சரத் பொன்சேகாவின் தலைமையில் புதிய சிங்களவாத அணி?


சரத் பொன்சேகாவின்  விடுதலையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கம் வகிக்கும் கட்சிகளைத் தவிர மற்றைய பெரும்பாலான கட்சிகள் வரவேற்றிருக்கின்றன. இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த காலத்தில் அவர் வெளியிட்ட இனவாதக் கருத்துகளைப் புறந்தள்ளி ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவைத் தீவிரமாக ஆதரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தனும் வரவேற்றிருக்கின்றார். 

றுபான்சேகாவுக்கு விடுதலை என்பதை நினைத்துப் பார்க்கவம் விரும்பாதிருந்த அரசாங்கம் அவரை இப்போது விடுதலை செய்ததற்கும் இலங்கை அரசாங்கத்தின் கைரிய முறுக்கும் காய்நகர்த்தலை அமெரிக்கா மேற்கொள்வதற்கும் தொடர்பு இல்லை எனக் கூற முடியாது. தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம் காரணமாகப் பொன்சேகாவை ஜனாதிபதி விடுதலை செய்த போதிலும் அதிலும் அரசியல் செயற்படாமலில்லைந. பொன்சேகாவின் விடுதலைக்காக எதிர்க் க்டசித் தலைவரும் ஜனாதிபதியுடன் பேசினார். பாராளுமன்ற உறுப்பினர் ரிரான் அலஸ்ஸும் பேசினார். நிரான் அலஸ்ஸின்  கோரிக்கையை ஏற்று பொன்சேகாவை விடுதலை செய்ததாக ஒரு கட்சியை அரங்கேற்றியதன் மூலம் ஜனாதிபதி ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களுக்கு இலக்கு வைக்கின்றார். ரணில் செயல் வலு இல்லாதவர் என்று நாட்டுக்குக்காட்டுவது ஒன்று. எதிரணியைப் பிளவுபடுத்துவது மற்றது. 

பொன் சேகாவின் தலைமையில் புதிய அணியொன்று உருவாகித் தேர்தல் களத்துக்கு வர வேண்டும் என்பது அரசங்கத்தின் எதிர்பார்ப்பு. அப்படி அமைவது அரசாங்கத்துக்கு எதிரான வாக்குகள் பிளவுபடுவதற்கு வழிவகுக்கும் என்றும் அதன் மூலம் தங்களுக்கு வாய்ப்பான சூழ்நிலை உருவாகும் என்றும் அரசாங்கம் தரப்பினர் கருதுகின்றார்கள். இடம்பெறும் சம்பவங்களைப் பார்த்தால் அப்படியும் நடக்கலாம் போலத் தோன்றுகின்றது. 

ஐக்கிய தேசியக் கட்சி அதிருப்தியாளர்கள் பொன் சேகாவுக்கு நேசக்கரம் நீட்டுகின்றார்கள். இதேநேரம் பொன்சேகாவுக்குச் சிவில் உரிமையுடன் கூடிய விடுதலைப் பெற்றுக் கொடுக்காதது ஏன் என்று ரணில் அலஸ்ஸிடம் கேள்வி கேட்பதும் பொன்சேகா தொடர்ந்து சிறையில் இருப்பதையா ரணில் விரும்புகின்றார் என்று  அலஸ் மறுத்தான் கோÙள்வி போடுவதுமான வார்த்தைச் சமர் ரணிலுக்கும் பொன்சேகா அணிக்கும் இடையிலான இடைவெளியே விசாலிக்கின்றது. ஐக்கியதேசியக் கட்சி அதிருப்தியாளர்களுக்கும் பொன்சேகாவுக்கும் இடையிலான கூட்டு இரண்டு வடிவங்களை எடுக்கலாம். பொன்சேகாவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி அதிருப்தியாளர்களையும் உள்ளடக்கிய புதிய அணியொன்று உருவாகலாம். அல்லது பொன்சேகா ஐக்கியதேசியக் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டு ரணிலின் தலைமைக்குச் சவால் விடுக்கும் நிலை தோன்றலாம். இதில் எது நடந்தாலும் தமிழ் மக்களின் நம்பிக்கையைத் தோற்றுவிப்பதாக இருக்காது. 

ஐக்கிய தேசியக் கட்சி அதிருப்தியாளர்களைச் சிங்கள அதிருப்தியாளர்கள் என்று ஒரு ஊடகவியலாளர் குறிப்பிட்டது மேலோட்டமான வார்த்தைப் பிரயோகமல்ல. கரு ஜய சூரிய , சஜித் பிரேமதாச மற்றும் பண்டார போன்றவர்கள் சிங்களக் கடுங் கோட்பாட்டு நிலைப்பாட்டுடன் தங்களை இனங்காட்டுபவர்கள்  அதிருப்தியாளர்களுள் சிரால் லக்சதிலகவைத் தவிர மற்றவர்கள் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றி எந்தக் காலத்திலும் பேசாதவர்கள். இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில்சரத் பொன் சேகாவும் இனவாதக் கருத்துகளைத் தாராளமாக அள்ளி வீசியவர். எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து பார்க்கும் போது பொன் சேகாவை முன்னிலைப்படுத்தும் அணி சிங்களவாத அணியாக  இருப்பதற்கான சாத்தியக் கூறுகளே கூடுதலாக உள்ளன. 

சரத் பொன்சேகாவின் விடுதலை மூலம் தமிழ் மக்களுக்கு என்ன விமோசனத்தை எதிர்பார்த்துச் சம்பந்தன் வரவேற்றாரோ தெரியவில்லை. தமிழ் மக்கள் வெளிநாட்டுத் தலையீடு இடம்பெறும் வளர பொறுமை காக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் மட்டக்ளகப்பு மாநாட்டில் சம்பந்தன் கூறியது  சமகால யதார்த்தத்துக்குப் பொருத்தமற்ற  கூற்று. தென்னிலங்கையில் என்ன நடந்தாலும் எங்களுக்கு அக்கறை இல்லை என்று கண்ணை மூடிக் கொண்டிருக்காமல் தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுக்கு நேசக் கரம் நீட்டி இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை அடைவதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் பணியில் தலைவர்கள் தாமதமின்றி ஈடுபட வேண்டும். நின்று நிலைக்கும் அரசியல் தீர்வை அடைவதற்கு இதை விட வேறு வழி இல்லை. வெளிநாட்டுத் தலையீடு என்ற இலவசம் பழத்துக்காகப் பொறுமை காப்பது தற்கொலைக்குச் சமன்.

தினக்குரல்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment