கேள்விக்குள்ளாகத் தொடங்கி விட்ட தமிழரின் இருப்பு.......?

தமிழர்கள் இன ரீதியாக, மொழி ரீதியாக அடக்கப்பட்ட நிலை இப்போது, புதிய வடிவிலான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தமிழ்மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த தாயகப் பிரதேசமான வடக்கிலும், கிழக்கிலும் கூட தமிழரின் இருப்பு இப்போது கேள்விக்குள்ளாகத் தொடங்கி விட்டது. சிங்களக் குடியேற்றங்களும், இராணுவ மயமாக்கலும் தமிழரின் கழுத்தை நெரிக்கத் தொடங்கி விட்டன.

தமிழ்மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்குவதன் மூலமே, இனப்பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்ற உண்மைக்கு அப்பால் நின்று கொண்டு, பொருளாதார அபிவிருத்தி மூலம் அதைச் செய்ய முனைவது முட்டாள்தனம். பிரச்சினைகளை சந்தர்ப்பம் பார்த்து கைகழுவிக் கொள்வதில் சிங்களத் தலைமைகள் குறியாக இருக்கின்றன. தமிழர் பிரச்சினையின் பரிமாணத்தை சரியாகப் புரிந்து கொள்ளாதவரை சிங்களத் தலைமைகளிடம் இருந்து எந்த நியாயமான தீர்வையும் தமிழ்மக்களால் எதிர்பார்க்க முடியாது. அதிகாரங்களைப் பகிராமல் வெறும் பொருளாதார அபிவிருத்தியின் மூலம் தமிழரின் பிரச்சினைகளை மறைத்து விடலாம் அல்லது அமுக்கி விடலாம் என்பது சிங்களத் தலைமைகளிடத்தில் உள்ள ஒரு நம்பிக்கை. இந்த நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டுவதில் அரசுடன் ஒட்டிக் கொண்ட தமிழர் தரப்புகளும் கணிசமான பங்கை வகித்துள்ளன. தமிழர்கள் எல்லா வழிகளிலும் அடக்கப்பட்டு, அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, வேறு வழியே இல்லை என்ற நிலையில் தான் பிரிவினையே ஒரே வழி என்ற நிலை உருவானது. பிரித்தானியர் இருந்து இலங்கைக்கு சுதந்திரம் வழங்கியபோது, தமிழர்கள் எவரும் பிரிந்து செல்ல விருப்பப்படவில்லை. பிரிவினைவாதம் தமிழர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. அது தமிழர் மீது திணிக்கபட்டது ஒன்று.


இனி,


அதிவேக நெடுஞ்சாலைகள் பிரச்சினைக்குத் தீர்வாகுமா?

  • தமிழ்மக்களின் பிரச்சினைகளை சிங்களத் தலைமைகள் இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதை கடந்த 27ம் திகதி தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறப்புவிழாவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நிகழ்த்திய உரையில் இருந்து தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. 

    “கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு செல்ல 8 மணித்தியாலம் தேவைப்படுவதால் தான் பிரிவினை கோருகின்றனர். அதிவேக நெடுஞ்சாலை மூலம் 3 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் செல்ல முடியுமானால், பிரிவினை ஏற்படாது. அப்போது எல்லைகளும் இருக்காது. இடைவெளிகள் குறைந்து மனங்கள் இணையும் போது பிரிவினைக்குத் தீர்வு இயல்பாகவே கிடைத்து விடும். 

    பிரிவினைவாதம், பிரதேசவாதத்திற்கு இதுதான் சிறந்த தீர்வு“ 

    இப்படிக் கூறியிருந்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. 

    யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குச் செல்வதற்கு நீண்டநேரம் எடுக்கிறது என்பதற்காகத் தான் தமிழர்கள் பிரிவினை கோருகின்றனர் என்ற புரிதலுடன் தான் அவர் இருக்கிறார் என்பது தெளிவாகிறது. யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான தூரம் வெறும் 300 கி.மீற்றர்கள் மட்டும் தான். இந்தியாவின் தெற்கு முனையில் இருந்து புதுடெல்லிக்கு ரயில் மூலம் செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு மேல் பிடிக்கும். ஆனாலும் தமிழ்நாட்டிலோ, கேரளாவிலோ அவ்வாறு பிரிவினைவாதம் தலை தூக்கவில்லை. அதேவேளை, தலைநகர் புதுடெல்லிக்கு அருகே உள்ள காஸ்மீர் போன்ற மாநிலங்கள் பிரிவினைவாதத்தில் இருந்து தப்பி விடவும் இல்லை. ஆயிரக்கணக்கான கி.மீ தொலைவைக் கடந்து தலைநகரை எட்ட வேண்டிய நிலை பல நாடுகளில் உள்ள மக்களுக்கு இருக்கிறது. 

    ரஸ்யா, கனடா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா, சீனா போன்ற இத்தகைய நாடுகளில், பயணத் தூரத்தினால் பிரிவினைவாதம் தலைதூக்கவில்லை. எனவே, கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான தூரமும், பயண நேரமும் தான் பிரிவினைக்குக் காரணம் என்ற புரிதல் தவறானது. 

    தமிழ்மக்களின் பிரச்சினை வெறும் கொழும்புக்கான பயணத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. அதன் பரிமாணம் வேறுபட்டதென்பதை அரசாங்கம் தவறாகப் புரிந்து கொண்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் கொழும்புடன் யாழ்ப்பாணத்தை துரிதமாக இணைக்கலாம். ஆனால் அதுவே பிரிவினைவாதச் சிந்தனைக்கான தீர்வாக அமையாது. எந்தக் கட்டத்தில் தமிழர்களிடம் பிரிவினைவாதம் தலைதூக்கியது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ற மருந்திட்டால் தான் பிரிவினைவாதத்துக்கு நிரந்தரமாக முடிவு கட்ட முடியும். 

    தமிழர்கள் எல்லா வழிகளிலும் அடக்கப்பட்டு, அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, வேறு வழியே இல்லை என்ற நிலையில் தான் பிரிவினையே ஒரே வழி என்ற நிலை உருவானது. பிரித்தானியர் இருந்து இலங்கைக்கு சுதந்திரம் வழங்கியபோது, தமிழர்கள் எவரும் பிரிந்து செல்ல விருப்பப்படவில்லை. பிரிவினைவாதம் தமிழர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. அது தமிழர் மீது திணிக்கபட்டது ஒன்று. 

    கல்வி ரீதியான, மொழி ரீதியான அடக்குமுறைகள் பிரிவினைவாதத்துக்கு முக்கியமானதொரு காரணம். 

    முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அண்மையில் அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் நிகழ்த்திய உரையின்போது, தனது தந்தையார் (எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க) கொண்டுவந்த சிங்களச் சட்டமும், தாயார் (சிறிமாவோ) கொண்டு வந்த தரப்படுத்தல் சட்டமும் தமிழர்களை போராடும் நிலைக்கு கொண்டு சென்றதாக கூறியிருந்தார். அவர் இதனைப் இப்போது புரிந்து கொண்டிருப்பதால், எந்தப் பயனும் இல்லை. 11 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது- அதுவும் நிறைவேற்று அதிகாரத்துடன் இருந்தபோது, அவரிடம் இந்தப் புரிதல் இருக்கவில்லை. அவரும் போர் போர் என்றே அலைந்து கொண்டிருந்தார். ஆட்சியில் இருந்து இறங்கிய பின்னர் தான் அவருக்கு கடந்தகாலத் தவறுகள் புரிகிறது. உண்மைகள் உறைக்கின்றன. 

    விடுதலைப் புலிகளுடன் இறுதிப்போரை நடத்திக் கொண்டிருந்த போது, விரைவில் புலிகளை அழித்து விட்டு தமிழ்மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை வழங்கப் போவதாகக் கூறியிருந்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. போர் முடிந்த பின்னரும் அப்படித் தான் கூறினார். தன்னிடம் ஒரு அரசியல்தீர்வு உள்ளதாகவும், ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும், அதை தைரியமாக நடைமுறைப்படுத்தப் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கூறினார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அந்தத் திட்டத்தின் கதையும் முடிந்து விட்டது. இப்போது தன்னிடம் தீர்வு ஏதுமில்லை என்று கைவிரித்துள்ளார் அவர். எல்லாவற்றையும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவே பார்த்துக் கொள்ளட்டும், நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்ளும் எதையும் நானும் ஏற்றுக் கொள்வேன் என்றும் அவர் கூறிவிட்டார். 

    பிரச்சினைகளை சந்தர்ப்பம் பார்த்து கைகழுவிக் கொள்வதில் சிங்களத் தலைமைகள் குறியாக இருக்கின்றன. தமிழர் பிரச்சினையின் பரிமாணத்தை சரியாகப் புரிந்து கொள்ளாதவரை சிங்களத் தலைமைகளிடம் இருந்து எந்த நியாயமான தீர்வையும் தமிழ்மக்களால் எதிர்பார்க்க முடியாது. அதிகாரங்களைப் பகிராமல் வெறும் பொருளாதார அபிவிருத்தியின் மூலம் தமிழரின் பிரச்சினைகளை மறைத்து விடலாம் அல்லது அமுக்கி விடலாம் என்பது சிங்களத் தலைமைகளிடத்தில் உள்ள ஒரு நம்பிக்கை. இந்த நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டுவதில் அரசுடன் ஒட்டிக் கொண்ட தமிழர் தரப்புகளும் கணிசமான பங்கை வகித்துள்ளன. 

    கடந்த காலங்களில் பொருளாதார சலுகைகளை நீட்டிய போதிலும், மக்களின் ஆணை எவ்வாறு அமைந்த்து என்பதை தெரிந்தாவது திருந்தியிருக்க வேண்டும். ஆனால், அரசாங்கமோ இன்னமும் பொருளாதார அபிவிருத்தியின் மூலம், வசதியான வாழ்க்கையின் மூலம் இனப்பிரச்சினையை தீர்க்கலாம் என்றே நம்புகிறது. அதிவேக நெடுஞ்சாலைக் கதை கூட அதன் வழிவந்தது தான். 

    தமிழர்கள் இன ரீதியாக, மொழி ரீதியாக அடக்கப்பட்ட நிலை இப்போது, புதிய வடிவிலான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. 

    தமிழ்மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த தாயகப் பிரதேசமான வடக்கிலும், கிழக்கிலும் கூட தமிழரின் இருப்பு இப்போது கேள்விக்குள்ளாகத் தொடங்கி விட்டது. சிங்களக் குடியேற்றங்களும், இராணுவ மயமாக்கலும் தமிழரின் கழுத்தை நெரிக்கத் தொடங்கி விட்டன. தமிழ்மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்குவதன் மூலமே, இனப்பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்ற உண்மைக்கு அப்பால் நின்று கொண்டு, பொருளாதார அபிவிருத்தி மூலம் அதைச் செய்ய முனைவது முட்டாள்தனம். 

    பொருளாதார அபிவிருத்தி முக்கியமானது தான். ஆனால் அதைவிட இனப்பிரச்சினைக்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறியப்பட்டு அவற்றுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். தமிழரின் ஆழ் மனங்களில உறைந்து போயுள்ள வடுக்களை அகற்ற வேண்டும். அதற்கு நியாயமான அதிகாரப் பகிர்வு ஒன்றே ஒரே வழி. இதனை அரசாங்கத்தில் உள்ள பேராசிரியர் திஸ்ஸ விதாரண போன்ற அமைச்சர்களே கூறி வருகின்றனர். 

    அதிவேக நெடுஞ்சாலை யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் தான். 
    ஆனால் அதுவே பிரச்சினைக்கான தீர்வாக அமையாது. ஏ-9 வீதியை கைப்பற்றிய போது, வடக்கையும் தெற்கையும் இணைத்து விட்டோம், இனிமேல் பிரிவினைக்கு இடமில்லை என்றது அரசாங்கம். ஆனால் இப்போதும் ஜனாதிபதி சொல்கிறார், இன்னமும் பிரிவினைப் பிரச்சினை தீரவில்லை என்று. 

    ஆக, 

    புலிகளைத் தோற்கடிக்கும் முயற்சிகளில் தான் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதே தவிர, பிரிவினைவாதத்தைத் தோற்கடிப்பதில் வெற்றி பெறவில்லை. இதனை ஜனாதிபதியே ஒப்புக்கொண்டுள்ளார்.முன்னர் ஏ-9 வீதியைத் திறந்து விட்டால் போதும், பிரிவினைக்கு முடிவு கட்டி விடலாம் என்று நம்பிய அரசாங்கம், இப்போது இன்னமும் பெயரிடப்படாத- யாழப்பாணத்தக்கான அதிவேக நெடுஞ்சாலையை அமைத்து விட்டால், முடிவு கட்டி விடலாம் என்று நம்புகிறது. இது சிங்களத் தலைமைகள் தமிழரின் பிரச்சினைகள் தொடர்பாக கொண்டுள்ள புரிதல் இந்தளவு தான் என்பதை உணர்த்துகிறது. அதுமட்டுமன்றி, பிரச்சினையைத் தீர்க்கின்ற இடத்தில் இருந்து இவர்கள் வெகுதொலைவில் நிற்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது.

    நன்றி இன்போ தமிழ் குழமம் 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment