கிளாலிப்படுகொலைகள்(02 ஐனவரி 1992,29 யூலை 1993)


யாழ் குடாநாட்டினையும் அதன் வெளி நிலப்பரப்பையும் ஊடறுத்துச் செல்லும் பிரதான தரைவழி மார்க்கம் ஆனையிறவு ஆகும். 1990ஆம் ஆண்டு ஏப்பிரலுக்கு முன்னர் யாழ் குடாநாட்டிலிலுள்ள எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் போக்குவரத்து, விநியோகப் பாதையாக ஆனையிறவு ஊடான தரை வழிப்பாதையே இருந்தது. 1990ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மீண்டும் ஆரம்பமான போரின் விளைவால் தரைவழிப் பாதை மூடப்பட்டது.
இதன் பின்னர் யாழ் மக்களின் போக்குவரத்து நகர்வுகள்,உணவு விநியோக மார்க்கங்கள் என்பன ஆனையிறவுக்கு மேற்குப் புறமாக அமைந்துள்ள பூநகரி-கேரதீவு-சங்குப்பிட்டியினூடாக நடைபெற்றது. இப்போக்குவரத்து மார்க்கம் கடல் நீரேரியூடாக இருந்தது. மக்கள் பெருஞ்சிரமங்களிற்கு மத்தியில் கேரதீவுசங்குப்பிட்டியினூடான கடல்நீரேரியைக் கடப்பதற்கு 'பயணப் படகு' ஒன்றைப்(ferry)பயன்படுத்தினார்கள்.இதன்மூலம் விநியோகப் பொருட்களைக் கொண்ட பாரவூர்திகள, பலமான வாகனங்கள் என்பன நகர்த்தப்பட்டன.
மக்கள் பயணஞ் செய்த இப்பாதையும் 1991ஆம் ஆண்டில் பூநகரியை இராணுவத்தினர் கைப்பற்றியதனால் தடைப்பட்டது. பின்னர் யாழ் குடாநாட்டு மக்களின் போக்குவரத்துப் பாதையாக வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு ஊடான கடற்கரையோரப் பாதை இருந்தது. இதுவும் 1991ஆம் ஆண்டு 'ஒப்பறேசன் பலவேகயா-01' இராணுவ நடவடிககையின் மூலம் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதால், மக்களின் போக்குவரத்துப்பாதையும் தடைப்பட்டது.

குடாநாட்டு மக்கள் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு ஊடான கடற்கரையோரப் பாதைக்கும் ஆனையிறவுக்குமிடையில் அமைந்த கொம்படிப் பாதையினைப் பயன்படுத்தினர். இப்பாதை பிரயாணத்திற்கு ஒவ்வாத பாதையாகக் காணப்பட்டது. அப்படியிருந்தும் இதனூடாக மக்கள் பயணித்தார்கள். இயற்கையால் பிரயாணத்திற்கு ஒவ்வாத பாதையாக விளங்கிய கொம்படிப் பாதையினூடு கடுந்துன்பங்களுக்கு மத்தியில் மக்கள் பயணித்தார்கள். 'பலவேகய 02' இராணுவ நடவடிக்கை மூலம் இராணுவம் ஆனையிறவு, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு போன்றவற்றில் இராணுவத் தளங்களை தொடர் இராணுவ வேலிகளாக அமைத்ததால் மக்கள் பயணஞ்செய்த இக்கொம்படிப் பாதையும் தடைப்பட்டது.

இதன் பின்னர் யாழ் குடாநாட்டிற்கும் ஏனைய இடங்களுக்குமான வெளித்தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்ட நிலையில் எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிற்கான உணவு, மருந்து உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் எடுத்துச் செல்வதற்கான பாதை இல்லாது தவிதத் ஆயிரக்கணக்கான மக்கள், 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிளாலிக்கடல் நீரேரியினூடான கடற் போக்குவரத்தினை மேற்கொண்டார்கள்.

யாழ் குடாநாட்டையும், அதன் வெளி நிலப்பரப்பையும் ஊடறுத்து ஏறத்தாழ முப்பது மைல் உள்நுழைந்து, பொன்னாலைதொட்டு தலைமன்னார் வரை நீண்டு, பரந்த கடலால் நீரூட்டப்பட்டு இருந்தது யாழ்ப்பாணக் கடல்நீரேரி. கிளாலிக் கரையிலிருந்து மறுகரை செல்லும் ஆலங்கேணிவரை ஏறக்குறைய இருபது கடல்மைல்தூரங்கொண்ட இக்கடற்பிரதேசம் பயணங்களிற்கு, விநியோக மார்க்கங்களிற்கு ஒவ்வாததாக, அமைந்தாலும் பெருஞ்சிரமங்களின் மத்தியில் ஏறக்குறைய நான்கு மணித்தியாலம் பயணித்தே மறுகரையை அடைய முடியும். பகல் நேரங்களிற் பயணிக்க முடியாத நிலையிருந்து இரவு நேரங்களிலேயே பயணிக்கக்கூடியதாக எட்டு குதிரை வலுகொண்ட இயந்திரப் படகுகள் மூலம் தமது பிரயாணங்களை மக்கள் மேற்கொண்டனர்.

1992ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்போக்குவரத்து மார்க்கத்தை தடைசெய்யும் நோக்கில் தாக்குதல்களை கடல் நீரேரியின் இருபக்கமும் அமைத்திருந்த ஆனையிறவு இராணுவத்தளம் மற்றும் பூநகரி இராணுவத்தளம் ஆகியவற்றிலிருந்து மேற்கொள்ளப்பட்டது. மேலும் வான்படையும் இத் தடைநோக்கிற்கு உதவியது.

1993ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் திகதி கிளாலியிலிருந்து ஆலங்கேணிக்குச் சென்றுகொண்டிருந்த இயந்திரப் படகுகளில் இயந்திரப் பழுது காரணமாக நடுக்கடலில் நின்ற நான்கு படகுகளிலிருந்த பயணிகள் மீது மிக அண்மித்து வந்த கடற்படையினர் கூரிய ஆயுதங்களாலும், துப்பாகிகளாலும் தாக்கியதால் படகில்ப் பயணித்த அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் உட்பட முப்பந்தைந்து பேர் வெட்டப்பட்டும், சுடப்பட்டும் உயிரிழந்தார்கள். ஐம்பது பேர்வரையானவர்கள் காயங்களுடன் மறுநாள் காலை கரையினை அடைந்தார்கள்.

இச்சம்பவத்தில் உயிர் தப்பியவர்களில் ஒருவரான கந்தையா செல்லத்துரை (வயது 68) என்பவர் மறுநாள் கிளாலிக்கடலில் ஏற்பட்ட சம்பவங்கள் பற்றி ஊடகங்களுக்கு மறுநாள் அளித்த பேட்டியில் விரிவாக சம்பவத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.

1993ஆம் ஆண்டு ஜனவரி இரண்டு, யூலை இருபத்தொண்பது எனப் பல்வேறுபட்ட காலப் பகுதியிலுமாக 1993ஆம் ஆண்டு டிசம்பர் வரைக்கும் நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிளாலிக் கடற்பரப்பில் பயணித்தபோது, கடற்படையினரின் தாக்குதல்களினால் உயிரிழந்துள்ளதுடன், நூறிற்கும் மேற்பட்டவர்கள் அங்கவீனமானார்கள். மேலும்
நூற்றிஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். இச்சம்பவங்களில் கிளிநொச்சி மாவட்டக் கல்வி அதிகாரி உட்பட யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள், ஆசிரியர்கள், வெளிநாட்டிலிருந்து தமது உறவுகளைப் பார்வையிட வந்தவர்கள் எனப் பலதரப்பட்ட பொதுமக்களும் பாதிக்கப்பட்டார்கள்.

02.01.1993 - 29.07.1993 வரை கிளாலிப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்

இல பெயர் வயது

01. இ.இன்பராசா 47
02. இ.ஜெராட் 26
03. இளையதம்பி மகேஸ்வரி 51
04. இளையதம்பி சிவசீலன்; 25
05. இரத்தினம் சிறீறஞ்சன் 29
06. இரத்தினசிங்கம் எருமின் ஜசேக் இன்பராசா 47
07. ந.இராசன் 28
08. ந.கிளி 26
09. ந.இராசலிங்கம் 32
10. ந.நாகம்மா 60
11. ந.துரை கமம் 36
12. நா.பரிமளம் 37
13. க.கமலதாசன்; 17
14. க.செல்லத்துரை 46
15. க.சிவானந்தன்; 35
16. க.ஏகாம்பரம் கமம் 45
17. குப்புசாமி செல்லமுத்து 45
18. கா.சின்னத்தம்பி 60
19. கதிரமலை ஜெயந்தி 25
20. த.கமலராசன்; 10
21. த.பூபதி 28
22. த.றாகினி 17
23. தர்மராஜா
24. தம்பிஐயா ராகினி 18
25. தற்பரநாதன் முகுந்தன் மாணவன் 20
26. ம.இராசையர் 23
27. ம.யோசப்யூட 18
28. முத்தையா சந்திரலீலா 35
29. மதுரநாயகம் அமிர்தநாயகி 39
30. மி.ஜேசுதாசன் 19
31. மிக்கேல் ஜேசுதாசன் 19
32. முருகேசு சடராசர் 40
33. அ.அடைக்கலம் 63
34. அப்புக்குட்டி பரமசிங்கம் 38
35. யோசெப்யேசுராஜா யேசுநாயகம்தனிதாஸ் 18
36. தெ.கனகாம்பாள் 42
37. செ.ரூபன் ஞானசீலன் 19
38. செ.பாக்கியராசர் 30
39. செ.அருள்தாஸ் 21
40. செல்வராசா பாக்கியராசா 27
41. செல்லத்துரை சாந்தலிங்கம் 50
42. ஞானசூரியர் வின்சன்நிக்கிளஸ் 22
43. ஞானப்பிரகாசம் ஞானபாலன் 32
44. ஞானபாலன் 33
45. ச.பாலசுப்பிரமணியம் 54
46. சந்திரன் அருணானந்தி 29
47. சி.கனகலிங்கம்; 45
48. சின்னவன் கதிரவேலு 44
49. சிவலிங்கம் அன்னபூரணம் 40
50. சிவலிங்கம் செல்லத்துரை 45
51. சண்முகம் சபாநாதன் 65
52. ரவீந்திரன் இந்திரவதனா 41
53. ஏரம்பமூர்த்தி அசோகன் 36

காயமடைந்த்தவர்க்களின் விபரம்

இல பெயர் வயது

01. க.கணேந்திரநாதன் 63
02. கந்தையா செல்லத்துரை 68
03. கநத் சாமி மதியரசன்; 20
04. தவராசா தயாளினி 05
05. செல்வராசா குணசிங்கம் 40
06. செல்வரத்தினம் ஐங்கரன் 27
07. சின்னையா சந்திரகுமார் 20
08. வி.இன்பநாதன்; 37
09. விநாயகமூர்த்தி இன்பநாதன் 26

குறிப்பு :- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
Share on Google Plus

About திருமலைச்சீலன்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment