அளவெட்டி ஆச்ச்சிரமப் படுகொலையின் 22ம் ஆண்டு நினைவு - 26.10.1987

அளவெட்டிக் கிராமம் யாழ்.மாவட்டத்தில் வலிகாமத்தின் வடக்குப் பகுதியில் தெல்லிப்பளைப் பிரதேசசெயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது. அளவெட்டி அம்பனைப் பகுதியில் அளவெட்டி-மல்லாகம் ப.நோ.கூ.சங்கம் அமைந்துள்ள கட்டடத்திற்கு முன்பாக அளவெட்டி இந்து ஆச்சிரமம் அமைந்துள்ளது. அளவெட்டிப் பிரதேசத்திலுள்ள இந்த இந்து ஆச்சிரமம் இந்து மக்களின் வயோதிபர் மடமாகவும், கடந்த கால வன்செயல்களால் கடும் பாதிப்புற்ற இளஞ்சிறார்கள் கல்வி கற்கும் இடமாகவும் செயற்பட்டுக்கொண்டிருந்தது.

அமைதிப்படையாக வந்த இந்திய இராணுவத்தினர் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டிய வைத்தியசாலை, பாடசாலைகள், பல்கலைக்கழகம், பத்திரிகை அலுவலகம், என பொதுமக்களின் பயன்பாட்டிடங்களின் மீதும் தமது தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தது. இதுபோல முதியவர்கள், சிறார்கள் வசிக்கும் ஆச்சிரமம் மீதும் தனது தாக்குதல்களை மேற்கொண்டது.

1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இருபத்தாறாம் நாள் இந்திய இராணுவத்தினரின் தாக்குதல்கள் ஆரம்பித்ததன் பின்னர் அளவெட்டியில் அமைந்துள்ள இந்து ஆச்சிரமத்தின் மீதும் இந்திய இராணுவத்தினரின் முதலை என்னும் எம்.ஐ.24 ரக உலங்குவானூர்தியால் நடத்திய றொக்கட் தாக்குதலில் ஆச்சிரமத்திலுள்ள வயோதிபர்கள், சிறார்கள் உட்பட பதினைந்து பேர் உயிரிழந்தனர். பன்னிரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

அன்றைய தினம் இவர்களுடன் படுகொலை செய்யபட்ட அனைத்து பொதுமக்களையும் நினைவு கூறும் அதேவேளை இதே நாள் வேறு சம்பவங்களில் படுகொலை செய்யபட்ட அப்பாவி பொதுமக்களையும் நினைவுகூறுவோமாக. மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் தயவு செய்து தகவல்களை பின்னுட்டலில் சேர்த்துவிடவும்

26.10.1987 அன்று அளவெட்டி ஆசச்சிரமப் படுகொலையில் கொல்ல்லபப்பட்;டோர் விபரம்
01 இராசரத்தினம் கோமதி - மாணவி 15
02 இராசரத்தினம் ஞானகணேசன் - 21
03 குணசீலன் கோணேஸ்வரி - மின்சார அத்தியட்சகர் - 38
04 பத்மநாதன் செல்வச்சந்திரன் - மாணவன் - 12
05 தர்மலிங்கம் சிறீஸ்கந்தராசா - சாரதி - 25
06 துரைசிங்கம் மதி - குழந்தை - 1
07 தம்பிராசா சிறீபவன் மாணவன் 12
08 அமிர்தநாதர் நேசம்மா - 50
09 சின்னத்துரை தங்கலிங்கம் - வியாபாரம் - 47
10 சின்னத்தம்பி தம்பிராசா - தொ.பே.இயக்குனர் - 56
11 சின்னத்தம்பி; இரத்தினம் - வியாபாரம் - 47
12 சின்னையா இராசரத்தினம் - வியாபாரம் - 62
13 சிவகுருநாதன் சிவபாக்கியநாதன் - வியாபாரம் - 41
14 விஜயரத்தினம் பத்மராணி - குடும்பப்பெண் - 33
15 வினாசித்தம்பி ஐயாத்துரை - கமம் - 80
குறிப்பு :- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
Share on Google Plus

About முல்லைப்பிளவான்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
  Blogger Comment
  Facebook Comment

1 கருத்துரைகள் :

 1. http://www.livestream.com/vaakai
  வாகை தொலைக்காட்சி VAAKAI TV
  தமிழ்த்தேசியத்தின் உண்மை நாதம்-நீதியின் குரல் உண்மையின் முன் நடுநிலை என்பது கிடையாது

  http://livestre.am/1b7Vc

  ReplyDelete