தென்னமரபடி கிராமத் தலைமை அதிகாரியான (விதானையார்) திரு.எஸ்.வைரமுத்து என்பவர் 1985ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இருபத்தி நான்காம் திகதி வெளிவந்த சற்றாN;ட ரீ.வ்.யு ஏட்டில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி ஆயுதம் தாங்கிய காடையர் கூட்டம் ஒன்று தென்னமரவடிக் கிராமத்தில் நுழைந்து பெண்கள் உட்பட பதினைந்து பேரை கொன்று அங்கிருந்த நூற்று இருபத்தி ஐந்து குடும்பங்களையும் விரட்டி அடித்து வெளியேற்றினர். அதேவேளை அருகில் இருந்த அமரவயல் கிராமத்திலும் இவ்வாறு நடந்ததெனக் குறிப்பிட்டிருந்தார். இவ்விரு கிராமங்களும் திருமலை மாவட்டத்தில் வடமுனையில் இருந்தவை. ஆங்கிலேயர் 1824ஆம் ஆண்டு எடுத்த குடித்தொகையின் போது தமிழ் கிராமங்களாக பதிவு செய்யப்பட்டிருந்தன. 1984 மார்கழி இங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இன்று இக்கிராமங்கள் சிங்கள கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன.
Home
/
டிசம்பர் மாத ஈழப்படுகொலைகள்
/
தெனன்ன் மரவடி தமிழ் கிராம அழிப்பின் 25ம் ஆண்டு நினைவுகள் - 03.12.1984
Subscribe to:
Post Comments
(
Atom
)
வணக்கம்!!! தென்னமரவடியின் அழிப்பின் 25 ம் ஆண்டு நினைவுகள் என்ற விடத்தைப் பார்த்தேன்
ReplyDeleteநீங்கள் யார் என்பதை அறிய விரும்புகின்றேன் காரணம் நான் தென்னமரவடியை பிறப்பிடமாக கொண்டுள்ளேன் தயவுடன் அறியத்தரவும். நன்றி
எனது பெயர் யோகானந்தன் மயில்வாகனம்.
m.j.nanthan@hotmail.fr