இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும்
நோக்குடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சமர்ப்பிக் கப்பட்ட அதிகாரப்
பரவலாக்கம் குறித்த யோசனைகளில் மூன்று முக்கிய விடயங்களை தம்மால்
ஏற்றுக்கொள்ள முடி யாது என அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.
அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் கடந்த
சனிக்கிழமை இடம்பெற்ற 15வது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது நாடாளுமன்ற
தெரிவுக்குழு விவகாரம் தொடர் பில் அரசாங்கத்தரப்பில் கொடுக்கப்பட்ட
அழுத்தங்களைத் தொடர்ந்து, இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சு வார்
த்தையில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், இவ்விரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று மீண்டும் இடம் பெற்றிருந்தது. நேற்று மாலை சுமார் 3.00 மணிமுதல் 5.00 மணிவரை இடம்பெற்ற இப்பேச்சு வார்த்தையில் கடந்த வாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த தெரிவுக்குழு விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் பிரதி நிதிகள் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்க வில்லையயன தெரியவருகின்றது. ஆயினும், இப்பேச்சுவார்த்தை யின் போது அதிகாரப்பரவலாக்கல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளில் மூன்று விடயங்களை ஏற்றுக்கொள்ள அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
வடக்குக் கிழக்கு இணைப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம், அரசாங்க நிலங்களை மாகாணசபைகளுக்கு உரித்தாக் குதல் ஆகிய விடயங்களை தம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது என அரச பிரதிநிதிகள் இப் பேச்சுவார்த்தையின் போது கூறியுள்ளனர். இந்த நிலையில் இலங்கையின் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வைக் காண்பதற்கு இம் மூன்று விடயங்களும் மிகவும் முக்கியமான அம்சமாகும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அரசாங்கத்தின் பிரதி நிதிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இப்பேச்சு வார்த்தையில் அரசாங்கத்தின் தரப்பில் அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ் மற்றும் நிமால் சிறிபால டி சில்வாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கூட்ட மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கனக ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அடுத்த பேச்சுவார்த்தை ஏப்பில் 14ம் திகதி நடைபெறவுள்ளது.

நன்றி வலம்புரி
0 கருத்துரைகள் :
Post a Comment