பான் கீ மூனின் ஆலோசகர்கள் சிறிலங்காவைப் பாதுகாக்கின்றனரா? – இன்னசிற்றி பிறஸ் கேள்வி


இன்னசிற்றி பிறசுக்கு (Inner City Press) எதிராக ஐக்கிய நாடுகள் சபைக்கு பல்வேறு அநாமதேய தொலைபேசி அழைப்புக்கள் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்படும் அதேவேளையில், 'தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனத்துக்கு நிதி வழங்கி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் தங்களது பதில் என்ன?' என்று யூன் 07 அன்று சிறிலங்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் இன்னசிற்றி பிறசிடம் கேள்வி எழுப்பியிருந்தார். 

முரண்பாடுகள் ஏற்படும்போது, சுய பாதுகாப்பை உறுதிப்படுத்தி சீரான, இருதரப்புக்கும் இடையில் மன்னிப்பை வழங்குவதை தனது நோக்கின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ள இன்னசிற்றி பிறஸ், சிறிலங்கா பத்திரிகையாளரால் எழுப்பப்பட்ட வினாவுக்கு யூன் 07 அன்று தொடக்கம் இன்று வரை நேரடியாகப் பதிலளிக்கவில்லை. 

'சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் உள்ளடங்கலாக தீவிர சிங்களவாதிகளால் பழிசுமத்தப்பட்டுள்ள, நிதி வழங்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டை நான் நிராகரிக்கிறேன். மே 2009ல் சிறிலங்காவில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தை முதன்மைப்படுத்தி அது தொடர்பாக கேள்வி கேட்கின்றவர்களுக்கு எதிராக இவ்வாறான பழி சுமத்தப்படுகின்றது. இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயமாகும். 

ஐ.நாவுக்கான சிறிலங்காவின் ஆலோசகராக ஜெனரல் சவீந்திரா சில்வா நியமிக்கப்பட்டமை உள்ளடங்கலான சில செய்திகளை இன்னசிற்றி பிறஸ் வெளியிட்டபோது, இவ்வாறான செய்திகள் ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூன் மீது அதிருப்தியை ஏற்படுத்துவதாக இவரது நிர்வாக அதிகாரிகள் கருதுகின்றனர். இவ்வாறானவர்கள் தீவிர சிங்களவாதிகளின் கருத்துக்களை எதிரொலிப்பவர்களாக காணப்படுகின்றனர்' 

இங்கு குறிப்பிடப்பட்டதன் படி, பான் கீ மூன் செயலாளர் நாயகமாக பதவியேற்பதற்கு முன்னரும், பதவியேற்றதன் பின்னரும் அவருடன் மிக நெருக்கமாகப் பணியாற்றும் ஆலோசகர்கள் பலர் இன்னசிற்றி பிறசுக்கு புலிகள் அமைப்பு நிதி வழங்கியதாக குற்றம்சாட்டுகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் எடுக்கின்ற பல்வேறு முக்கிய சந்திப்புக்களில் புலிகளின் நிதிச் செயற்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளதாக வேறு சில ஐ.நா அதிகாரிகள் 'இன்னசிற்றி பிறசிடம்' தெரிவித்துள்ளனர்.

உயர்மட்டத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை கூட ஊடக சுதந்திரத்தில் தலையீடு செய்கின்றது.

' டee க்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டால், இவருக்கு எதிராக ஐ.நா தலைமையகம் நடவடிக்கை எடுக்கும். இவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டால் ஆறு ஆண்டு கால சிறைத்தண்டனையை எதிர்நோக்க வேண்டிவரும்' என சிறிலங்காவிலிருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகையின் யூன் 03 வெளியீட்டில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபை தொடர்பான செய்திகளை இன்னசிற்றி பிறஸ் வெளியீடு செய்வது தொடர்பிலான உத்தியோகபூர்வ அனுமதியை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என பான்கீ மூனின் ஊடகப் பிரிவால் கூறப்பட்டதன் பின்னர், யூன் 04 அன்று இதில் எவ்வித மாற்றமும் செய்யத் தேவையில்லை என இன்னசிற்றி அறிவித்திருந்தது.

ஒரு வாரத்துக்கு முன்னர், இது தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த கென்றொத், ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான ஆணைக்குழு, றொய்ரர் செய்தி நிறுவனத்தின் பிரதம ஆசிரியரான ஸ்ரீபன் அட்லர், Bloomberg இன் பிரதம ஆசிரியர் மத்தியூ வின்ங்லெர் மற்றும் யுனெஸ்கோ ஆகியவற்றுக்கு இன்னசிற்றி பிறஸ் தனது நிலைப்பாடு தொடர்பாக எழுதியிருந்தது.

சிறிலங்காவுக்கான ஐ.நா நிரந்தரப் பிரதிநிதி பாலித கோகன்ன, மற்றும் அதன் பிரதித் தூதர் ஜெனரல் சவீந்திர சில்வா போன்றோர் தொடர்பாக இன்ன சிற்றி பிறஸ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இதனை சிறிலங்கா அரசாங்கத்துக்குச் சார்பான ஊடகங்கள் இலக்கு வைத்துள்ளதாக 'இன்னசிற்றி பிறஸ்' தெரிவித்திருந்தது. 

இதுவரை மனித உரிமைகள் ஆணையகத்தின் றிச்சாட் டிக்கருடனும், அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் லூயிஸ் மொறேனோ ஒக்கம்போவுடனும் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடிய போதிலும், றொத், அட்லர் அல்லது றொய்ரர் மற்றும் வின்ங்லர் அல்லது Bloomberg ஆகிய எத்தரப்பிடமிருந்தும் எந்தவொரு பதிலும் கிடைக்கப்பெறவில்லை. ஐ.நா பத்திரிகையாளர் சங்கத்தின் (UN Correspondents Association) தலைவருக்கும் இன்னசிற்றி பிறஸ் விளக்கமாக அறிக்கையிட்டது. 

ஐ.நா பத்திரிகையாளர் சங்கத்தின் பிறிதொரு ஆசிரியருக்கும் இன்னசிற்ற பிறஸ் இது தொடர்பாக அறிக்கையிட்டது. 

இன்னசிற்றி பிறஸ் மீது சிறிலங்கா அரசாங்க ஊடகங்கள் தொடர்ந்தும் ஊடகப் போரை மேற்கொண்டு வருகின்ற போதிலும் இது தொடர்பில் தான் கவலை கொள்ளவில்லை என ஐ.நா பத்திரிகையாளர் சங்கத்தின் பிறிதொரு ஆசிரியர் தெரிவித்துள்ளார். 

ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கின்ற ஆணைக்குழுவிடம் காணாமற் போன சிறிலங்கா ஊடகவியலாளரான பிரஜீத் தொடர்பாக இன்னசிற்றி பிறஸ் வினவியபோதும், இதற்குப் பதிலாளிக்காது மழுப்பியுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள 'பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும்' நிகழ்வில் தான் தற்போது ஈடுபட்டுள்ளதால் பதிலளிப்பதற்கு நேரம் போதாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

சிறிலங்கா விவகாரத்தை மட்டுமல்ல சூடான், சிரியா, மேற்கு சகாரா, கொங்கோ மற்றும் ஐ.நா ஊழல் போன்றவை தொடர்பான செய்திகளை நாள்தோறும் வெளியிடும் ஊடகவியலாளர் ஒருவர் ஐக்கிய நாடுகள் சபை தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து வெளியிட முடியாது என தடைவிதிக்கப்பட வேண்டிய தேவையில்லை. 

ஆனால் இது பான் கீ மூனின் ஐக்கிய நாடுகள் சபை தற்போது ஐ.நா பத்திரிகையாளர் சங்கத்தின் பிரதிபலிப்பின் ஊடாகப் பார்க்கப்படுகின்றது. 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment