சிறிலங்கா: அருகி வரும் ஊடக சுதந்திரம்


சிறிலங்கா விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிடும் எந்தவொரு இணையத்தளமும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கடந்த நவம்பரில் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது தொடர்பாக சிறிலங்காவில் உள்ள ஊடகவியலாளர்கள் விசனம் அடைந்துள்ளனர். 

சிறிலங்கா அரசாங்கத்தின் கொள்கைகளையும், சிறிலங்கா அதிபர் தொடர்பாகவும் இணையத்தளங்கள் சில வெளிப்படையாக விமர்சித்த காரணத்தாலேயே சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறானதொரு திடீர் தீர்மானத்தை அறிவித்தது. 

சிறிலங்கா அரசாங்கத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து 100 இணையத்தளங்கள் வரை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை அனுப்பியிருந்த போதும், இவற்றுள் 50 விண்ணப்பங்கள் மாத்திரமே கடந்த வாரம் வரை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கா ஊடக அமைச்சின் செயலர் டீ.கணேகல தெரிவித்துள்ளார். 

இந்த இணையத்தளங்களைப் பதிவு செய்வதற்கு மறுத்ததற்கு அரசியற் செல்வாக்கே காரணம் என்று ஊடகவியலாளர்கள் அறிவித்த போதிலும், இதனை கணேகல நிராகரித்துள்ளார். 

'விண்ணப்பங்களை அனுப்பிய இணையத்தளங்கள் ஊடக அமைச்சால் கேட்கப்பட்ட முக்கிய தகவல்களை வழங்கவில்லை' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

'செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள் நேர்மையாகச் செயற்பட வேண்டும். அதற்குப் பதிலாக தனிப்பட்டவர்களை விமர்சிக்கும் நடவடிக்கையில் அவை ஈடுபடக் கூடாது' எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

'இணையத் தளம் ஒன்றை பதிவு செய்வதற்கான எந்தவொரு முறைசார் நடைமுறைகளும் காணப்படவில்லை. இதேபோன்று இணையத் தளம் ஒன்றை தடைசெய்வதற்கான சட்டரீதியான அதிகாரமும் காணப்படவில்லை' என lankafreedom என்ற இணையத்தளத்தை செயற்படுத்தும் கீர்த்தி தென்னக்கோன் கூறுகிறார். 

'இணையத்தளங்களைக் கண்காணிப்பதற்கான நெகிழ்வுப் போக்கான, சுயாதீன அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும்' எனவும் கீர்த்தி தென்னக்கோன் மேலும் தெரிவித்துள்ளார். 

கடந்த நவம்பரில் இணையத்தளங்களைத் தடை செய்வதற்கான அறிவிப்பை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட பின்னர், The Sri Lanka Guardian என்ற இணையத்தளம் சிறிலங்காவுக்குள் பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

'முன்னறிவித்தல் எதுவுமின்றி, இணையத்தளங்களைத் தடை செய்வதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டு சில நாட்களின் பின்னர் The Sri Lanka Guardian இணையத்தளம் தடைசெய்யப்பட்டது' என இதன் ஆசிரியர் என். இலங்கமுவ தெரிவித்துள்ளார். 

தடைசெய்யப்படும் இணையத்தளங்களை அவற்றின் பதிலி இணையத்தளம் மூலமே சிறிலங்காவில் உள்ளவர்கள் பார்வையிட முடியும். இது குறிப்பிட்ட இணையத்தளத்தின் போக்கை மோசமாக பாதிக்கிறது. 

'எமது புள்ளிவிபரங்களின் படி, எமது இணையத்தளத்தை தடைசெய்வதற்கு முன்னர் 500,000 இற்கு மேற்பட்ட மக்கள் அதனைப் பார்வையிட்டனர். ஆனால் இணையத்தளத்தை தடை செய்ததிலிருந்து இதனைப் பார்வையிடுபவர்களின் எண்ணிக்கை கணிசமானளவு குறைவடைந்துள்ளது என என்.இலங்கமுவ தெரிவித்துள்ளார். 

சிறிலங்கா அரசாங்கத்தால் இணையத்தளங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவித்தல் மேற்கொண்டபோது அதனை எதிர்த்து ஊடகப் பணியாளர்கள் விமர்சனங்களை மேற்கொண்ட போது சிறிலங்காவின் பிரதான கட்சியும் அவர்களுடன் இணைந்து கொண்டது. 

ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறு சிறிலங்கா அதிகாரிகளிடம் பிரதான எதிர்க்கட்சியின் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். 

ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பது தொடர்பாக 2011 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 178 நாடுகளில் சிறிலங்கா 163 ஆவது நாடாக உள்ளதாகவும், ஆனால் 2010 இல் சிறிலங்கா 158 ஆவது இடத்தில் காணப்பட்டதாகவும் உலக ஊடக சுதந்திர அமைப்பின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வழிமூலம் - ucanews.com
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment