வங்காலை தேவாலயப்படுகொலையின் 24 ம் ஆண்டு நினைவு தினம்


வங்காலைக் கிராமம் மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ளது. புனித அருள் ஆலயம் இங்குள்ள மக்களின் வணக்கத்தலமாக உள்ளது. 1985ஆம் ஆண்டு தை மாதம் ஆறாம் திகதி பூரணை தினத்தன்று பி.ப 12.30 மணியளவில் வங்காலைக் கிராமத்தினை இராணுவத்தினர் சுற்றி வளைத்துக் கொண்டனர். நள்ளிரவு தொடக்கம் மறுநாள் காலை 10.00 மணிவரை வெடிச்சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்தன.

மேரி பஸ்ரியன் குருவின் வதிவிடத்தை நோக்கிச் சுட்டுக் கொண்டு இராணுவத்தினர் சென்றனர். குருவானவர் தனது மேலங்கியையும் அணிந்து கொண்டு செபமாலையுடன் வெளியே வந்து கைகளை மேலுயர்த்தியவாறு ஆங்கிலத்தில் 'பிளீஸ்' என கெஞ்சும் போது அவரை நோக்கி இராணுவத்தினர் சுட்டனர். பங்குத்தந்தையுடன் நின்ற இரண்டு இளைஞர்களும் உயிரிழந்தார்கள். வெடிச்சத்தத்திற்குப் பயந்து ஓடிய சிலரும் பலியாகினர். சிலர் கோயில் மேல் மாடியில் ஏறி பதுங்கியிருந்தார்கள். இராணுவத்தினர் பங்குத் தந்தையின் உடலை இழுத்து வந்து கன்னியர் மட வாசலில் கிடத்தி புகைப்படங்கள் எடுத்தனர். இவற்றை கோயிலின் மேல்மாடியில் ஒழிந்திருந்த பொதுமக்கள் பார்த்தார்கள்.

இந்தச்சம்பவம் நடந்த பின்பு இராணுவத்தினர் ஒரே பாட்டும் கூத்துமாக இருந்தனர். பின்னர் இராணுவத்தினர் இறந்தவர்களை ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர். இதன் பின்னர் மக்கள் திரண்டு சென்று பார்த்த போது மேரி பஸ்ரியனின் இருப்பிடம் இரத்த வெள்ளமாக காணப்பட்டது,

இறந்த மேரி பஸ்ரியனின் உடலைத்தவிர மற்ற எட்டுப் பேரின் உடல்களை மன்னார் வைத்தியசாலையில் கொடுத்து விட்டு மேரி பஸ்ரியன் உடலை தள்ளாடி இராணுவ முகாமிற்கு கொண்டு சென்று விட்டனர். அவ்வேளையில் இந்த முகாமிலிருந்து எழும்பிய வழமைக்கு மாறான புகைமண்டலத்திலிருந்து அவரது உடல் எரிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

இச்சம்பவத்தில் மேலும் பல இளைஞர்கள் வெடிபட்ட காயங்களுடன் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு இரகசியமான முறையில் வைத்தியம் செய்யப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் வங்காலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டன


பெயர் வயது

01. மரியதல்மைடா தாசன் 26
02. சூசையப்பு மேன்பீரிஸ் 20
03. ஞானசேகரம் ரூபன்குரூய் 24
04. சவிரியான அந்தோணி 23
05. முனியப்பன் நீலமேகம் 28
06. சந்தியா அலக்ஸ்சான்டர்முறாவிலி 33
07. வனபிதா மேரி பஸ்ரியன் (பங்குத்தந்தை)
08. லுயிஸ்சம்மா பிராண்டா 60
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment