது சிலவேளைகளில் எதிர்காலத்தில் கவனத்திற் கொள்ளலாம் என்பதைத் தவிர தமிழ்மக்கள் இந்தியாவிடமிருந்து வேறெதனையும் எதிர்பார்த்து நிற்கவில்லை என்பது இங்கு முக்கிய காரணியாக உள்ளது. தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டமானது இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடனோ அல்லது ஆதரவின்றியோ தொடர வேண்டும் என்பதையே மறுசாரார் எதிர்பார்த்து நிற்கின்றனர். இந்த எதிர்பார்ப்புஇ மற்றும் இது தொடர்பானநம்பிக்கையானது வேறிடங்களை விட தமிழ்நாட்டிலேயே அதிகம் காணப்படுகின்றது.

இவ்வாறான எதிர்பார்ப்பானது தமிழ்த் தேசியவாதக் குழுக்களின் மத்தியில்மட்டுமல்லாது, சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போதுஇ இந்திய ஆதரவுடன் தொடரப்பட்ட படுகொலைகள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசனம் அடைந்துள்ள ஏனைய பொது அமைப்புக்கள் மற்றும்செயற்பாட்டாளர்கள் மத்தியில் நிலவுகின்றது.

சிறிலங்கா அரசாங்கமானது தனது சொந்த நாட்டு மக்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்றஅல்லது தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களை உலகிற்கு படம்பிடித்துக் காட்டிஉலகின் நம்பிக்கையை சம்பாதிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ள போதிலும், இவை தொடர்பான நினைவுகளை அழித்துக் கொள்வதென்பது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கமாட்டாது.

வன்னிப் பிராந்தியத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாங்களைச் சூழ கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு படைகள்; அதிகம் குவிக்கப்பட்டுள்ள இந்தமுகாங்களை இந்திய அதிகாரிகள் பார்வையிட்டு அவை தொடர்பாக தமது கருத்துக்களைத் தெரிவிப்பதானது மிகவும் வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பாக தமிழ்நாட்டை AIADMK, MDMK போன்ற கட்சிகளும்,  UPA கூட்டணியும் பல்வேறான கருத்துக்களை முன்வைத்துள்ளன. அத்துடன் இந்தக் கட்சிகள் இந்திய மத்திய அரசாங்கத்திடம் பலகோரிக்கைகளை முன்வைத்துள்ளன. ஆகவே இந்திய மத்திய அரசாங்கமானது தனது நாட்டில் உள்ள இவ்வாறான கட்சிகளினதும், தலைவர்களினதும், மக்களினதும் அதிகரித்து வரும் எதிர்ப்புணர்வை மீண்டுமொரு முறை அசட்டை செய்வதானது சிறிலங்கா மீதான இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் அதிருப்திநிலையைத் தோற்றுவித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தாலும், அதன் அதிகார பீடத்தாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தமற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான மீறல்கள் தொடர்பில் மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கைகளை தமிழ்நாட்டு முதல்வர் செல்வி ஜெயலலிதா விடுத்துள்ளதுடன், சிறிலங்காவுக்கு எதிராக சட்டசபையில் பிரேரணைகளையும் மேற்கொண்டுள்ளார்.

ஆகவே இந்நிலையில் இந்திய மத்திய அரசாங்கமானது தொடர்ந்தும் நீண்டகாலத்துக்கு தனது மக்களின் குரல்களை அசட்டை செய்து அவர்களின் கோரிக்கைகளை கவனத்தில் எடுக்காது புறக்கணிக்க முடியாது. இந்த மக்கள் ஜனநாயக வழிமுறையில் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் இந்திய மத்திய அரசாங்கமானது இதனை கருத்திலெடுத்து, விரைவான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே உண்மையான நிலைப்பாடாகும்.

நன்றி - புதினப்பலகை

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment