பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தார். மாணவர்கள் விரிவுரையைக் கேட்டுக் கொண்டு இருந்தனர். ஒரு மாணவன் சேர்! விளங்கவில்லை என்றார்.பேராசிரியர் சிவத்தம்பி அந்த மாணவரைப் பார் த்து,விளங்கவில்லை என்பதையாவது நீ விளங்கிக் கொண்டாய். இங்கு பலர் விளங்கவில்லை என்பதைக்கூட விளங் கிக் கொள்ளவில்லை என்றார். பேராசிரியர் சிவத்தம்பி கூறிய விளங்கவில்லை என்பதை விளங்கிக்கொள்ளுதல் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் மிகவும் பொருத்தமுடையவர்களாக இருக்கின்றனர்.
பேச்சுவார்த்தை, தெரிவுக்குழு, சர்வதேச அழுத்தம் இப்படியாக ஏதேதோ பேசப்படுகின்றது. எனினும் இனப்பிரச்சினை க்கு தீர்வு ஏதேனும் உண்டா எனில் எதுவுமே இல்லை. அதேநேரம் இலங்கை அரசுடன் தமிழ்த் தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் ஏதேனும் தீர்வு கிடைக்குமா எனில் அறவேயில்லை என்பதே அதற்குப் பதிலாக இருக்கும். நிலை மை இதுவாக இருக்கின்ற போதிலும் அதனை விளங்கிக்கொள்வதில் விளக்கமில்லாத பரிதாபநிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை இனப்பிரச்சினை தொடர்பான விடயங்கள் அந்தக் கட்சியில் இருக்கக்கூடிய இரண்டு மூன்று பேரால் மட்டுமே கையாளப்படுகின்றது. ஏனையவர்களுக்கு அங்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாது.
இருந்தும் அதற்காக கட்சியை விட்டு வெளியேறுவது, குளத்தோடு கோபம் கொண்டு ... போவது போல அமையும் என் பதால் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து இருப்பதுதான் அடுத்த தேர்தலில் வெல்வதற்கும் தமிழின உணர்வாளர் என்பதை உறுதிப்படுத்துவதற்கும் ஒரேவழி என்பது அந்தக்கட்சி சார்ந்தவர்களுக்கு நன்கு தெரியும். இது ஒருபுறமிருக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரயோசமில்லை என்பது நன்கு தெரிந்தவர்களும் பேச்சுவார்த்தை மூலம் ஏதேனும் கிடைக்குமா? கிடைக்காதா? என்பது பற்றி எதுவும் அலட்டிக்கொள்ளாதவர்களும் அந்தக் கட்சியில் இருப்பது அதிசய மான உண்மை. எதுவாயினும் அழகு ராணி போட்டிக்கு போகின்றவரில் இருந்தே அழகு ராணியை தெரிவு செய்ய முடி யும். அதேநேரம் அழகு ராணி போட்டியில் பங்கு கொள்ளாத எத்தனையோ அழகிகள் இருக்கிறார்கள் என்பதும் மறுப்ப தற்கில்லை.
அதுபோலதான் அரசியல், இன விவகாரம், தீர்வுக்கான இராஜதந்திரம், அரசியலில் நடக் கின்ற தில்லுமுல்லுக்களை தெரிந்த பலர் எங்கள் மத்தியில் இருந்தாலும், இலங்கையில் இருக்கக்கூடிய சாக்கடை அரசியல் வேண்டாம் என்று அவர்கள் ஒதுங்கிக்கொண்டதால், அவர்களின் ஆழமான சிந்தனைகள் அமுங்கிப் போயுள்ளன. தமிழ் மக்களும் அரசி யல் மாற்றத்தை விரும்பாதவர்களாக, எது நடந்தாலும் பரவாயில்லை என்ற பற்றற்ற நிலையில் இருப்பதால், தமி ழினத்தின் உரிமை விவகாரம் இழுபட்டுத் தேய்பட்டுச் செல்கின்றது. ‘யார் எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாத பரிதாப நிலையில் இராஜதந்திர வியூகத்தை தமிழ்த் தரப்புக்கள் முன்னெடுக்காதுவிட்டால் எமக்கான பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை முதல் எங்கள் வாழ்விடத்தின் எல்லைப்பரப்புவரை எல்லாமும் குறைந்து செல்வது தவிர்க்க முடியாததாகிவிடும்.
நன்றி வலம்புரி
நன்றி வலம்புரி
0 கருத்துரைகள் :
Post a Comment