செட்டிகுளப்படுகொலையின் 25ம் ஆண்டு நினைவு - 02.12.1984

வவுனியா மாவட்டத்தின் எல்லைக் கிராமமாக வவுனியா-மன்னார் வீதியில் வவுனியா நகரிலிருந்து இருபது கி.மீ தூரத்தில் செட்டிக்குளம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் விவசாயிகள், வர்த்தகர்கள், கூலித்தொழிலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் வாழ்கின்றார்கள்.

1984.12.02 அன்று இராணுவத்தினரால் செட்டிகுளப் பகுதி எங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இராணுவத்தினர் செட்டிக்குளம் கிராமத்தினை காலை 5.30 மணியளவில் சுற்றிவளைக்கத் தொடங்கினார்கள். கிராம மக்களில் கூடுதலானவர்கள் உறக்கத்தில் இருந்தனர். செட்டிகுள கிராமத்திற்குள் நுழைந்த இராணுவத்தினர் கிராம மக்களில் ஆண்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள். இவர்களில் ஐம்பத்திரண்டு பேரைச் செட்டிகுளச் சந்தியில் வைத்து இராணுவ வாகனங்களில் ஏற்றி மதவாச்சிக்குக் கொண்டு சென்றனர். இதன்பின் இவர்கள் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. ஆனாலும் இவர்கள் மதவாச்சியிலுள்ள ஓர் சிங்களக் கிராமத்தில் வைத்து இராணுவத்தினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனரென்றும் குற்றுயிராக இருந்தவர்கள் மீது டோசரை ஏற்றிக் கொன்றனரென்றும் செட்டக்குள மக்கள் கூறுகின்றனர்.

செட்டிகுளம் மகா வித்தியாலய ஆசிரியரான தி.யேசுதாசன் சம்ப்பவம் பற்ற்றிக் குறிப்ப்பிடுகையில்
'ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து விட்டு வந்த இராணுவத்தினர் சுற்றிவளைத்து ஐம்பத்திரண்டு ஆண்களைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தில் எனது தம்பியும் எனது அக்காவின் கணவரும் உயிரிழந்தனர். அத்துடன் எனது வீட்டில் வேலை செய்த இருவரும் கைது செய்யப்பட்டனர், சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்பின்பு அவ்வூர் மக்கள் வன்னி, மடு, இந்தியா போன்ற இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றனர்.'

02.12.1984 அன்று படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரம்
01. சூசைப்பிள்ளை கிறிஸ்துராசா கமம் 32
02. இராசையா - -
03. இராமசாமி பொன்னுத்துரை கமம் 45
04. ஊர்கனசாமி கமம் 23
05. கந்தையா - -
06. கந்தையா கெங்காரட்ணம் - -
07. குமார் மோகன் - -
08. குமார் வரதராசா வியாபாரம் 19
09. குருகுலசாமி கமம் 23
10. குலசேகரம்பிள்ளை யூஜின் கமம் 18
11. பாண்டியன் பெரியரசு - -
12. பி.அருள்பிரகாசம் கமம் 30
13. பிலிப்பையா அருள்பிரகாசம் கமம் 38
14. பரமலிங்கம் பரமநாதன் - -
15. ஐயம்பிள்ளை பரமநாதன் விவசாயம் 33
16. துரையப்பா நாதன் - -
17. முத்துசாமி கோணார் கோபால் - -
18. முருகேசு சங்கரப்பிள்ளை தொழிலாளி 38
19. அப்பாப்பிள்ளை வெற்றிவேற்பிள்ளை கமம் -
20. அல்பின் றொபின்சன் கமம் 26
21. அல்வின் அந்தோனிஸ்ரி வின்சன தச்சுத் தொழில் 24
22. அல்வின் அலைக்சாண்டர் தச்சுத் தொழில் 21
23. அல்வின் அன்ரன் - -
24. பொன்னுத்துரை கிறிஸ்துராசா - -
25. பொன்னுத்துரை தனநாயகம் - -
26. டொண்பொஸ்கோ றொமன் - -
27. சௌந்தரராசன் புஸ்பராசன் மரவேலை 27
28. செல்லையா யூட் - -
29. செல்லையா கேதீஸ்வரன் கமம் 28
30. செல்லர் மூர்த்தி - -
31. செல்லர் மகேந்திரன் - -
32. வேதநாயகம் செபமாலை கமம் 31
33. வேலுப்பிள்ளை சிவபாலசிங்கம் விவசாயம் 35
34. சந்தணப்பிள்ளை இருதையராசா கமம் 25
35. சின்னக்குட்டி கந்தசாமி - -
36. சிவகணேசன் - -
37. சங்கரப்பிள்ளை பாலேந்திரன் கமம் 29
38. வடிவேல் அசோக்குமார் - -
39. விநாயகமூர்த்தி யோகநாதன் கமம் 24
குறிப்பு :- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
Share on Google Plus

About முல்லைப்பிளவான்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment