படகுத்துறை படுகொலை (02 ஜனவரி 2007)

இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகருக்கு வடகிழக்கே சுமார் 20 மைல்களுக்கு அப்பாலுள்ளது படகுத்துறைக் கிராமம். 1995 ம் ஆண்டு யாழ்ப்பாணம் மீது சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட பாரிய படைநடவடிக்கை காரணமாக யாழ்-நாவாந்துறை பகுதயிலிருந்து இடம்பெயர்ந்து வந்த 35 வரையான குடும்பங்கள் இக்கிராமத்தில் குடியேறி வாழ்ந்துள்ளனர். இவர்கள் கடற்றொழிலையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டமையால் இக்கரையோரக்கிராமம் இவர்களது தொழில் நடவடிக்கைக்கு ஏற்புடையதாக இருந்தது.

2007 ஜனவரி இரண்டாம் நாள் காலை இக்கிராமத்திற்கு மேலாக இலங்கை வான்படையின் வேவு பார்க்கும் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. சரியாக 9.30 மணியளவில் இவ்வான்பரப்பில் நுழைந்த இலங்கை வான்படையின் மூன்று கிபிர் விமானங்கள் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டன. கிராம மக்கள் மிகவும் நெருக்கமாக வாழ்ந்ததனாலும் விமானங்களிலிருந்து ஏவப்பட்ட குண்டுகள் அனைத்தும் குடியிருப்புப் பகுதி மீதே வீழ்ந்து வெடித்தது. இதனால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டு காயமடைந்தனர். வீடுகள் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் முழுமையாக அழிக்கப்பட்டன. பெண்கள் சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 37 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

இத்தாக்குதலின் மொத்தப் பாதிப்புக்களும் பொதுமக்களுக்கே ஏற்பட்டுள்ளது என்பதை மதத் தலைவர்களும் அப்பகுதி மக்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். பாதிப்படைந்த மக்களை இலங்கை போர்நிறுத்தக்கண்காணிப்புக் குழுவும் சென்று பார்வையிட்டுள்ளது. இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இப்படுகொலை நடவடிக்கையானது அப்பாவிப் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித நேயமற்ற ஒரு கொடூரத்தையே வெளிப்படுத்துகின்றது.

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம்

1. அ.ஆனந்தி -32
2. அ.விதுசன் -04
3. அ.இராஜகுமாரி -57
4. அ.சத்தியப்பிள்ளை -26
5. அ.குகன் -36
6. கு.தயாழன் -02
7. கு.வலஸ்தீனா -30
8. ப.ஜமேசன் -12
9. ச.மதுசன் -01
10. உதயகுமார் -55
11. உமாலினி -27
12. உதர்சிகா -01
13. வி.வினோயன் -04
14. வி.தர்சினி -08
15. வி.விஜிதா -35
Share on Google Plus

About திருமலைச்சீலன்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment