யுத்தம் முடிவடைந்த மூன்று வருடங்களின் பின்னர்....


தலைநகர் கொழும்பில் வீதிகள் சுத்தமாகக் காணப்பட்டன. ஜப்பானிய கார்கள், மோட்டார்கள் சைக்கிள்களான நிசான், டெயோட்டோ, ஹொண்டா, யமகா, அதிக வேகத்தில் சென்றுகொண்டிருந்தன. காலணித்துவ ஆட்சிக் கட்டிடங்கள் பிரமாதகமாகக் காணப்பட்டன. இலங்கையில் மிக உயரமான கட்டிடமாக 152 மீற்றர் உயரம் கொண்ட உலக வர்த்தக நிலையம் காணப்படுகிறது. புதிய கட்டிடத் தொகுதிகள் காணப்பட்டன. அமான், தாஜ், ஹில்டன், இன்டர்கொன்டினன்டல் போன்ற ஹோட்டல்கள் சிறப்பான விதத்தில் இருக்கின்றன. இளைஞர்களின் டிஸ்கோ மற்றும் நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. நகரம் சுறுசுறுப்பாகக் காணப்பட்டது. இது இலங்கையின் தலைநகரக் காட்சிகள்.

ஆனால், சில மணித்தியால நேர பயணத்தின் பின்னர் நாட்டின் வட பகுதி இரவு 8 மணியுடன் மூடப்பட்டு விடுகிறது. ஒரு சில விளம்பரப் பலகைகள் பட்டணங்களில் காணப்பட்டன. அவற்றில் அநேகமானவை கையடக்கத் தொலைபேசி சேவைகளான மொபிட்டல் மற்றும் டயலொக் ஆகியவற்றின் விளம்பரங்களாகக் காணப்பட்டன. திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண நகர வீதிகளைத் தவிர ஏனைய பகுதிகளிலுள்ள வீதிகள் சீரற்றதாக இருந்தன. அதிகளவு பகுதிகளுக்கு இன்னமும் மின்சார வசதியில்லை. யுத்த காலப் பகுதியில் வடக்கில் சிறப்பாக வாழ்ந்தவர்கள் வெளியேறி விட்டனர். அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற மேற்கு நாடுகளுக்கு சென்று விட்டனர். இப்போதும் சிலர் மேற்காசியாவுக்கு சென்றுகொண்டிருக்கின்றனர். வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதவர்கள் இலங்கைக்குள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். மோதலின் போது 395000 பேர் இடம்பெயர்ந்திருந்த நிலையில், 80 ஆயிரம் தொடக்கம் 1 இலட்சம் பேர் வரை இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. யுத்தம் முடிவடைந்து இரண்டே வருட காலத்தின் பின்னரும் வெறுமையின் அடையாளங்களைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. 

மோதலில் இடம்பெயர்ந்து சென்றவர்கள் இன்னமும் சொந்த இடங்களுக்குத் திரும்பி வரவில்லை. அவ்வாறு திரும்பி வந்த சிலரில் வி.முருகானந்தன் ஒருவராவார். அவர் 125 ரூபாவிற்கு தேங்காயை விற்பனை செய்தார். கொழும்பிலும் பார்க்க இதன் விலை இரண்டு அல்லது மூன்று மடங்காகும். அதிக விலையாக இருக்கிறதே என்று கேட்ட போது, என்ன செய்வது இங்கு காய்க்கும் மரங்கள் இல்லை. மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என்று கூறினார். 2011 இல் 8 இலட்சம் உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்ததாக அரசாங்கம் கூறுகின்றது. 800 மில்லியன் டொலர் சம்பாத்தியம் கிடைத்ததாக அரசு தெரிவிக்கிறது. ஆனால், இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் பெரும்பாலானோர் வட இலங்கைக்கு செல்வதில்லை.

நான் மூன்று நாட்கள் அங்கு சென்றிருந்தேன். திருகோணமலையில் மூன்று அல்லது நான்கு சுற்றுலாப் பயணிகளையே கண்டேன். யாழ்ப்பாணத்திலிருந்து 113 கிலோமீற்றர் தூரத்தில் திருகோணமலை உள்ளது, நாட்டிலுள்ள அழகான கடற்கரையில் திருமலைக் கடற்கரையும் ஒன்றாகும். கணிசமான அளவு எண்ணிக்கையான இந்தியர்கள் ஆலயங்களைத் தரிசிக்க இங்கு வருகின்றனர். திருமலையின் நீலக்கடல் முன்னாள் சாய்வு நாற்காலியில் பிரகாசம் (90 வயது) அமர்ந்திருந்தார். தனது இரண்டு வயது பூட்டப் பிள்ளையான சிறுமி சைக்கிள் ஓடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தார். இலங்கை ரயில்வே துறையில் கிளீனராக இருந்த பிரகாசம் இப்போது பிரெஞ் கார்டின் என்று அழைக்கப்பட்ட கடற்கரை விடுதியின் உரிமையாளர். அதன் பெறுமதி சில இலட்சம் டொலர்களாகும். இந்த இடம் அவரின் மூதாதையரின் நிலமாகும். ஆனால், யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது அவர் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அவருடைய நிலம், 80 களில் இந்திய அமைதிகாக்கும் படையின் அங்கு தங்கியிருந்துள்ளனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் பிரகாசம் இந்த இடத்திற்குத் திரும்பி வந்து விடுதியை அமைத்துள்ளார். புதிய வசதிகளைக் கண்டுள்ள போதிலும் 30 வருட கால யுத்தத்தை மறப்பது அவருக்கு கடினமாக உள்ளது. 

வடக்கில் ஐந்து நட்சத்திரங்கள் ஹோட்டல்கள் பற்றிய கதை காணப்படுகிறது. உப்பாலை மற்றும் ஆலைத் தொழிற்சாலைகள் பற்றியும் பேசப்படுகிறது. மேற்குலகிற்குப் புலம்பெயர்ந்தவர்கள் அதிகளவில் திரும்பிவந்துள்ளனர். அங்கு அவர்கள் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டு பெருமளவானோர் திரும்பி வந்துள்ளனர். இல்லாவிடில் புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து வரும் பெருந்தொகை பணம் தெற்குடன் ஒப்பிடும் போது வடக்கில் அதிகளவு இருக்குமென்று ஏற்றுமதியாளர் ஒருவர் கூறுகிறார். 2011 இல் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 5.2 பில்லியன் பணம் என்று கப்ரால் கூறுகிறார். 2012 இல் இத்தொகை 6.5 பில்லியனாக அதிகரிக்குமென அவர் கூறுகிறார். வடக்கை மீளக் கட்டியெழுப்ப 31 திட்டங்களில் பில்லியன் டொலர்களுக்கும் மேல் முதலீடு செய்ய அரசாங்கம் திட்டமிடுகிறது. வீதி நிர்மாணத் திட்டங்களின் சீனக் கம்பனிகளின் பிரசன்னம் காணப்படுகிறது. புதிதாக நிர்மாணிக்கப்படும் வீடுகள் பாடசாலைகள், மருத்துவ மனைகளில் இந்தியர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். தற்போது 2005 குடும்பங்களைத் தவிர ஏனையவர்கள் இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த நிலையங்களை விட்டு திரும்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 

11 ஆயிரம் முன்னாள் போராளிகளில் சுமார் 3500 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். நகரமொன்றிலிருந்த ஆட்டோ சாரதி ஒருவர் தான் புலி உறுப்பினராக யுத்த காலத்தில் இருந்ததாகக் கூறினார். அவர் கிராமத்திலிருந்த தனது கடையில் எனக்கு தேநீர் தந்து உபசரித்தார். இப்போது முன்னாள் போராளிகள் பலர் ஆட்டோ சாரதிகளாகவும் கனரக வாகனம் ஓட்டுபவர்களாகவும் வீதி ஒப்பந்தக்காரர்களாகவும் பணிபுரிகின்றனர். 

பெயர்ப் பலகைகள் சுவரொட்டிகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் படமே காணப்படுகிறது. புலிகளைப் பற்றிக் கதைப்பதற்கு மக்கள் தயங்குகின்றனர். ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கம் என்ன செய்துள்ளது என்பது பற்றி அவர்கள் தயங்குகின்றனர். ஏனெனில், சகல இடங்களிலும் உளவாளிகளின் பிரசன்னம் இருக்குமென அவர்கள் அஞ்சுகின்றனர். தமிழர்களுக்கு எதிரான சமூக, பொருளாதார பாரபட்ச விவகாரம் இப்போது பேசப்படுவதில்லை. ஆயுதம் தரித்த படையினரை சகல இடங்களிலும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. நீண்ட காலத்திற்கு தங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது போனால் மீண்டும் தமிழ் மக்கள் மோதலில் ஏற்பட வேண்டிய நிலைமை ஏற்படுமென்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது. மக்களின் வாழ்வாதாரத்தை மீள ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கம் எதிர்நோக்கும் பாரிய சவாலாக இருக்கிறது. 2009 மே யில் நிலத்திற்கான யுத்தம் முடிவடைந்திருக்கக் கூடும். ஆனால், மனதில் உள்ள யுத்தமானது இல்லாமல் செய்யப்படுவதற்கு அதிகளவு செய்யப்பட வேண்டிய தேவைகள் காணப்படுகின்றன. 

இவ்வாறு, இலங்கைக்கு வருகை தந்த தனது நேரடி அனுபவங்கள் பற்றி ஈ.நரசிம்மன் ரெடீவ்.கொம் இணையத்தளத்தில் எழுதியுள்ளார்

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment