வடக்கு, கிழக்கு இணைப்பு, மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரப் பகிர்வு என்று எதையுமே செய்ய முடியாது என்று திட்டவட்டமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கினால், தனது சொந்தக் கிராமத்துக்குக் கூட செல்ல முடியாது, கொழும்பிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியது தான் என்று கூறியுள்ளார் ஜனாதிபதி. வித்தியாசமான கதை இது. மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் கொடுப்பதால் தனது நிறைவேற்று அதிகாரம் முடங்கிப் போய் விடும் என்று அவர் கூறும் கதையை நம்புவதற்கு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. காணி அதிகாரங்களும் அப்படித் தான். அதைவிட வடக்கு, கிழக்கை இணைக்க முடியாது என்றும் கூறிவிட்டது அரசாங்கம். அதிகாரப் பகிர்வு ஒன்றின் மூலம் பிரச்சினையைத் தீர்ப்பதானால், காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் வடக்கு, கிழக்கு இணைப்பும் மிக முக்கியம். இவை இல்லாத நிரந்தரத் தீர்வு ஒருபோதும் சாத்தியமாகப் போவதில்லை. இது அரசுக்குத் தெரியாத வியயமல்ல. ஆனாலும் நிரந்தரத் தீர்வு ஒன்றுக்கான நல்லெண்ணச் சூழலை உருவாக்கும் எண்ணம் அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறான எண்ணம் இருந்தால், இந்த விடயங்களில் கொஞ்சமாவது விட்டுக் கொடுக்க முன்வந்திருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்படும் பேச்சுக்களில் எந்த பயனும் இல்லை, நேரத்தை விரயமாக்கும் செயல் என்று கூறியுள்ளார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. நேரத்தை வீணாக்கும் செயல் என்று தெரிந்தால், எதற்காக அரசாங்கம் அவர்களுடன் பேச வேண்டும். பேச்சுக்களை முறித்து விட்டுப் போயிருக்கலாமே. அதையும் அரசாங்கம் செய்யத் தயாராக இல்லை. அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இந்த அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முனையும்போது சிக்கல்களை எதிர்கொள்ளலாம் என்று நினைக்கக் கூடும். அத்தகைய சிக்கலில் இருந்து விடுபடவே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை உருவாக்க பசில் ராஜபக்ஸ விரும்புகிறார் போலுள்ளது. எவ்வாறாயினும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தும் திட்டமேதும் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஒன்று, உடனடியாக அரசாங்கம் உருப்படியான காரியங்களை மேற்கொள்ளாது போனால், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பின்னடைவைச் சந்திக்கும்.அதுமட்டுமல்ல, சர்வதேச அளவில் எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமா அரசாங்கம்?
- நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் அதன் பரிந்துரைகள் தொடர்பாகவும், அதனை நடைமுறைப்படுத்து குறித்தும் அவர் நாளுமன்றத்தில் சிறப்புரை ஒன்றை நிகழ்த்துவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அவர் சமர்ப்பிக்கவும் இல்லை. பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது பற்றிய ஒழுங்குமுறைகள் பற்றிய அறிவிப்பை வெளியிடவும் இல்லை. சபை முதல்வரான அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவே அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அத்துடன் அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்றும் அவரே கூறியுள்ளார்.எதற்காக ஜனாதிபதி அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் முடிவில் இருந்து பின்வாங்கினார் என்று தெரியவில்லை. அண்மையில் சார்க் மாநாட்டுக்காக மாலைதீவு சென்றிருந்த போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துவீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தது.அதற்கு அவர்,“இது ஒன்றும் பகிரங்க ஆவணம் அல்ல. ஆனாலும் அதை ஒளிக்க விரும்பவில்லை. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன். அப்போது அது பகிரங்க ஆவணம் ஆகிவிடும்“என்று கூறியிருந்தார்.அதாவது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை ஒரு பகிரங்க ஆவணம் அல்ல என்பதே அவரது கருத்தாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு ஆவணத்தை அவரே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதே முறை. இன்னொரு அமைச்சர் மூலம் வெளியிட்டது சரியானது தானா என்பது சர்ச்சைக்குரிய கேள்வி தான்.நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைப் பெற்றுக் கொண்ட ஜனாதிபதி அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது பற்றிய அறிவிப்பையோ உறுதிமொழியையோ இதுவரை வழங்கவில்லை. இது இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் எதிர்கொள்ளும் சிக்கல்நிலையை எடுத்துக் காட்டுகிறது.ஏனென்றால், பசில் ராஜபக்ஸ அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய்ந்து நடைமுறைப்படுத்தவதற்கு தெரிவுக்குழு ஒன்றை நியமிக்கலாம் என்று யோசனை கூறியுள்ளார். அது தனது யோசனையே என்று அவர் கூறியுள்ள போதும் அவருக்கு அரசாங்கத்தில் இருக்கின்ற முக்கியத்துவம், அந்த யோசனை நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது.நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறைபாடுகள் இருந்தாலும், அதன் பரிந்துரைகளையாவது நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கருத்து வலுவாக உள்ளது. எனவே அரசின் அடுத்த நகர்வு பற்றியே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கேற்ப அரசாங்கம் நடந்து கொள்ளுமா என்பது தான் முக்கியமான விடயம். இந்தநிலையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் அரசாங்கம் முன்னோக்கிச் செல்வதற்குப் பதிலாக பின் நோக்கிச் செல்கிறதோ என்று எண்ணும் வகையில் அரசதரப்பின் அறிவிப்புகள் வருகின்றன.நாட்டில் எந்தவொரு பகுதியிலும் தற்போதுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது என்று நாடாளுமன்றத்தில் வைத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் படைவிலக்கம் பற்றிய எந்தப் பரிந்துரையும் முன்வைக்கப்படவில்லை. ஆனால், உயர்பாதுகாப்பு வலயங்களை விலக்கிக் கொள்வது மற்றும் சிவில் நிர்வாகப் பணிகளில் உள்ள இராணுவத் தலையீடுகளை நீக்குவது பற்றிப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், எந்தவெரு படை முகாமையும் விலக்க முடியாது என்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் அறிவிப்பு தமிழ்மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் ஒரு காரியமாகத் தெரியவில்லை.நாட்டின் பிறபகுதிகளை வடக்கு,கிழக்குடன் ஒருபோதும் ஒப்பிட முடியாது. ஏனென்றால் வடக்கு, கிழக்குப் பகுதிகள் தான் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் அங்குள்ள மக்கள் தான் சிரமங்களைச் சந்திக்கின்றனர். வடக்கு, கிழக்கில் உள்ள மக்களுக்கு அங்குள்ள படையினர் அந்நியமாகவே தெரிகின்றனர். இப்படியான நிலையில் முழு நாட்டுக்குமேயுரிய பாதுகாப்புக் கொள்கையே என்றும், அதில் தளர்வு காட்ட முடியாது என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூறியுள்ளது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்வியை எழுப்ப வைத்துள்ளது.அதுபோன்றே, வடக்கு, கிழக்கு இணைப்பு, மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரப் பகிர்வு என்று எதையுமே செய்ய முடியாது என்று திட்டவட்டமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கினால், தனது சொந்தக் கிராமத்துக்குக் கூட செல்ல முடியாது, கொழும்பிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியது தான் என்று கூறியுள்ளார் ஜனாதிபதி. வித்தியாசமான கதை இது.மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் கொடுப்பதால் தனது நிறைவேற்று அதிகாரம் முடங்கிப் போய் விடும் என்று அவர் கூறும் கதையை நம்புவதற்கு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.காணி அதிகாரங்களும் அப்படித் தான். அதைவிட வடக்கு, கிழக்கை இணைக்க முடியாது என்றும் கூறிவிட்டது அரசாங்கம்.அதிகாரப் பகிர்வு ஒன்றின் மூலம் பிரச்சினையைத் தீர்ப்பதானால், காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் வடக்கு, கிழக்கு இணைப்பும் மிக முக்கியம். இவை இல்லாத நிரந்தரத் தீர்வு ஒருபோதும் சாத்தியமாகப் போவதில்லை. இது அரசுக்குத் தெரியாத வியயமல்ல. ஆனாலும் நிரந்தரத் தீர்வு ஒன்றுக்கான நல்லெண்ணச் சூழலை உருவாக்கும் எண்ணம் அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறான எண்ணம் இருந்தால், இந்த விடயங்களில் கொஞ்சமாவது விட்டுக் கொடுக்க முன்வந்திருக்கும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்படும் பேச்சுக்களில் எந்த பயனும் இல்லை, நேரத்தை விரயமாக்கும் செயல் என்று கூறியுள்ளார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. நேரத்தை வீணாக்கும் செயல் என்று தெரிந்தால், எதற்காக அரசாங்கம் அவர்களுடன் பேச வேண்டும். பேச்சுக்களை முறித்து விட்டுப் போயிருக்கலாமே. அதையும் அரசாங்கம் செய்யத் தயாராக இல்லை.நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கியமானது அரசியல் நல்லிணக்கம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இதே போக்கை கடைப்பிடிப்பதால் அரசியல் நல்லிணக்கம் உருவாகி விடப் போவதில்லை. தமிழ்மக்களின் அடிப்படையான கோரிக்கைகளை, நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல் அரசியல் நல்லிணக்கம் ஒருபோதும் சாத்தியப்படாது.அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையையே முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. இந்தநிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமா என்று நம்பமுடியாத நிலையே உள்ளது.அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இந்த அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முனையும்போது சிக்கல்களை எதிர்கொள்ளலாம் என்று நினைக்கக் கூடும். அத்தகைய சிக்கலில் இருந்து விடுபடவே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை உருவாக்க பசில் ராஜபக்ஸ விரும்புகிறார் போலுள்ளது.எவ்வாறாயினும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தும் திட்டமேதும் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஒன்று, உடனடியாக அரசாங்கம் உருப்படியான காரியங்களை மேற்கொள்ளாது போனால், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பின்னடைவைச் சந்திக்கும்.அதுமட்டுமல்ல, சர்வதேச அளவில் எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
ஆய்வாளர் சுபத்ரா
இன்போ தமிழ் குழுமம்
0 கருத்துரைகள் :
Post a Comment