வடக்கு, கிழக்கில் ஜனநாயகக் குரல் மீண்டும் எழுந்து விடக்கூடாது என்றளவில் இராணுவ ஆட்சி. இலங்கையின் வரலாற்றை நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். எல்லாள மன்னன் ஆட்சிசெய்த பொழுது அதற்கு எதிராக இந்த நாட்டில் போராட்டம் நடந்தது. துட்டகைமுனு மன்னன் எல்லாள மன்னனை போரில் தோற்கடிக்கபட்டதன் பின்னர் அந்த இடத்திலே ஒரு நினைவுச் சின்னம் பொறிக்கப்பட்டு அந்த வழியால்போகின்றவர்கள் அரசர்களாக இருந்தாலும் சரி அங்கே தங்களுடைய வணக்கத்தைத் தெரிவித்துவிட்டுத்தான் போவார்கள்.
பேச்சுவார்த்தைகளின் தோல்வியும் புதிய வழிகளின் அவசியமும்
எமக்கிடையே நாம் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என்றால் எதிரிகளிடம் சரணடைய நேரும் தீர்வுத்திட்டம், பேச்சுவார்த்தை, சமரசம், உடன்பாடு, ஒப்பந்தம்,ஒப்பந்த மீறல், ஒப்பந்தம் கிழித்தெறியப்படல், வட்டமேசை மகாநாடு, தெரிவுக்குழு, மீண்டும் பேச்சுவார்த்தை என இலங்கை அரசியல் அகராதியில் இச்சொற்தொடர்கள் தீர்வின்றி துச்சாதனன் கையில் நீளும் பாஞ்சாலியின் துகிலென நீண்டு செல்கின்றன. பாஞ்சாலியின் துகிலை முடிவிலியாய் நீள வைக்க பார்த்திபன் இருந்தான். ஆனால் ஈழத்தமிழரின் நிலையில் துகில் ஒரு முடிவுப் பொருள். இனியும் நீள அத்துகிலுக்கு இடமிருக்காது எனத் தெரிகிறது.
இந்தியாவிற்கு பெரும் தலைவலியை உண்டுபண்ணியுள்ள சிறிலங்கா
மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சிறிலங்காவிற்குள் மேற்கொள்ளப்பட்ட உள்ளக விசாரணை அறிக்கை பூசி மெழுகப்பட்ட ஒன்று என மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்ப் பிரிவினைவாதிகளிற்கு எதிராக 25 ஆண்டு காலமாகத் தொடரப்பட்ட யுத்தத்தின் இறுதிக்கட்டத்தை வரலாற்றிலிருந்து அழிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் எடுக்கப்படும் முயற்சிகளிற்கு இவ்வாரம் சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் எதிர்ப்புகளையும் சந்திக்க போகும் மகிந்த
வடக்கு, கிழக்கு இணைப்பு, மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரப் பகிர்வு என்று எதையுமே செய்ய முடியாது என்று திட்டவட்டமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கினால், தனது சொந்தக் கிராமத்துக்குக் கூட செல்ல முடியாது, கொழும்பிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியது தான் என்று கூறியுள்ளார்
இலங்கைத் தீவில் உள்ள தமிழ்த் தேசமும் சிங்களத் தேசமும் நலன்சார் அடிப்படையில் இலங்கை மீது தலையிடுகின்ற சர்வதேசத் தரப்புக்களை எவ்வாறாக நோக்குகின்றன என்பதைக் கடந்த பத்தியில் தெரிவித்திருந்தேன். அப் பத்தியில் சிங்களத் தேசியவாதமானது இலங்கையில் உள்ள தமிழ்த் தேசம் மற்றும் இந்தியா, மேற்குலகு உள்ளிட்ட தரப்புக்களை எவ்வாறாக எதிரிகளாகக் கருதுகின்றது என்பதையும் விளக்கியிருந்தேன்.
அரசாங்கத் தரப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான “தேனிலவு பேச்சுவார்த்தை'' இந்த வருடத்துடன் முற்றுப் பெற்றுவிடும் நிலையில் உள்ளது போல் தெரிகிறது. புதுவருடம் தொடங்கும் பொழுது இதுவரை பேச்சுவார்த்தை தேனிலவில் ஈடுபட்டிருந்த இரு தரப்பும் “மண முறிவு'' க்கு வந்துவிடுவர் போல் தெரிகிறது. இரு பகுதியி னரும் ஒருவர் மீது மற்றொருவர் விட்டுக் கொடுக்காது, சளைக்காது சொற்கணைகளை மாறி மாறி ஏவிக் கொண்டிருக்கின்றனர்.
சர்வதேசமானது தனது நலன்களைப் பேணுவதற்கான ஓர் கருவியாக மட்டும் தமிழ்த் தேசத்தினை பயன்படுத்த முனைகின்ற நிலையில், தமிழ்த் தேசத்தின் நலன்களும் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதனைக் கடந்த கட்டுரையில் தெரிவித்திருந்தேன்.அத்துடன் தமிழ்த் தேசத்திடம் சர்வதேச நலன்களுக்கு எதிராகச் செயற்படும் நோக்கம் காணப்படக்கூடாது எனவும் விளக்கியிருந்தேன்.
வடமாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் அதில் த. தே. கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ் சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ் சிவில் சமூகத்திடமிருந்தான பகிரங்க விண்ணப்பம் என்ற தலைப்பிலான மனுவொன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் அதில் த. தே. கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ் சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ் சிவில் சமூகத்திடமிருந்தான பகிரங்க விண்ணப்பம் என்ற தலைப்பிலான மனுவொன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தோல்விகளில் இருந்து இந்தியா பாடம் கற்கத் தவறினால்...? – இந்திய ஆய்வாளர்
தான் கண்ட தோல்விகளில் இருந்தும் நோர்வே பெற்றுக்கொண்ட தோல்விகளில் இருந்தும் இந்தியா பாடங்களைக் கற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டினால், சிறிலங்காவை நோக்கி இந்தியா ஒருபோதும் உறுதியான, பயனுறுதி மிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்பு மூலோபாயக் கொள்கையை வகுத்துக் கொள்ள முடியாது.
கேள்விக்குள்ளாகத் தொடங்கி விட்ட தமிழரின் இருப்பு.......?
தமிழர்கள் இன ரீதியாக, மொழி ரீதியாக அடக்கப்பட்ட நிலை இப்போது, புதிய வடிவிலான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தமிழ்மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த தாயகப் பிரதேசமான வடக்கிலும், கிழக்கிலும் கூட தமிழரின் இருப்பு இப்போது கேள்விக்குள்ளாகத் தொடங்கி விட்டது
சர்வதேசத்தின் நலன்சார் போட்டியில் எம் முன்னுள்ள சவால்களும் கடமைகளும்!
தமிழ்த் தேசத்தினை கருவியாகப் பயன்படுத்தி சர்வதேச நலன்கள் மட்டும் அடையப்பட்டு எமது நலன்கள் புறக்கணிக்கப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதற்காக சர்வதேச தரப்புக்களின் நலன்களுக்கு எதிராகச் செயற்படவேண்டிய நோக்கமும் எம்மிடம் இருக்கக்கூடாது. இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
விளங்கவில்லை என்பதை விளங்கிக்கொள்வது முக்கியமானது
பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தார். மாணவர்கள் விரிவுரையைக் கேட்டுக் கொண்டு இருந்தனர். ஒரு மாணவன் சேர்! விளங்கவில்லை என்றார்.பேராசிரியர் சிவத்தம்பி அந்த மாணவரைப் பார் த்து,விளங்கவில்லை என்பதையாவது நீ விளங்கிக் கொண்டாய். இங்கு பலர் விளங்கவில்லை என்பதைக்கூட விளங் கிக் கொள்ளவில்லை என்றார். பேராசிரியர் சிவத்தம்பி கூறிய விளங்கவில்லை என்பதை விளங்கிக்கொள்ளுதல் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் மிகவும் பொருத்தமுடையவர்களாக இருக்கின்றனர். மேலும்
மீறல்களுக்கு பொறுப்புக்கூறும் கடப்பாடு தலைமைகளுக்கு இல்லையா?
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்ற கருத்துகள் இதுவரை வெளிநாடுகளில் இருந்து தான் வந்து கொண்டிருந்தன. தமிழர் தமிழர் தரப்பில் இருந்து கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி தவிர, வேறெந்த கட்சியோ அமைப்போ இதுபற்றி ஒருபோதும் வாய் திறந்ததில்லை. ஆனால் இப்போது நிலைமை மாற்றமடையத் தொடங்கியுள்ளது. மேலும்
எமது பெண்களின் கண்ணீருக்கு நல்லிணக்க ஆணைக்குழு என்ன பதில் வழங்கியுள்ளது
ஜனாதிபதி நிதியமைச்சர் என்ற முறையில் இந்த அவையிலே இந்த வரவு செலவுத்திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றுகின்ற பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் துணிச்சலைத் தான் பாராட்டுவதாகவும் ஒரு வார்த்தை சொன்னார். ஜனாதிபதி தன்னுடைய உரையிலே தன்னுடைய தந்தையைக் குறிப்பிட்டு அப்பொழுது தலைவர்களாக இருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க, எஸ்.ஏ. விக்ரமசிங்க, பிலிப் குணவர்தன போன்றவர்களை நினைவு கூர்ந்ததுடன் அவர்களுடைய கொள்கைகள் தங்களை வழிநடத்தி நிற்பதாகவும் சபாநாயகருக்கு நினைவுபடுத்தினார். மேலும்
தள்ளாடும் பேச்சுவார்த்தை
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் நோக்குடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சமர்ப்பிக் கப்பட்ட அதிகாரப் பரவலாக்கம் குறித்த யோசனைகளில் மூன்று முக்கிய விடயங்களை தம்மால் ஏற்றுக்கொள்ள முடி யாது என அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற 15வது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது நாடாளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் தொடர் பில் அரசாங்கத்தரப்பில் கொடுக்கப்பட்ட அழுத்தங்களைத் தொடர்ந்து, இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சு வார் த்தையில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. மேலும்
சர்வதேசத்தின் நலன்சார் போட்டியில் இலங்கைத் தீவின் முக்கியத்துவம்
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில் தெரிவித்திருந்தேன். ஏற்கனவே எழுதியிருந்த கட்டுரைகளில் இலங்கையில் தமது நலன்களை நிலைநிறுத்துவதற்காக முனைகின்ற சர்வதேச நாடுகளை, அமெரிக்கா தலைமையிலான மேற்கு,இந்தியா, சீனா என முத் தரப்பாக பிரித்துக் காட்டியிருந்ததுடன், அந்தத் தரப்புக்கள் தத்தம் நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கும், முன்நகர்த்துவதற்கும் எவ்வாறான உத்திகளைக் கையாள்வர் என்பதனையும் விளக்கியிருந்தேன்.மேலும்
அபிவிருத்தி என்ற போர்வையில்........
தமிழ் மக்களை மீட்பதற்கான யுத்தம் எனக் கூறி தெருவுக்குக் கொண்டு வரப்பட்ட வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் இன்று தெருக்களிலேயே வாழ்கின்றனர். அபிவிருத்தி எனும் போர்வையில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் பறிக்கப்படுகின்றன. அவர்களது கலாசாரம் சீரழிக்கப்படுகிறது. அவர்களது மொழியறிவும் அழிக்கப்படுகிறது. சுதந்திர வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது. எதிர்காலம் பற்றிய நம்பிக்கையீனத்துடனேயே தமிழர்களது ஒவ்வொரு நாட்களும் கழிகின்றன. மேலும்
எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும் சிங்களம் ?
நல்லிணக்க முயற்சிகள், தேசிய நல்லிணக்கம் என்ற பதங்கள் இப்போது இலங்கையில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இவையெல்லாம் ஒரு பகுதி மக்களுக்கு அச்சுறுத்துகின்ற விடயங்களாக மாறத் தொடங்கியுள்ளன. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்னமும் அதிகாரபூர்வமான வெளியிடப்படாத சூழலில், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்ட அதன் முக்கிய பகுதிகளை வெளியிட்டிருந்தது.மேலும்
எந்தவொரு விடுதலைப்போரும் இரு பரிமாணங்களைக் கொண்டது. ஒன்று தளத்தில் நிகழும் போர், மற்றையது புலத்தில் நிகழும் போர். இங்கு புலத்தால் நிகழும் போர் எனக் குறிப்பிடுவது, சர்வதேசத்தில் மேற்கொள்ளப்படும் விடுதலைப் போருக்கு ஆதரவான பிரசாரங்கள் இலங்கை அரசின் பொய்ப் பிரசாரங்களை முறியடித்து அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்பிரசாரங்கள். மேலும்
விடுதலைப்புலிகளின் தலைமையை இல்லாமற் செய்வதில் அதிக கரிசனை எடுத்த மேற்குலகம்
அரசியற் பிரச்சினைகள், பொருளாதார நடவடிக்கைகள், மனித உரிமைச் செயற்பாடுகள், ஊடகத்துறை சார்ந்த பிரச்சினைகள் போன்றவற்றில் ‘சர்வதேச சமூகம்’ என்ற சொல்லாடலை மையப்படுத்தி உரையாடல்கள் நடக்கின்றன. மேலும், சர்வதேச சமூகம் என்ற கருதுகோளுடன் காரியங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.மேலும்
தனி ஈழம், தமிழ்நாட்டுப் பிரிவினையைத் தூண்டிவிடும் என்பது அபத்தம்! தலைவர் பிரபாகரன் பேட்டி, தொடர்ச்சி
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கொரில்லா யுத்தத்தில் ஈடுபடும்போது சிங்கள இராணுவத்தினரிடம் சிக்கிக்கொண்டால், ஒரு சிறு தகவலைக்கூட அவர்களிடம் இருந்து கறந்துவிட முடியாது.காரணம், ஒவ்வொரு வீரரும் தன்கூடவே கொடிய விஷமான சயனைட் நிரப்பப்பட்ட சிறு குப்பி ஒன்றை வைத்திருக்கிறார். தப்ப முடியாத, நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டால், உடனே அந்தக் குப்பியைக் கடித்து விஷத்தை விழுங்கி உயிர்த் தியாகம் செய்துவிடுவார்கள்! மேலும்
தமிழர்கள் பெருவாரியாக வாழும் யாழ்ப்பாணம் மீது ஜெயவர்த்தனாவின் விமானங்கள் வெறித்தனமாகக் குண்டுகளை வீச... சிங்களவர் படை நகருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தக் கிளம்பிவிட்டது என்னும் செய்தி நம்மை பதைபதைக்கச் செய்தது.
இருப்பினும், தொடர்ந்து விடுதலைப்புலிகள் நிகழ்த்திய வீராவேசமான எதிர்த்தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் சிங்கள இராணுவம் திணறிப்போய் பின்வாங்குகிறது என்னும் செய்தி சற்று நிம்மதியைத் தருகிறது. மேலும்
பிரபாகரனும் தமிழீழமும்
இறைமையுள்ள தனியரசு' என்ற கொள்கையும், அதை அடைவதற்காக தன்நம்பிக்கை தந்து விடுதலைப்போராட்டத்தை நடாத்திய தலைவர் பிரபாகரன் என்ற நாமமும், எப்போதும் விடுதலையின் மீதான நம்பிக்கையை கட்டிவைத்து வழிநடத்தும் என்பதுடன் தமிழ்மக்களை ஒன்றிணைக்கும் சக்தியும் இருக்கின்றது. அதன் வழி தொடர்ந்து நம்பிக்கையுடனும் தியாக உணர்வுடன் செயற்படுவதே விடுதலையை வென்றெடுக்க அவசியமானதாகும். மேலும்
‘உள்ளக இறைமை’ என்பதன் பொருள் !
ஒரு சமூகத்தின் நல்லாளுகை தொடர்பாக எழும் சவால்களை எதிர்கொள்ள இறைமை என்கிற கோட்பாட்டை வலுவானதொரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் இறைமை என்பதன் பொருள் என்ன என்பதை விளங்கி, ஒரு சமூகத்தின் ஆளுகை நடைமுறையை எவ்வாறு ஒழுங்கு செய்து கொள்ளமுடியும்?... மேலும்
அங்கீகாரம் தேடி அலையாத அதியமானுடன்.....
இன்று தேசியத்தலைவரின் பிறந்த தினம்
மீண்டும் ஒரு முறை அவரின் பிறந்ததினம் வந்துள்ளது. பக்கத்தில் இருப்பவனைக்கூட அடையாளம் காணமுடியாத அளவுக்கு அடர்ந்த இருளும், குழப்பங்களும் நிறைந்த இன்னொருபொழுதில் அவரின் பிறந்தநாள் வந்துள்ளது. இப்போது நினைக்கும் போதும் மலைப்பாகவும் வார்த்தைகளால் எழுதிவிட முடியாத அதிசயமாகவும்தான் அவர் திகழ்கிறார்
அதிசயமாக என்ற வார்த்தை ஏன் எழுதினேன் என்பதற்கு காரணமும் இருக்கின்றது. உண்மையில் அவர் ஒரு பேரதிசயம்தான். அவருடைய வாழ்வு முழுதும் நாம் கற்றுக்கொள்வதற்கு ஆயிரம் லட்சம் பாடங்கள் பரவிக் கிடக்கின்றன. மேலும்
அதிசயமாக என்ற வார்த்தை ஏன் எழுதினேன் என்பதற்கு காரணமும் இருக்கின்றது. உண்மையில் அவர் ஒரு பேரதிசயம்தான். அவருடைய வாழ்வு முழுதும் நாம் கற்றுக்கொள்வதற்கு ஆயிரம் லட்சம் பாடங்கள் பரவிக் கிடக்கின்றன. மேலும்
இதோ மாவீரர்நாளும் வந்துவிட்டது. மிகநீண்ட மாவீரர் பட்டியல் விரிந்து கிடக்கிறது. தெரிந்த தெரியாத பெயர்கள் என்றும். ஆண்கள், பெண்கள் என்ற பெயர்கள். உடல் சிதறும் கணம் தெரிந்தும் நிதானத்துடன் நடந்து இலக்கை நெருங்கி காற்றுடன் கலந்தவர்கள், கடலின் ஆழத்துள் நீள்துயில் கொள்பவர்கள், வானத்தில் வல்லமை நிகழ்த்திடும் பொழுதில் கரைந்தவர்கள்.
என்று ஐம்பெரும் பூதங்களுக்குள்ளும் கலந்தவர்களாக என்று ஆயிரம் விதமான அர்ப்பணிப்புகளின் பெயர்கள். எங்கள் தேசப் புதல்வர்களின் பெயர்கள். என்ன செய்யப்போகின்றோம் இந்த மாவீரர்நாளிலும்...?இந்த மாவீரர்நாளிலும் போய்நின்று மனம்உருகி பூதூவுவோம். மேலும்
Blogger Comment
Facebook Comment