சிரியாவும் உலக யுத்தத்திற்கான விதைகளும்


சிரியாவில் தலையீடு செய்வதற்கு வழிவகுக்கும் ஒரு ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ அதிகாரத்தை கொண்டு தடுத்தமை அமெரிக்கா மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளிடமிருந்து  கடுங்கோபமான ஒரு பிரதிபலிப்பை தூண்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதரகம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டங்களுக்கு உலகளாவிய ஒப்புதலை கோரிவரும் “ மனித உரிமை பாதுகாவலர்களின் முன்னணி பிரதிநிதியமான சுசான் ரைஸ், வீட்டோ நடவடிக்கையை  வெட்கக்கேடான மற்றும் அருவருக்கத்தக்கதாக, முத்திரை குத்தியதோடு “ வருங்காலத்தில் இந்த முடிவிற்காக அவர்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும்  என்றும் அச்சுறுத்தினார்.

அந்த வாக்குகளை ஒரு கேலிக் கூத்தாகவும் அது ஐக்கிய நாடுகள் சபையை முடக்கி விட்டதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் குறிப்பிட்டார். ஒரு கால் நூற்றாண்டு அந்நாட்டில் காலனித்துவ அதிகாரத்தை அனுபவித்திருக்கும் பிரான்ஸும் அதன் ஏகாதிபத்திய நோக்கங்களைப் பின் தொடர்வதில் விலகிவிடாது அது போன்றே விரோத மனோபாவத்தோடு விடையிறுப்பைக் காட்டியது. அந்த இரட்டை வீட்டோவை ஐக்கிய நாடுகள் சபையின் மீது விழுந்த ஒரு அறநெறிசார் களங்கமாக  வெளியுறவுத்துறை மந்திரி அலன் ஜுப்பே அறிவித்தார். ரஷ்யாவும் , சீனாவும்  பின்னால் உதைக்கப்படவேண்டிய நாடுகள் என்று பாதுகாப்புத்துறை மந்திரி ஜெரார்டு லொன் கெயிட் சித்திரித்தார்.

ஆனால் லெபனான் , காசா மற்றும் மேற்குக் கரையில் இருந்த பாதுகாப்பற்ற ஆயிரக் கணக்கான மக்களைக் கொன்று அவர்களுக்கெதிராக அப்பிராந்தியத்தின் பிரதான அமெரிக்க கூட்டாளியான இஸ்ரேல் யுத்தங்களை தொடுத்த போது அதன் தாக்குதலைக் கண்டித்து கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை அமெரிக்க இராஜாங்க குழு தொடர்ந்து வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்த போது ஐக்கிய நாடுகள் சபை குழு முடங்குவது குறித்தோ அல்லது அறநெறிசார் களங்கங்கள் குறித்தோ கவலைகளின் எந்தவித வெளிப்பாடுகளையும் கேட்கமுடியவில்லை. 

இதற்கும் நீதிநெறி மற்றும் மனிதாபிமான உரிமைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வாஷிங்டன் மற்றும் மேற்கு ஐரோப்பிய தலை நகரங்களிலிருந்து வரும் சீற்றம் உலகை அதன் சொந்த நலன்களுக்காக மற்றும் நிதியியல் மேற்தட்டின் நலன்களுக்காக மறு ஒழுங்கமைப்பு செய்வதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயத்திற்கு பின்னால் அணிதிரண்டு நிற்க மாஸ்கோ பெய்ஜிங் தவறியமையின் மீது உள்ளது.

அமெரிக்க முனைவின் அடித்தளத்தில் இருப்பதாக கூறப்படும் கோட்பாடுகள் அதாவது முன்னாள் காலனித்துவ நாடுகள் மனித உரிமை மீறல்களுக்கு குற்றவாளியாக ஆகும் போது அவற்றில் தலையீடு செய்வதற்கும் அவற்றைப் பதவியிலிருந்து இறக்குவதற்கும் பிரதான ஏகாதிபத்திய சக்கிகளுக்கு உரிமை உண்டு என்பது முற்றிலுமான சர்வதேச விதிகளுக்கு முரண்பாடாக நிற்கின்றது. ஏனைய விடயங்களைப் போலவே அமெரிக்க நிதியியல் பிரபுத்துவம் அதன் போக்கில் கட்டளைகளை விதித்து வருகின்றது. ரஷ்யா மற்றும் சீன அரசுகளுக்கான காரணங்களும் மிகவும் தெளிவாக தெரிகின்றன. அமெரிக்கா மீண்டுமொரு முறை ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளின் பாதுகாவலாக காட்டிக் கொள்வதை மாஸ்கோ மற்றும் பெய்ஜிங் இரண்டும் அவற்றின் முக்கிய வர்த்தக மற்றும் மூலோபாய கூட்டாளிகளாக விளங்கும ஈரான் மற்றும் சிரியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நவ காலனித்துவ கைப்பாவை அரசுகளாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஓர் இடைவிடாத ஆக்கிரமிப்பு பிரசாரத்தை அமெரிக்கா நடத்தி வருவதாக காண்கின்றன. ரஷ்யாவின் பாகத்தில் அரேபிய உலகில் இருக்கும் அதன் ஒரு கூட்டாளியை இழப்பதென்பது ஆயுத உடன்படிக்கையில் பில்லியன் கணக்கான டொலர்கள் இழப்புகளையும் மத்திய தரைக் கடலின் துறை முகத்தை அதன் கப்பற்படை மட்டுமே அணுகுவதை மற்றும் இன்னும் கூடுதலான பில்லியன் கணக்கான டொலர்கள் முதலீடு செய்வதை இழப்பதோடு இணைந்துள்ளது.

சீனாவும் சிரியாவில் இதே போன்ற ஆனால், சற்றுக்குறைவான நலன்களைக் கொண்டுள்ளது. எவ்வாறிருந்த போதிலும் சீனாவின் முக்கிய எரிசக்தி  விநியோகஸ்தராக விளங்கும் ஈரான் அரசை கவிழ்த்து விட்டு பாரசீக வளைகுடாவிலிருந்து காஸ்பியன் வளைகுடா வரையில் நீண்டிருக்கும் அந்த எண்ணெய் வளம் மிக்க மற்றும் மூலோபாய முக்கியத்துவம் மிக்க பகுதியை உறுதியான அமெரிக்காவின் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய திட்டத்தின் பாகமாகவே சிரியா ஆட்சிமாற்றத்திற்கு இலக்காக்கப்பட்டுள்ளது என்பதை இரண்டு நாடுகளுமே உணர்ந்துள்ளன. வழக்கமாக பின் தொடரப்படும் இத்தகைய ஏகாதிபத்திய நோக்கங்கள் தற்போது மிகவும் வெட்ட வெளிச்சமாகி உள்ளன. அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஒரு நாட்டில் உள்நாட்டு யுத்தத்தை ஊக்குவித்து அந்த நாடு ஒடுக்குமுறையை பாவித்தால் மனித உரிமை மீறல்கள் என்ற வேஷத்தில் இலக்கில் வைக்கப்பட்ட அந்த ஆட்சி குற்றஞ்சாட்டப்பட்டு அது தலையீட்டிற்கான போலிக் காரணமாக பயன்படுத்தப்படுகின்றது. லிபியாவில் மக்களைப் பாதுகாப்பதற்காக என்ற பெயரில் விமானங்கள் பறக்கத்தடை விதிக்கப்பட்ட வலயத்தை அங்கீகரிக்கக் கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானத்திற்கு ரஷ்யாவும் சீனாவும் அவற்றின் வீட்டோவைப் பயன்படுத்த தவறி வாக்களிப்பைத் தவிர்த்த பின்னர் அங்கேயும் இதே உத்தி தான் பயன்படுத்தப்பட்டது. 

இந்த தீர்மானம் பின்னர் லிபியாவின் மீது நடத்தப்பட்ட இடைவிடாது குண்டு வீச்சோடு கூடிய அமெரிக்க நேட்டோவின் காலனித்துவ ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு ஒரு போலி சட்ட மறைப்பாக பயன்படுத்தப்பட்டது. முஅம்மர் கடாபியை கவிழ்க்கவும் இறுதியில் அவரைப் படுகொலை செய்யவும் கலகக்காரர்கள் என்று அழைக்கப்பட்டவர்களை சிறப்புப் படைகளும் உளவுத்துறை அமைப்புகளும் வழி நடத்தின. ஒபாமா, கிளிண்டன், ரைஸ் மற்றும் ஏனையவர்களால் கூறப்பட்ட மனிதாபிமான உரிமை உணர்வுகள்  சுடேடன் ஜேர்மனியர்களுக்கு எதிரான செக்கோஸ்லோகியோவின் குற்றங்களாக கூறப்பட்டதன் மீது நடந்த அட்டூழியங்களுக்கு அடால்ப்  ஹிட்லரின் வெளிப்பாடுகளோடு முற்றிலுமாக பொருந்தியுள்ளது.

இருந்த போதிலும் அவை ஒரு முக்கிய அரசியல் செயல்பாட்டிற்கு உதவுகின்றன. மனித உரிமைகள் சிலுவை யுத்தம் ஒரு ஊடகமாக உள்ளது. அதன் மூலமாக மத்திய தட்டு வர்க்கத்தின் மிகவும் வளமான பிரிவுகளைச் சேர்ந்த முன்னாள் இடது மற்றும் தாராளவாத உறுப்பினர்களின் ஒட்டு மொத்த சமூக அடுக்கும் புஷ் நிர்வாகத்தின் கீழ் தாம் தழுவிக் கொண்டிருந்த யுத்த எதிர்ப்பு நிலைப்பாட்டையும் கைவிட்டு ஒபாமாவின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ஏகாதிபத்திய யுத்தங்களுக்குள் பெரிதும் ஒருங்கிணைந்து கொண்டுள்ளன. 

செய்தி நிகழ்ச்சியில் வரும் நிகழ்ச்சியாளர் ராகேல் மேட்டோவ் இந்த அடுக்கிற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றார். ஒட்டு மொத்த உலகமும்  ஈரானுக்கு எதிராக அணிதிரண்டு கொண்டிருப்பதாகவும் அந்நாட்டின் அணுசக்தி திட்டங்களை தாக்குவதில் இஸ்ரேல் தலைமையேற்க வேண் டுமென ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பதாகவும் செவ்வாயன்று காலை இன்றைய செய்தி நிகழ்ச்சியில் தோன்றிய போது அறிவித்தார். மேட்டோவ் மற்றும் அவருடைய வகையறாக்களின் ஒட்டு மொத்த உலகம் என்பது உண்மையென கருதத்தக்க வகையில் பூமியின் மக்கள் தொகையில் சுமார் பாதியளவை உட்கொண்டிருந்த ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகியவற்றை விடுத்து மத்திய கிழக்கில் மற்றொரு இரத்தந் தோய்ந்த யுத்தத்தை எதிர்க்கும் உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களை அல்லாமல் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஐரோப்பாவின் முதலாளித்துவ அரசாங்கங்களை குறிப்பிடுகிறது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் பயன்படுத்தப்படும் பேச்சு வழக்கும் சர்வதேச கொள்கையின் நடைமுறையும் இரண்டும் மேலும், மேலும் முந்தைய 1914 மற்றும் 1939 ஆம் கால கட்டங்களின் அணுகுமுறைகளையும் குணாம்சங்களையும் எதிரொலிக்கின்றன. 

ஒரு நீடித்த உலக முதலாளித்துவ நெருக்கடியில் நிலைமைகளின் கீழ் மனிதஇனம் மீண்டு மொரு முறை உலக யுத்த அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. யுத்தத்திற்கு மூல காரணமான முதலாளித்துவ அமைப்பு முறைக்கு முடிவு கட்டக் கூடிய ஒரு சோசலிச வேலைத் திட்டத்தோடு அணிதிரட்டப்பட்ட சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே இந்த அச்சுறுத்தலுக்கு விடை கூறக்கூடிய ஒரேயொரு சமூக சக்தியாக உள்ளது.

நன்றி தினக்குரல்
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment