Thursday, May 31, 2012

முற்றுமுழுதாக சர்வதேச சமூகத்தை நம்பி.....!

கிழக்கில் மட்டுநகரில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டின் நிறைவு நாளான நேற்று முன்தினம் அதன் தலைவரான இரா.சம்பந்தன்  அவர்கள் நிகழ்த்திய நீண்ட உரை உள்நாட்டுப் போரின் முடிவிற்குப் பிறகு மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், தமிழர் அரசியலை வழிநடத்துவதற்கு அந்தக் கட்சி கடைப்பிடிக்கத் தீர்மானித்திருக்கும் அணுகு முறைகளை விளக்கும் கொள்கைப் பிரகடனமாக அமைந்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழர்கள் எல்லோருக்குமான தலைமைச் சக்தி என்றும் அந்தத் தலைமைச் சக்தியின் தலைமைக் கட்சி தமிழரசுக் கட்சியே என்றும் வரைவிலக்கணம் ஒன்றை வகுத்தவாறு உரையை நிகழ்த்திய சம்பந்தன் அவர்கள் இதுவரையில் தங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கக்கூடிய அரசியல் அணுகுமுறைகளின் காரணமாக அதிகூடிய இராஜதந்திர அங்கீகாரம் சர்வதேச சமூகத்தினால் தமிழரசுக் கட்சிக்கே வழங்கப்படுகின்றது என்றும் அதன் வழியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அந்த இராஜதந்திர அங்கீகாரம் ஏற்புடையதாகவும் உரித்துடையதாகவும் கைவரப்பெற்றிருக்கிறது என்றும் ஒரு வியாக்கியானத்தைச் செய்திருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.


பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான காலகட்டத்தில் முதல் மூன்று தசாப்தங்களுக்கு தமிழ் மிதவாத அரசியல் தலைவர்களினால் வழிநடத்தப்பட்ட அமைதிவழிப் போராட்டங்களில் இருந்தும் அடுத்த மூன்று தசாப்தங்களுக்கு ஆயுதமேந்திய தமிழ்த் தீவிரவாத இயக்கங்களின் வழிநடத்துதலின் கீழான வன்முறைப் போராட்டங்களில் இருந்தும் முறையான பாடங்களைப் பெற்றுக்கொண்டு உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திலும் மாற்றம் கண்டிருக்கும் அரசியல் சூழ்நிலைகள் வேண்டி நிற்பதற்கு இசைவான முறையில் கொள்கைகளையும் தந்திரோபாயங்களையும் வகுத்துச் செயற்பட வேண்டியதே இன்று இருக்கக்கூடிய தமிழ் அரசியல் சக்திகள் சகலதினதும் தலையாய பணியாகும். இந்த வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த பணியை நோக்கிய திசையில் பயணம் செய்வதற்கு சம்பந்தன் அவர்கள் தலைமையிலான இன்றைய தமிழரசுக்கட்சி தன்னை எந்தளவுக்கு பயனுறுதியுடைய முறையில் தயார்படுத்தியிருக்கிறது என்ற கேள்விக்கு சந்தேகத்திற்கிடமின்றிய இரு பொருள்படுதலுக்கு அப்பாற்பட்ட பதில்களை அவரின் உரை திருப்திகரமான முறையில் வழங்கவில்லையென்பது எமது அபிப்பிராயமாகும். 




முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையில் புதியதோர் அத்தியாயத்திற்குள் பிரவேசித்திருக்கும் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தை தலைமையேற்று வழிநடத்திச் செல்லும் கட்சியாக தமிழரசுக் கட்சியை முன்னிறுத்தி வர்ணிக்கும் சம்பந்தன் அவர்கள் “எவ்வளவு தான் பலம்வாய்ந்ததாக இருந்தாலும், எவ்வளவுதான் தர்மத்தின்பாற்பட்டதாக இருந்தாலும் தமிழர்கள் இலங்கைத் தீவில் வன்முறை அரசியல் செய்வது என்றென்றைக்குமே நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கப்போவதில்லை என்பதும் இராணுவ பலத்தை மட்டும் அடிப்படையாகக்கொண்டு, உலகப் போக்கிற்கு ஒத்திசைவில்லாத அரசியல் கோட்பாட்டின் ஊடாகக் கட்டியெழுப்பப்படும் எந்தவொரு போராட்டமுமே நின்று நிலைக்காது என்பதுவுமே இதுவரையான போராட்ட வரலாறு உணர்த்தி நிற்கும் உண்மையாகும்’ என்று பிரகடனம் செய்திருக்கிறார்.





தங்களது தேச நலன்களை மாத்திரமே மையப்படுத்தி உலக ஒழுங்கை வகுத்துச் செல்லும் வல்லாதிக்க நாடுகளின் வியூகங்களைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற முறையில் மாத்திரம் தந்திரோபாயங்களை வகுத்துச் செயற்படுவதே விவேகமான மார்க்கம் என்பது சம்பந்தன் அவர்களின் இன்றைய நிலைப்பாடாக இருக்கிறது. அத்துடன், இந்தியாவின் தேசிய நலன்களுக்கு ஒத்திசைவாக அமையாத எந்தவொரு அரசியல் தீர்வையும் இலங்கையில் தமிழர்கள் பெறுவதை இந்தியா ஏற்றுக்கொள்ளாது என்பதே இந்தியத் தலையீடு தங்களுக்கு உணர்த்திய கட்டாய பாடம் என்கின்ற சம்பந்தன் அவர்களின் விளக்கம் இலங்கைத் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் தீர்வின் எல்லைவரையறை எவ்வளவு தான் விரிவானதாக இருந்தாலும் இந்தியாவின் அபிலாசைகளுக்கு இசைவான தீர்வை ஏற்றுக்கொண்டு வாழ்வதைத் தவிர தமிழர்களுக்கு வேறு வழியே இல்லை என்ற அர்த்தத்தில் அமைவதாக இருக்கிறது. இந்தியாவையும் சர்வதேச சமூகத்தின் வல்லாதிக்க நாடுகளையும் அந்நியப்படுத்தவோ அல்லது சங்கடப்படுத்தவோ கூடாது என்ற அவரின் அக்கறையின் எல்லை எதுவென்பது தான் உண்மையில் விளங்கவில்லை. 

"ஒற்றையாட்சி இலங்கை' என்ற கட்டமைப்பிற்கு வெளியே “ஐக்கிய இலங்கை’ என்ற வரையறைக்குள் தமிழர்கள் சுயமரியாதையுடனும் தன்னிறைவுடனும் வாழ்வதற்குத் தேவையான கூடுதல் பட்ச அரசியல் அதிகாரங்களை உறுதிப்படுத்தக்கூடிய ஆட்சியலகையே தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மைப் பிரச்சினைக்கான தீர்வாக எதிர்பார்ப்பதாகவும் அதன் மூலமாகவே தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையைப் பூர்த்தி செய்ய முடியுமென்றும் கூறுகின்ற சம்பந்தன் அவர்கள் புதிய அரசியல் சூழ்நிலைகளின் கீழ் அத்தகைய தீர்வைக் காண்பதற்கான வழிவகைகளைப் பொறுத்தவரை தனது அரசியல் அணி உள்நாட்டில் எத்தகைய செயன்முறைகளை முன்னெடுப்பதற்கு உத்தேசித்திருக்கிறது என்பதை தெளிவாக விளக்கவில்லை. "ஒன்றுபட்ட இலங்கை' என்ற அமைப்பிற்குள் தமிழர்களுக்கான அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க பேரினவாத ஆட்சியாளர்கள் ஒருபோதும் முன்வர மாட்டார்கள் என்பதைத் தாங்கள் சொல்லாமலேயே சர்வதேச சமூகம் அதன் அனுபவத்தின் மூலமாக உணருவதற்கு இடமளிக்க வேண்டுமென்று மாத்திரம் கூறிவிட்டு எதற்கும் தமிழ் மக்கள் பொறுமை காக்க வேண்டுமென்று சம்பந்தன் அவர்கள்  அடிக்கொரு தடவை வேண்டுகோள் விடுத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தமிழ் மக்களும் பொறுமை காத்து, இலங்கை ஆட்சியாளர் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க மாட்டார்கள்என்பதைச் சர்வதேச சமூகமும் அனுபவ வாயிலாக உணர்ந்த பிறகு பொறுமை எல்லையை கடக்கும் போது அமைதிவழி போராட்டம்... இது தமிழர்களுக்கு மீண்டும் கண்ணாடியில் காட்டப்படுகின்ற நிலவு.

இலங்கை நெருக்கடி மீது சர்வதேச சமூகத்தின் வல்லாதிக்க நாடுகள் பிரதானமாக அவற்றின் மேலாதிக்க நலன்கள் சார்ந்த காரணங்களின் நிமித்தம்  தீவிர அக்கறை காட்டுவதன் விளைவாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் எதிர்நோக்குகின்ற இராஜதந்திர ரீதியான நெருக்குதல்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு தங்களது சகல அணுகுமுறைகளையும் வகுப்பதிலேயே சம்பந்தன் அவர்கள் அக்கறை கொண்டுள்ளார் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியிருக்கிறது. அத்தகைய அணுகுமுறையை சம்பந்தனை பாராளுமன்றக் குழுத் தலைவராகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாளுவதில் முனைப்புக்காட்டிய சந்தர்ப்பங்களில் அதுகுறித்து நினைவுறுத்தப்பட்டபோது அரசாங்கத்தின் மீதான சர்வதேச நெருக்குதல்களை அடிப்படையாகக் கொண்டு முழுமையாக தங்களது தந்திரோபாயங்களை வகுப்பது மீண்டும் ஆபத்தான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை  அவரும் அவரது சகாக்களும் பல தடவைகள் வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டார்கள். ஆனால், தமிழரசுக் கட்சியின் மகாநாட்டில் அவர் ஆற்றிய உரை  அந்த ஒப்புதலுக்கு மறுதலையாகவே அமைந்திருக்கிறது. தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாத ஒரு சஞ்சலமான சூழ்நிலையில் தமிழ் அரசியல் சமுதாயம் இருக்கிறது என்பதை சம்பந்தன் அவர்களின் உரையில்  பல இடங்களில் இழையோடியிருக்கக் காணப்படுகின்ற உறுதியின்மை தெளிவாக வெளிக்காட்டுகிறது.

தினக்குரல்

சரத்திடம் சொல்லுங்கள் நாங்கள் முரண்பட்டால் புலி வந்துவிடும் என்று

ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷவிடம் இருக்கக் கூடிய பலம் பலவீனம் பற்றிய ஆய்வுகள் தமிழ்த் தரப்புக்கு அவசியமானதாக இருந்தாலும் அது பற்றி நாம் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. இதுதான் தமிழ்த்தரப்பில் இருக்கக் கூடிய மிகப் பெரிய பலவீனம். தன்னை எதிர்க்கக் கூடியவர்கள் அல்லது தனக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கக் கூடியவர்களை, இனங்கண்டு அவர்களை தன்னுடையவர்களாக மாற்றி விடக்கூடிய பலம் ஜனாதி பதியிடம் உண்டு.


இதற்கு வாசுதேவ நாணயக்கார, டி.யு. குண சேகர, திஸ்ஸ விதாரண, விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் நல்ல உதாரணங்கள். ஜனாதிபதியின் ஆலோசகர் என்ற அடிப்படை யில் வாசுதேவ நாணயக்கார போன்றவர்களைத் தன் பக்கம் இழுத்துக் கொண்ட ஜனாதிபதி, கூடவே அமைச்சுப் பதவிகளை வழங்கியும் சிலரைத் தன் வசப்படுத்தினார். இதுமட்டுமல்ல. தற்போது ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கூட, ஜனாதிபதிக்கு நெருக்க மானவர்தான்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரணிலை இறக்குவதற்கு அந்தக் கட்சிக்குள் இருந்த முக்கியமானவர்கள் முயற்சி செய்த போதிலும், அந்த முயற்சியில் இருந்து ரணிலைக் காப்பாற்றிய பெரும் பங்கு ஜனாதிபதி மகிந்தவுக்கு உண்டு. இதனால்தான் எப்போது அழைத்தாலும் ரணில் அலரி மாளிகைக்குச் செல்ல மறுப்பதில்லை. இதுபோல விமல் வீரவன்சவை ஜே.வி.பியில் இருந்து பிரித்தெடுத்தமை, சம்பிக்க ரணவக்கவுக்கு அமைச்சுப் பொறுப்புக் கொடுத்தமை என எல்லாம் இதன் பாற்பட்டதுதான். இது இவ்வாறு இருக்க அமெரிக்காவுக்கு எதிராகக் கண்டபாட்டில் கதைத்த விமல் வீரவன்சவின தும் சம்பிக்கவினதும் வாயை அடக்கி உஷ்! இனி மேல் கதைக்கக்கூடாது என்று கட்டளையிட்டதும் ஜனாதிபதிதான். இந்தக் கட்டளைக்குப்பின் மேற்கூறிய இருவரும் நா காப்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றனர்.

இதுதவிர, இந்தியாவை அடக்க சீனாவுடன் நட்புக்கொண்டது, இலங்கைக்குள் சீன ஊடுருவலுக்கு இடமளித்தமை என அனைத்தும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷவின் பலம் என்று கூறினால் அது மிகையன்று. இவ்வாறான அவரின் தனிப்பாதையில் தான், சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு முன்னதாக சரத் பொன்சேகாவின் மனைவி அனோமாவை அழைத்து ஜனாதிபதி மகிந்த கதைத்துள்ளார். சரத் பொன்சேகாவை விடுவிப்பதற்கு முன்னர் அனோமாவை ஜனாதிபதி சந்தித்தமை மிகப்பெரிய ராஜதந்திரம் என்றே கூறவேண்டும்.

அமெரிக்காவின் அழுத்தத்தால் பொன்சேகா விடுவிக்கப்பட்டிருந்தாலும், அனோமாவிடம் ஜனாதிபதி என்ன கூறியிருப்பார். அனோமா! நாங்கள் நெருங்கிய குடும்ப நண்பர்கள். சரத்திடம் சொல்லுங்கள். உடம்பை கவனிக்கு மாறு. சரத் விரும்பினால் எந்த நேரத்திலும் என் அரசில் அவருக்கு உயர் பதவி வழங்க முடியும். நாங்கள் சிங்க(ள) இனம். எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் புலி வந்துவிடும். ஆகையால் நாங்கள் என்றும் நட்போடு இருப்போம். இப்படித்தான் - இதைத்தான் ஜனாதிபதி சொல்லியிருப்பார். இல்லையா?

வலம்புரி

இலங்கையில் சிங்களவர்களே வந்தேறு குடிகள் தமிழர் அல்ல; சிறிதரன் எம்.பி


இலங்கை வரலாற்றில் சிங்கள மக்களே வந்தேறு குடிகள். தமிழ் மக்கள் அல்ல என்பதை பெளத்த பிக்குகள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும் .கடும் போக்கு கருத்துக்களைக் கூறி இலங்கையில் இனப்பிரச்சனை தீர்க்கவிடாமல் தடுக்கும் ஒரு தீய சக்தியாக இப்பெளத்த பிக்குகள் விளங்குகிறார்கள். எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.மேதானந்த தேரர் வடக்கு கிழக்குப் பகுதி தமிழருக்குச் சொந்தமில்லை என்று குறிப்பிட்டமை தொடர்பாக அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை வரலாற்றில் சிங்கள் பௌத்த பிக்குகளின் செயற்பாடு என்பது, இலங்கையை முற்று முழுதாக சிங்கள நாடு என காட்டுவதாகவே அமைந்துள்ளது. அவர்கள் எப்போதுமே, இலங்கை தமிழ் மக்களின் மண் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. அந்த வகையிலேயே அண்மையில், மோதானந்த தேரரின் கருத்தும் அமைந்துள்ளது.

வடக்குக் கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகப் பகுதி. இதனை கடும் போக்குடைய பெளத்த பிக்குகள் ஏந்தவெரு காலப்பகுதியிலும் ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்களுக்கு உண்மையாம வரலாறு தெரியாது.

இலங்கையில் வாழ்கின்ற தமிழருக்கு என்று தனியான வரலாறு இருக்கின்றது. ஆதியிலிருந்து இயக்கர் ,நாகர் என்ற இனம் இலங்கையில் வாழ்ந்ததாக ஆதாரங்கள் இருகின்றன. அவர்கள் தமிழர்களே.

ஆனால் சிங்கள் மக்களின் மூதாதையரான விஜயன் குழுவினர் இலங்கைக்கு தற்செயலாகவே வந்து குடியேறியுள்ளார்கள். அவர்களே வந்தேறு குடிகள். 

அண்மையில் கூட பொலநறுவை,காலி மற்றும் அநுராதபுர பகுதிகளில் சிவன் ஆலயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆதியிலிருந்து இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் தமிழர்கள் வாழ்ந்து வந்தமைக்கான சான்றாகவே காணப்படுகின்றது. இதனை பெளத்த பிக்குகள் மறைக்க முற்படுகிறான்றார்கள்.

அண்மைக்காலமாக தமிழர்களின் நிலங்களில் திட்டமிட்ட வகையிலே சிங்கள பெளத்த பிக்குகள் விகாரைகளை அமைத்து வருகின்றார்கள்.

சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் தொடர்பான கடும் போக்கு கருத்துக்களை கூறி இலங்கையில் இனப்பிரச்சனை தீர்க்கவிடாமல் தடுக்கும் ஒரு தீய சக்தியாக இப்பெளத்த பிக்குகள் விளங்குகிறார்கள்.

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக உண்மையான விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை உலகத்திற்கு பயங்கரவாதிகளாக காட்டி தமிழ் மக்களுக்கு உண்மையான நீதி கிடைக்காமல் தடுத்தவர்கள் இப்பிக்குகளே. இவர்கள் காலத்திற்கு காலம் இவ்வாறான கருத்துக்களை கூறிவருபவர்கள். என்று தெரிவித்தார்.


தேரருக்கு வரலாறு தெரியாது;மாவை 

வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பூமி அல்ல என்று கருத்துரைப்பதன் மூலம் வடக்குக் கிழக்கில் பெளத்த ஆதிகத்தை நிலைநிறுத்தி தமிழ் மக்களை அழிக்கும் முயற்சியில் மேதானந்த தேரர் வெளிப்படையாகவே ஈடுபட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கண்டனம் வெளியிட்டுள்ளார்.வடக்குக் கிழக்கு தமிழரின் பூமியல்ல அவ்வாறு உரிமை கோருவதற்கு தமிழர்களுக்கு எந்தவிதமான சான்றோ அல்லது உரிமையோ கிடையாது என ஜாதிய ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்த கருத்துத் குறித்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேதானந்த தேரர் முதலில் வரலாறு படிக்க வேண்டும். அவருக்கு இலங்கையின் வரலாறு தொடர்பாக முழுமையான அறிவு கிடையாது.

வடக்கு கிழக்குப் பகுதியானது தமிழர்களின் பூர்வீக வாழ்விடம். இதனை காலத்திற்கு காலம் எழுந்த வரலாற்று நூல்கள் எடுத்துக் கூறுகின்றது. இதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

தேரரின் கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய கடமை வரலாற்று ஆசிரியர்களுக்கு உள்ளது. எனவே இவிடயம் தொடர்பாக விரைந்து வரலாற்று ஆசிரியர்கள் பதிலளிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்ததோடு,

கே.எம்.டி சில்வா என்னும் சிங்கள வரலாற்று ஆசிரியர் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதி தமிழர் செறிந்து வாழும் பகுதி என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பகால அரசியலமைப்புச் சீர்திருத்த சட்ட மூலங்களின் ஆதரங்களிலே தமிழர்களின் பாரம்பரிய பூமியாக வடக்குக் கிழக்கு பகுதி என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியல் அமைப்பில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் செறிந்த குடிப்பரம்பலுடன் காணப்படுவதாக கூறுகின்றது.

இதனை எல்லாம் அறியாத தேரர் இவ்வாறான கருத்துக்களை கூறி மகிந்த அரசின் துணையுடன் வடக்குக் கிழக்கில் பெளத்த ஆதிகத்தை நிலைநிறுத்தி தமிழ் மக்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளா

Wednesday, May 30, 2012

வந்தேறுகுடிகள் வடக்கிற்கு உரிமை கோருவதா? வரிந்துகட்டுகிறார் மேதானந்த தேரர்-


வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச பிபிசிக்கு அளித்த செவ்வி குறித்து ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த நூற்றாண்டின் மிகநேர்மையான உண்மை இது என்று அவர் வர்ணித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது,பாதுகாப்புச்செயலர் கூறியுள்ளது மிகச்சரியான உண்மை. 


இந்த நாட்டின் இன, மத, மொழி வேறுபாடுகளை வெறுக்கும் மக்கள் இந்த அறிக்கைக்காக அவரைக் கௌரவிக்க வேண்டும். 


இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்த முனையும் ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான்.


வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம் என்று உரிமை கோருவதற்கு அவர்களுக்கு எந்த சான்றோ அல்லது ஆதரவுக் காரணமோ கிடையாது.


நன்கு அறியப்பட்ட இந்திய வரலாற்றாசிரியர் வேலகந்த சாஸ்திரி தனது நூலில், தமிழர்கள் ஏனைய இடங்களில் இருந்தே தென்னிந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார்.


யாழ்ப்பாணத்தில் காணப்படும் புதைபடிமங்கள், தென்னிந்தியாவின் புதைபடிமங்களை விடவும் தொன்மையானது என்று அவர் தனது நூலில் கூறியுள்ளார். 


இந்தநிலையில், இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய தமிழர்கள் எவ்வாறு வடபகுதியை தமது தாயகம் என்று உரிமை கோரமுடியும்? 


வடக்கு தமிழர்களின் தாயகம் என்பதற்கான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை.


கந்தகுடி, நாகதீப, காரைதீவு, நெடுந்தீவு ஆகிய இடங்களில் உள்ள கோவில்களை எடுத்துக் கொண்டால், முன்னர் பௌத்த வழிபாட்டு இடங்கள் அமைந்திருந்த இடங்களிலேயே அவை அமைக்கப்பட்டுள்ளன.


யாழ்ப்பாணக் குடாநாடும், அதனைச் சுற்றியுள்ள தீவுகளும் நாகதீப என்றே வசம்ப மன்னனின் காலத்தில் எழுதப்பட்ட வல்லிபுரம் தங்க நூலில் கூறப்பட்டுள்ளது. 



நயினாதீவில் கட்டப்பட்டுள்ள நாகபூசனி அம்மன் கோவில் முன்னர் அங்கிருந்த பாரிய பௌத்த வழிபாட்டு இடத்தின் மீது தான் கட்டப்பட்டுள்ளது. 


இந்தக் கோவிலில் இருந்து அகற்றப்பட்ட ஒரு கல்வெட்டு தற்போது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.


தொல்பொருள் திணைக்களம் இந்தக் கல்வெட்டின் மீது கவனம் செலுத்த வேண்டும்.


பராக்கிரமபாகு மன்னன் ஊர்காவற்றுறையில் ஒரு துறைமுகத்தை நிறுவி அதைப் பராமரித்ததாக இந்தக் கல்வெட்டு நிரூபித்துள்ளது. 


அப்போது அது ஊரதோட்ட என்றே அழைக்கப்பட்டுள்ளது. 


பொலன்னறுவ ஆட்சிக்காலத்தில் ஊர்காவற்றுறைத் துறைமுகம் சிங்களவர்களால் நிர்வகிக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில், வடக்கைத் தமிழர்கள் தமது தாயகம் என்று எப்படி உரிமை கோரமுடியும்? 


துணுக்காய் கல்வெட்டில் அனுராதபுர ஆட்சிக்காலத்தில் மருத்துவமனை இருந்ததாக கூறபட்டுள்ளது.


பொல்கந்துகம என்ற கிராமத்துக்காக இந்த மருத்துவமனை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 


இந்த மருத்துவமனை அதிகாரிகள் திருகோணமலை கல்லம்பற்றுக்கு பயணம் மேற்கொண்டது குறித்தும், அங்கு பிக்குணி ஆச்சிரமத்துக்கு நிலத்தை தானமாக வழங்கியது குறித்தும் இந்தக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.


இந்த ஆதாரங்கள், சிறிலங்காவில் எந்தப் பகுதியுமே தமிழர்கள் தமது தாயகம் என்று உரிமை கோர முடியாது என்பதை நிரூபிக்கின்றன.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மரணப் பொறியும் மாணிக்கத்தாரும்


வடக்கின் வசந்தம் கொஞ்சக் காலமாய் பலமாய் வீசியது. சகலவகை ஊடகங்களிலும் அது பெருமெடுப்பில் பிரபல்யப்படுத்தப்பட்டது.வடக்கின் வசந்தம் கொஞ்சக் காலமாய் பலமாய் வீசியது. சகலவகை ஊடகங்களிலும் அது பெருமெடுப்பில் பிரபல்யப்படுத்தப்பட்டது.

வாரத்தில் ஒரு நாளாவது வசந்தத்தை விரைவுபடுத்த, யாரோ ஓர் அமைச்சரோ, பிரதி அமைச்சரோ அல்லது யாரோ ஓர் அதிகாரியோ பலாலியில் இறங்கி "பஜிரோ' வில், யாழ்ப்பாணத்து அரச பரிவாரங்களுடன் பலாலி வீதியால், "யாபனே பட்டுண' வுக்கு ஊர்வலம் போனார்கள். நிலைமை போன போக்கைப் பார்த்து வடக்கின் வசந்தம் புயலாய் ஆகி யாழ்ப்பாணத்தைப் புதுப்பொலிவு பெறச்செய்யப் போகிறதோ என்று "யாழ்ப்பாணிகள்' மூக்கின் மேல் விரல் வைத்து வியந்தனர்.

"இப்போ கொஞ்சக் காலமாய் வசந்தக் காற்று அடங்கிப் போய் விட்டதோ'' என்று முணுமுணுத்தார் அடுத்த வீட்டு மாணிக்கர் அப்பு. வடக்கின் வசந்தக் காற்று பற்றி ஆஹா, ஓஹோ என்று பேப்பர்களிலும், றேடியோவிலும், ரீ.வியிலும் நாளும் பொழுதும் அமர்க்களப்படுத்தப்பட்ட ஆரம்ப நாள்களிலேயே, "இதென்னடா தம்பி, நாங்கள் அறிய சோளகம், வாடை, கொண்டல் என்று தான் காத்து வீசியிருக்கு. இதென்ன வசந்தம் வீசப்போகுது எண்ணீனம்'' என்று அப்பாவித்தனமாகக் கேட்டவர் இந்த மாணிக்கர் அப்பு.

வீச வெளிக்கிட்ட வசந்தக் காற்றின் முக்கிய குறி வடக்கின் தெருக்கள் தான். வடக்கின் வசந்தத்தைத் துரிதப்படுத்தும் அரச பரிவாரங்கள், மாநாடு, ஆலோசனைக் கூட்டம் என்றெல்லாம் நடத்த அடிக்கடி யாழ்ப்பாணத்துக்குப் பயணிக்க வேண்டியிருக்கும். தரை வழியாய்ப் போனாலென்ன, வான் வழிப்பயணம் என்றாலென்ன. யாழ்ப்பாணத்துக்குள் பயணிக்க எப்படியும் தரைவழியைத் தாசூன பயன்படுத்த வேண்டும்.

யாழ்ப்பாணத்து தெருக்களோ கரடுமுரடான நிலையில்; "யாழ்ப்பாணத்துக்குப் போயிட்டு வந்து நாரிப் பிடிப்பில் அவதிப்பட ஏலுமோ?'' என்ற முன்னெச்சரிக்கை யோசனையால் தான் வடக்கின் வசந்தத்தில் வீதிகள் திருத்தத்துக்கு முன்னுரிமை கொடுத்தார்கள் என்பது இந்த மாணிக்கர் அப்பு போன்ற ஆக்களுக்கு எப்படி விளங்கியிருக்கப் போகின்றது?

இருந்தாலும் மாணிக்கர் அப்புவின் முணுமுணுப்புக்கு ஒருபோதும் குறைச்சலில்லை. "வன்னிச் சண்டையிலை தப்பிப் பிழைச்சு, முகாம் சீவியத்திலை இருந்து விடுபட்டு, சொந்த இடத்துக்குப் போக முடிந்த, போக முடியாமல் போன அப்பாவி மனிசர்க்கு அவசியமான உணவு, உடை, தங்கியிருக்க வீடு என்ற மூன்று முக்கிய தேவைகளும் கிடைக்காது அந்தரிச்சு நிற்குதுகள். அந்த அப்பாவிச் சனங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்காமல், றோட்டுப் போடுறம், பாலம் கட்டிறம், போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுக்கிறம் என்று "ஷோ' காட்டிறது ஆண்டவனுக்கே அடுக்காது'', என்று மாணிக்கர் அப்பு என்னைச் சந்திக்கும் போதெல்லாம் தன் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்க்கத் தவறியதில்லை.

இருந்தாலும் பத்துப் பதினைந்து வருஷங்களாய் சுத்திச்சுத்தி யாழ்ப்பாண ஏரியாவிலையே வாழவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிப்போன எனக்கு, இந்த ஏரியா றோட்டுக்களும் திருத்தப்பட வேண்டியது அவசியம் தான் என்ற உணர்வு மனதில் நிலைகொண்டிருந்தது என்னமோ உண்மைதான்.

கதையே இனித்தான் ஆரம்பம்.

வதிவிடம் உரும்பிராய். தொழில் யாழ்ப்பாண நகரில். கட்டையில போற வயசாகிப் போனாலும் கடந்த பத்து ஆண்டுகளாய் பலாலி றோட்டில் என்ர கடாமுடா சைக்கிளில் உரும்பிராய்யாழ்ப்பாணம், என காலை மாலைப் பிரயாணம். முக வெய்யிலில் காலையில் தொழிலுக்குப் புறப்பட்டால் வேலை முடிந்து வீட்டுக்குப் புறப்பட மாலை ஏழு மணிக்கு மேலாகிவிடும். வேலை நேரம் அப்படி தனியார் துறை. நிர்வாகத்தை அனுசரித்துப் போக வேண்டும்.

வடக்கின் வசந்தம் பலாலி வீதியை எட்டிப் பார்த்ததோடுதான் எனக்கும் பிரச்சினை ஆரம்பம். அத்தனை காலமும் றோட்டு குன்றும் குழியுமாய் இருந்தும், எனது கடாமுடா சைக்கிளுக்கு இருந்திருந்து தடிமன், காய்ச்சல் என்று வந்தும் கூட காலை மாலைப் பயணத்தில் பெரும் சிக்கல் எதுவும் ஏற்பட்டதில்லை. இருந்தாலும் எல்லை மதில்கள் உள்நகர்த்தப்பட்டு வீதியின் இருபுறமும் அகலப்படுத்தப்பட்ட போது "காப்பெற்' றோட்டிலை சைக்கிள் உழக்கும் கனவு என் மனத் திரையில் பரந்து விரிந்ததும் பொய்யல்ல.

சரி, எல்லை மதில்களெல்லாம் உடைக்கப்பட்டு உள்நகர்ந்து மீண்டும் மதிலாகிப் புதுப்பொலிவு பெற்றாகிவிட்டது. இந்த "ஊட்டு'க்குள் கதியால் வேலியாயிருந்த பல எல்லை வேலிகளும் சிமெந்து மதிலாக சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டன. றோட்டின் எல்லை நிர்ணயம் முடிந்து "பக்கோ'' மெஷினும் றோட்டுக் கரைகளைத் தோண்டத் தொடங்கியது. றோட்டின் இடதுபுறம் குறிப்பிட்ட அளவு ஆழத்துக்கு மண் அகழ்வு. பயணிக்கப் பயங்கரமாயிருக்கின்ற போதிலும் என் மனது சொல்லிக் கொண்டது, "பொறு, பொறு', "காப்பெற்' றோட்டில் இருபது நிமிடத்தில் வீட்டிலிருந்து கந்தோர், கந்தோரிலிருந்து வீடு.

வடக்கின் வசந்தம் பலாலி வீதியில் வீசத் தொடங்கிய காலத்திலிருந்து ஆறுதல் பட்டுக் கொண்டு பயணித்தேன் இப்போது றோட்டு தன்னைச் சுருக்கிக் கொண்டது. தெரியும் தானே, பலாலி றோட்டிலை அதுவும் இண்டைய காலகட்டத்தில் வாகனப் போக்குவரத்து எவ்வளவு தூரம் அதிகரிச்சு இருக்குதெண்டு. காலை வேளையிலை ஒருமாதிரி அங்கை இஞ்சை "சிலோப்பண்ணி' ஒருமாதிரி எந்த வில்லங்கமும் இல்லாமல் கந்தோருக்குப் போய்ச் சேர்ந்திடுறன். ஆனால் பின்னேரப் பாடுதான் பெருங் கஷ்டம். போதாததுக்கு றோட்டு லயிற்றும் இடைக்கிடை இல்லை. சிலவேளை முழு லயிற்றும் எரியாது.

பலாலி றோட்டிலை, யாழ்ப்பாணத்திலை இருந்து கோண்டாவில் டிப்போ வரைக்கும் ஒரு மாதிரிப் போயிடலாம். அங்காலை தான் தொடங்குது மரணப்பொறி முந்தி இருந்த றோட்டின்ரை முக்கால் வாசிப் பகுதியில தான் இப்போது வாகனங்களின்ர போக்குவரத்து.

 றோட்டின்ரை இடக்கைப் பக்கம் நீளத்துக்கு ஆழத் தோண்டிய பள்ளம் அதிலை "கிறேசர்' மண்போட்டு நிரப்பி றோட்டு மட்டத்துக்குச் சமன்படுத்துவதுதான் திட்டம். ஆனால் றோட்டுக் "கான்' கிண்டி மூன்று நாலு மாதத்துக்கு மேலாச்சு. இன்னமும் பள்ளம் நிரப்பப்படுவதற்கான அறிகுறியொன்றையும் காணயில்லை.

அந்த நேரத்திலை பலாலிப் பக்கமிருந்து வாகனங்கள் ஏராளமாக வருமோ எண்டு கேக்க நினைக்கிறியள். சினிமாப் பகிடி மாதிரி "வரும்; ஆனா வராது'' எண்டு பதில் சொல்ல நான் தயாராய் இல்லை வரும்; ஒண்டுக்குப் பின்னாலை ஒண்டு, லொறி, டிரக்டர், ஹைஏஸ், கார், மோட்டார்சைக்கிள் எண்டு முன்னாலையும் வரும்; என்னை விலத்திக் கொண்டு பலாலிப் பக்கமும் போகும். டிப்போ வாசலிலை இருந்து கற்பகப் பிள்ளையார் கோயில் தாண்டும் வரைக்கும் என்ரை பாடு "அந்தோ பரிதாபம்' நிலைதான்.

சரி, றோட்டிலை போற வாற வாகனங்களை என்னாலை தடுத்து நிறுத்த இயலுமோ? என்ன; போகட்டும். முன்னாலை இருந்து வாற வாகனங்களின்ரை "றைவர்' மார், லைசென்ஸ் எடுத்த ஆக்கள்தானே? எதிர்ப்பக்கம் இருந்து வாற வாகனங்களைச் செலுத்தி வாறவைக்குத் தங்கடை வாகனங்களின்ரை "ஹெட்லைற்' வெளிச்சம் கண்ணைக் கூச வைக்கும் எண்டு தெரியாதோ? தங்கடை வாகனங்களின்ர "ஹெட்லைற்றை' "டிம்'மாக்கி உதவினாலென்ன? சரி, எது எப்படியோ போகட்டும்.

 வசந்தக் காற்று வீசுகிற நேரம் வீசட்டும். பலாலி றோட்டாலை விக்கினம் எதுவுமில்லாமல் கந்தோரிலை இருந்து வீடு போய்ச் சேர வழி என்ன எண்ட கேள்விதான் இப்போதெல்லாம் மனசைப் போட்டுக் குடையுது.

மனம் கேளாமல் இந்த றோட்டு வேலையோடை சம்பந்தப்பட்ட ஒரு சிலரிட்ட இந்த "கிலிசைகேட்டின்ரை' உள்அந்தரங்கம், "றோட்டுக்கான்' தோண்டி நீண்டநாளாய் நிரவுப்படாமல் இழுபறிப்படுகிறதின்ரை ரகசியம் என்ன எண்டு கேட்டுப் பார்த்தேன். ம்... ஒருத்தரும் மூச்சு விடுகினமில்லை.

 இன்னும் ஒரு சிலபேர் ஆளை ஆள் சாட்டுகினம். ஆனால் ஒருத்தரிட்டை இருந்தும் உருப்படியாய் எந்தப் பதிலையும் தெரிஞ்சுகொள்ள முடியவில்லை. அதுதான் உங்களைக் கேட்கிறேன்? வடக்கின்ரை வசந்தத்தின்ரை கெதிதான் என்ன?
உதயன்

இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் போனால் போர் வெடிக்கும் என்று எச்சரிக்கும் அமெரிக்கா..............?


தமிழீழத் தனியரசை உருவாக்குவதற்கான மூன்று தசாப்தகால ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்தது. இந்தப் போர் முடிந்த மூன்றாவது ஆண்டு நிறைவு அண்மையில் மூன்று விதமாக முன்னெடுக்கப்பட்டது. போர் முடிந்த பின்னர், முள்ளிவாய்க்கால் பேரழிவின் மீதான சர்வதேச கவனம் தொடர்ந்து அதிகரித்து வருவதை இந்த ஆண்டு இடம்பெற்ற நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

முதலாவது நிகழ்வு- அரசாங்கம் நடத்திய வெற்றிக் களிப்புக் கொண்டாட்டங்கள், இராணுவ அணிவகுப்புகள். இது வழக்கமானது தான். இரண்டாவது நிகழ்வு- புலம்பெயர் நாடுகளிலும் இலங்கையிலும் போர்க்குற்ற நாளாகவும், துக்க நாளாகவும் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இதுவும் கூட வழக்கமானதொன்று தான். மூன்றாவது தான் மிக முக்கியமானது- அது ஆக்கபூர்வமான வழியில் தீர்வுகளைத் தேடும் வகையிலானது. முதல் இரண்டுமே ஏதோ ஒரு உணர்வை வெளிக்காட்டும் வகையிலானதாக இருந்தது. ஆனால், இனங்களுக்கிடையிலான நீண்டகாலப் பிளவை அது துலாம்பரமாக காட்டுவதாகவும், அந்தப் பிளவு இன்னமும் நிரவப்படவில்லை என்பதை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. ஒரு இனம் போர் வெற்றியின் மீது களித்துத் திளைத்திருக்க, இன்னொரு இனம் துக்கத்தில் ஆழ்ந்திருந்தது. 

மூன்றாவது விவகாரம் சற்று வித்தியாசமானது. 

அதாவது, சர்வதேச அளவில் ஊடகங்களிலும், கருத்தியல் ரீதியாகவும் முன்னெடுக்கப்பட்ட ஒரு பிரசாரம். சர்வதேச ஊடகங்கள் முள்ளிவாய்க்கால் பேரழிவை மறக்கவில்லை என்பதை கடந்த சில வாரங்களில் தமிழ் அல்லாத ஊடகங்களில் வெளியான கட்டுரைகள், செய்திகளில் இருந்து உணரமுடிந்தது.

நோர்வேயில் ஒரு கருத்தரங்கும், லண்டனில் ஒரு விவாதமும் நடத்தப்பட்டன. நோர்வேயில் நடந்த கருத்தரங்கில் எரிக் சொல்ஹெய்ம் பங்கேற்றிருந்தார். அவர் தனது உரையில் வலியுறுத்திய சில விடயங்கள் முக்கியமானவை. 

-இலங்கைத்தீவில் இன்னொரு தனிநாடு அமைவதற்கு அனைத்துலக சமூகம் ஆதரவு அளிக்கப் போவதில்லை. 

-வடக்கு, கிழக்கில், இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுயாட்சி அதிகாரங்களை ஒத்ததான அரசியல் தீர்வுக்கு அனைத்துலக மட்டத்தில் பெருமளவு ஆதரவு நிலவுகின்றது. 

-மீண்டுமொரு ஆயுதப் போர் தொடங்குமானால் அனைத்துலக ஆதரவு துளியளவுக்கும் இல்லாமல் போய்விடும். 

-அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள ஆட்சியாளர்களே தமிழ்மக்களை நோக்கி நேசக்கரம் நீட்ட வேண்டுமென்ற பரவலான கருத்து அனைத்துலக மட்டத்தில் நிலவுகின்றது. 

-போரின் இறுதிக்கட்ட அவலங்களுக்கான பொறுப்பு கொழும்பிடம் உள்ளது. 
-இலங்கைத்தீவின் தற்போதைய சூழ்நிலையில் மாற்றங்களைக் காண்பதற்கு காலம் எடுக்கும். அனைத்துலக சமூகம் அக்கறை செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் இடங்களில் இல்லை.  

இவை அவர் முன்வைத்த முக்கியமான விடயங்கள். 

ஒருபக்கத்தில் தமிழீழத்தை உருவாக்க ஐ.நா தலையீட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற குரல் தமிழ்நாட்டில் வலுப்பெற்று வருகிறது. இது சாத்தியமானதொன்றா என்ற கேள்வி இருந்தாலும், இந்தக் குரலுக்கு தமிழ்நாட்டைத் தாண்டியும் ஆதரவு உள்ளதென்பதை கடந்தவாரம் உணரமுடிந்தது. ஆனால் இது யதார்த்தமற்றது என்பதே சொல்ஹெய்மின் கருத்து. 

இந்தியா, சீனா ஆகிய இரண்டுமே பிரிவினை பற்றி அதிகம் அச்சம் கொண்டுள்ளன. 

இந்தியாவுக்கு வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அச்சுறுத்தல் வெளியே தெரிந்தாலும் சீனா பற்றிய அதிகம் வெளியே தெரிய வருவதில்லை. திபெத் விவகாரம் மட்டும் தான் சீனாவுக்குத் தலையிடி என்றில்லை. பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியிலும் பிரிவினைப் பிரச்சினையை சீனா எதிர்கொள்கிறது. இலங்கையில் தனிநாடு ஒன்றை உருவாக்க முனைவது அல்லது அதற்கு ஆதரவளிப்பது தமது நாடுகளில் பிரிவினையை ஊக்கப்படுத்தும் என்ற கருத்து இந்த நாடுகளுக்கு வலுவாக உள்ளது. இதையெல்லாம் மீறி தனிநாடு ஒன்றை உருவாக்குவது சாத்தியமில்லை என்பதே சொல்ஹெய்மின் கருத்தாகத் தெரிகிறது. அதேவேளை சுயாட்சித் தீர்வுக்கு- இந்தியாவின் மாநிலங்களுக்கு உள்ளது போன்ற அதிகாரங்களுடன் ஒரு தீர்வை எட்டுவதற்கு சர்வதேச சமூகம் ஆர்வம் காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

அது ஒன்றும் சுலபமான காரியமில்லை.


சர்வதேச சமூகத்தின் இந்த ஆர்வமும் விருப்பமும் நடைமுறைச் சாத்தியமானதா என்ற கேள்வி உள்ளது. ஏனென்றால், அதை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பு அரசாங்கத்திடமே உள்ளது. சர்வதேச சமூகம் இலங்கை மீது தனது பார்வையை அழுத்தமாக இன்னும் திருப்பவில்லை, அதற்கான சூழல் இப்போது இல்லை என்பதையும் சொல்ஹெய்ம் விளக்கியுள்ளார். சர்வதேச சூழல், குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு, ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான், என்று பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றுக்குத் தான் முன்னுரிமை கொடுக்கின்றன. காரணம் மேற்குலகின் பொருளாதார, பூகோள, பாதுகாப்பு நலன்களுடன் அந்த நாடுகள் அதிகம் பின்னியுள்ளன. இலங்கை பூகோள நலன்சார் இடத்தில் இருந்தாலும், பொருளாதார முக்கியத்துவம் என்று வரும் போது, இலங்கையை விடவும் இந்த நாடுகள் அவற்றுக்கு முக்கியமானவை. காரணம் அவற்றின் எண்ணெய் வளம். இதனால் இலங்கை மீதான கவனிப்பு சற்றுப் பின்னே தான் உள்ளது. சர்வதேச சமூகத்தின் கவனம் இலங்கை மீது திரும்ப வேண்டுமானால், இந்தச் சிக்கல்களில் இருந்து விடுபட வேண்டும். அப்போது இயல்பாகவே இலங்கை விவகாரம் முன்னே வரும். 

அதேவேளை, இன்னொரு சிக்கலும் உள்ளது. சர்வதேச சமூகத்தின் கவனம் வேறு பக்கம் திருப்பப்படாமல் இருக்க வேண்டுமாயின் புதிய சிக்கல்கள் கிளம்பாமல் இருப்பதும் அவசியம். 2001இல் இலங்கை விவகாரம் முன்னே வரும் சூழல் ஒன்று காணப்பட்டது. அதற்குள், செப்ரெம்பர் 11 தாக்குதல் அதை வெகு தொலைவுக்குப் பின்தள்ளியதுடன் வேண்டாத விளைவுகள் பலவற்றையும் ஏற்படுத்தியது. போரின் அவலங்களுக்கு கொழும்பே பொறுப்புக் கூறவேண்டிய நிலையில் இருப்பதான கருத்து மேற்குலகிடம் இருந்தாலும், அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதென்ற குழப்பம் அவர்களிடம் உள்ளது. தமிழ்மக்களிடம் அரசாங்கமே நேசக்கரத்தை நீட்ட வேண்டும் என்று மேற்குலகம் கருதினாலும், அது நடைமுறைச் சாத்தியமாவது அரிது. ஏனென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை வெற்றிகரமாக நடத்த முடியாத அரசாங்கம் தமிழ்மக்களுக்கு நேசக்கரம் நீட்டி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதென்பது சிக்கல் நிறைந்த விவகாரமாகவே இருக்கும். அதேவேளை இன்னொரு ஆயுதப்போர் பற்றி சொல்ஹெய்ம் விடுத்துள்ள எச்சரிக்கையும் கவனத்தில் கொள்ள வேண்டியது. அப்படியான முயற்சி சர்வதேச ஆதரவை முற்றாகவே இல்லாமல் செய்து விடும் என்று அவர் கூறியுள்ளார். 

ஏற்கனவே, அமெரிக்கா இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் போனால் போர் வெடிக்கும் என்று எச்சரித்துள்ளது. அதேவேளை சொல்ஹெய்மோ, ஆயுதப்போர் தொடங்கினால் சர்வதேச ஆதரவு பறிபோகும் என்கிறார். இவை இரண்டுக்கும் இடையில் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாகவே தெரிகிறது. அதாவது, நல்லிணக்கத்தை ஏற்படுத்தத் தவறினால், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணத் தவறினால், இன்னொரு ஆயுதப் போர் மீது தமிழர்கள் நம்பிக்கை வைக்கும் நிலை வந்து விடுமா என்று மேற்குலகம் அஞ்சுகிறது. அதற்கான சூழல் இப்போது இல்லா விட்டாலும், அதுபற்றிச் சிந்திக்கக் கூடும் என்பதே சொல்ஹெய்மினதும், அமெரிக்காகவினதும் கவலையாக உள்ளது. இப்போதைய சூழலில், சர்வதேச ஆதரவைத் தக்க வைத்துக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர்வது தான் புத்திசாலித்தனம் என்பது சொல்ஹெய்மின் கருத்தாகத் தெரிகிறது. இதில் உள்ள தடைகளை அவர் புரிந்து கொள்ளாமல் இல்லை. அவரது கருத்தில் இருந்து சர்வதேச சமூகத்துக்கு இலங்கை விவகாரத்தில் உள்ள சிக்கல்களும் தெரிகிறது. அதற்கான தீர்வும் தெரிகிறது. ஆனால் இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று தான் தெரியவில்லை. அதாவது நோய் என்னவென்றும் தெரிகிறது- நோய்க்கான மருந்து என்னவென்றும் தெரிகிறது- வைத்தியத்தை தொடங்கும் வழிமுறை தான் அவர்களுக்குப் பிடிபடாமல் இருக்கிறது.

கட்டுரையாளர் சத்ரியன் இன்போ தமிழ் குழுமம்

தமிழர்களை நாடுகடத்துவதை பிரித்தானியா நிறுத்த வேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள்


அகதித் தஞ்சம் கோரியுள்ள தமிழ் மக்களை மீண்டும் அவர்களது சொந்த நாடான சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்புவதை பிரித்தானிய அரசாங்கம் உடனடியாக நிறுத்தி, அது தொடர்பான தனது கொள்கைகளை மீளவும் ஆராய்ந்து மாற்றுத் தீர்வொன்றை எட்டவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

அடுத்த கட்டமாக மே31, 2012 அன்று தனது நாட்டில் தஞ்சம் கோரியுள்ள சிறிலங்கர்களின் ஒரு தொகுதியினரை மீண்டும் அவர்களது நாட்டுக்கு திருப்பு அனுப்புவதென பிரித்தானியா தீர்மானித்துள்ள நிலையிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகம் இவ்வேண்டுகோளை முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா மற்றும் ஏனைய சில நாடுகளில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மீண்டும் சிறிலங்காவுக்கு அனுப்பு வைக்கப்பட்ட தமிழர்களில் பலர், அங்கே பலாத்காரமாக கைதுசெய்யப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்ட பல சம்பவங்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசாரணை செய்ததன் பிற்பாடே இவ்வாறானதொரு வேண்டுகோளை விடுத்துள்ளது. 

கடந்த பெப்ரவரியில் கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், அனைத்துலக நாடுகளில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மீண்டும் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் மக்கள், சிறிலங்கா பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைப்படுத்தப்பட்ட எட்டு சம்பவங்கள் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் பின்னர், அதாவது பெப்ரவரி 2012 இலிருந்து இது வரை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் மேலும் ஐந்து சம்பவங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன.

"வேறு நாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்து கொண்ட சிறிலங்காத் தமிழர்கள் பலர் மீண்டும் அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் பல்வேறு சித்திரவதைகள் மற்றும் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர் என்பதற்கான சான்றுகள் தற்போது அதிகமாகக் கிடைத்துள்ள போதிலும், சிறிலங்காவுக்கு தமிழ் மக்களை திருப்பி அனுப்புவதால் அங்கே அவர்கள் ஆபத்தைச் சந்திப்பார்கள் என்பதை அடையாளங் கண்டு அதனை அங்கீகரிப்பதில் பிரித்தானிய அரசாங்கம் தவறிழைக்கின்றது" என மனித உரிமைகள் கண்காணிப்பகத்துக்கான ஐக்கிய இராச்சியத்தின் இயக்குனர் டேவிட் மெபாம் சுட்டிக்காட்டியுள்ளார். 

"சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழ் மக்கள் அங்கு எவ்வாறான சித்திரவதைகளையும், துன்பங்களையும் அனுபவிக்கின்றார்கள் என்பது தொடர்பில் மனித உரிமைகள் அமைப்பால் வெளியிடப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பிரித்தானிய அரசாங்கம் முழுமையான, நியாயமான ஆய்வுகளை மேற்கொண்டு தீர்வை எட்டும் வரை இவ்வாறு சிறிலங்காவுக்கு தமிழ் மக்களை திருப்பி அனுப்புவதை இடைநிறுத்த வேண்டும்" எனவும் டேவிட் மெபாம் கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை சிறிலங்கா பாதுகாப்பு படையினர் நீண்ட காலமாக துன்புறுத்தி வருவதாகவும், புலம்பெயர் நாடுகளில் அரசியல் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபடும் தமிழ் மக்களை சித்திரவதைப்படுத்துதல் மற்றும் ஏனைய மீறல்களுக்கு உட்படுத்துவதானது அதிகரித்து வருவதையே அண்மைய சான்றுகள் உறுதிப்படுத்தி நிற்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 

சிறிலங்காவில் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதைப்படுத்தப்பட்ட தமிழ் மக்களுடன் தொடர்புபட்ட ஐந்து சம்பவங்களில் நான்கு சம்பவங்கள் மருத்துவசான்றுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மே 2009ல் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழ்ப் பெண் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்ட அதேவேளையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்களால் பாலியல் ரீதியாக சித்திரவதைப்படுத்தப்பட்டு, இராணுவ முகாம் ஒன்றில் ஐந்து மாதங்கள் வரை அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதேபோன்று சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட இரு தமிழ்மகன்கள் இவ்வாறான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதில் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். அத்துடன் இவரது உடல் முழுவதும் சிகரெட்டால் சுடப்பட்டதுடன், நெருப்பில் வைத்து காய்ச்சப்பட்ட இரும்புக் கம்பியாலும் காயப்படுத்தப்பட்டது. 

இவ்விரு தமிழ் ஆண்களிலும் மற்றையவர், சிறிலங்கா விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் சிறிலங்கா இராணுவ குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவின் தலைமையகத்தில் பல்வேறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். 

"நான் தாக்கப்பட்டேன். சித்திரவதைப்படுத்தப்பட்டேன். எனது தலையை சுவருடன் மோதினார்கள். சிகரெட்டால் சுட்டார்கள். எனது கைகள் கட்டப்பட்ட நிலையில் இவ்வாறான பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் என் மீது மேற்கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்புக்காக செயற்படுபவன் என என் மீது அவர்கள் குற்றம் சாட்டினார்கள். பெற்றோல் ஊற்றப்பட்ட பிளாஸ்ரிக் பை ஒன்றினுள் எனது முகத்தை வைக்க முற்பட்டார்கள்" என அவர் தெரிவித்தார். 

சிறிலங்காவில் பரந்தளவில் இவ்வாறான சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், ஆனால் குறிப்பாக அனைத்துலக நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசியற் செயற்பாடுகளில் பங்குபற்றுகின்றதைப் பொறுத்து அவர்கள் மீதான சித்திரவதைகள் அமைந்திருப்பதாகவும் ஏப்ரல் 2012ல் புதுப்பிக்கப்பட்ட, பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பின் நடவடிக்கை வழிகாட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்ட தமிழ் மக்களிடம் புலம் பெயர் நாடுகளில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அரசியற் செயற்பாடுகள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

"தான் துன்புறுத்தப்படலாம் என்கின்ற ஆபத்தை உணர்கின்ற ஒரு பாதிக்கப்பட்ட நபர் தனது நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு தப்பிச் சென்று புகலிடம் கோரும் போது, குறிப்பிட்ட நபரை மீண்டும் அவரது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பக் கூடாது" என சித்திரவதைப்படுத்தல், மற்றும் ஏனைய கொடூரச் செயல்களில் ஈடுபடுதல், மனிதாபிமானத்துக்கு எதிரான முறையில் தண்டனை வழங்குதல் போன்றவற்றுக்கு எதிரான சாசனத்தின் மூன்றாவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சாசனத்தை பிரித்தானியா ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டுள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவானது தனது அனைத்துலக சட்டக் கட்டுப்பாடுகளை மதிப்பதற்கு அப்பால், சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்ப எத்தனிக்கும் தமிழ் மக்கள் தொடர்பில் தனது அடிப்படை கண்ணியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என மெபாம் குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, May 29, 2012

சர்வதேச அழுத்தம் தொடர்பில் அதற்கு ஏற்ப செயற்படுதல்

இலங்கையில் அரசியல் ரீதியான தமது நம்பிக்கைகளுக்கும் கருத்துக்களுக்கும் அப்பாற்பட்டு பெரும்பாலான இலங்கையர்கள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதியளிக்கும் மன்னிப்பிற்காகவும் அதனால் அவர் சிறைத் தண்டனையிலிருந்து சுதந்திரம் அடையப் போவதனையும் பற்றிய செய்தியின் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றார்கள். முன்னாள் இராணுவத் தளபதி இராணுவத்திற்கு தலைமைதாங்கி தமிழீழ விடுதலைப் புலிகளை வென்றமைக்காக அரசாங்கம் அவரை கதாநாயகனாகப் போற்றி பாராட்டிவிட்டு உடனே பின்னர் அவரை வில்லனாகச் சித்திரித்து சிறையிலடைத்தமையினை நம்புவது பெரிதும் கடினமாகவே இருந்தது. ஆனால், யுத்தத்தில் வெற்றியடைந்த ஆறு மாதங்களின் பின்னர் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போட்டியிடுவதற்காக பிரசாரங்களில் ஈடுபடுவதனை எதுவும் தடை செய்யவில்லை. இராணுவ தளபதி தேர்தலில் வெற்றியடைவதற்கு மிக அண்மித்த நிலையை அடைந்த நிலையில் அவர் தற்போதைய ஜனாதிபதிக்கு எதிரான அரசியல் அச்சுறுத்தல் என்ற எண்ணத்தை உருவாக்கி, அதற்காக அந்நிலைவரத்தை மாற்றியமைத்து விட வேண்டும் என்ற நிலைவரத்தையும் தோற்றுவித்துவிட்டது.


ஜனாதிபதி ராஜபக்ஷ மீண்டும் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டதால் அரசாங்கத்தின் அதிகாரம் மீண்டும் ஒருங்கு திரட்டப்பட்டுவிட்டதோடு முன்னாள் இராணுவத் தளபதியின் எதிர்கால வாய்ப்புகளும் பெருமளவில் குறைந்துவிட்டது. அவருக்குக் கீழ் இராணுவத்தில் பணியாற்றிய சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளைக் கொண்ட இராணுவ நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  விசாரணையின் பின்னர் அவர் வகித்த சிரேஷ்ட பதவி பெற்றிருந்த வீர பதக்கங்கள், ஓய்வூதியம் என்பன யாவையும் பறிமுதல் செய்ததுடன் அவருக்கு மூன்று வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. 


இவற்றோடு மாத்திரமன்றி ஊழல்கள், இராணுவத்திலிருந்து தப்பியோடியோரை சட்டவிரோதமாக பாதுகாத்தமை என்பன தொடர்பாகவும் குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அவர் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை பதவியிலிருந்து வெளியேற்ற சதி செய்ததாகவும் அவற்றோடு இணைந்த வேறு பல குற்றங்களுக்காகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு இதுவரை வழங்கப்பட்ட தண்டனைகளை விட கடுமையான தண்டனைகளுக்கும் கூட அவர் உட்படுத்தப்படலாம் என்ற அச்சமும் நிலவியது.


தளபதிக்கு எதிராக செய்த வழக்கு விசாரணைகள் நீதியை உறுதிப்படுத்தவே என அரசாங்கம்  கூறிய விளக்கங்களை எவராலும் நம்பக்கூடியதாக இருக்க வில்லை. அரசாங்கத் தலைவர்கள் எவ்வாறு மனித உரிமைகளை மீறியுள்ளனர் என்பது தொடர்பில் தாமாக வெளிப்படையாக செய்துள்ள அறிக்கைகளிலிருந்து தெரிய வந்துள்ள போதிலும் அவர்களுக்கு எதிராக எதுவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படாதுள்ளமை காரணமாக சட்டத்தின் வாயிலான ஆட்சி அதலபாதாளத்திற்கு சென்று விட்டமை நன்கு புலனாகின்றது. இவற்றிலிருந்து ஆட்கடத்தல், ஆட்கள் காணாமல் போகின்றமை என்பன காரணமாக குற்றம் செய்தவர்களை தண்டனையிலிருந்து பாதுகாக்கப்படுகின்ற கலாசாரத்தினையும் அச்சத்தினையும் தொடர்ந்தும் பேணி வருகின்றமையும் புலனாகின்றது. தளபதி பொன்சேகா அரசாங்க தலைமைத்துவத்துடன் ஒத்துப் போகாத குற்றத்தினைப் புரிந்த காரணம் நிமித்தமாகவே அவருக்கு இத்தகைய கதி ஏற்பட்டுள்ளதாகவே அவரை ஆதரிக்கும் பிரிவினர் நம்புகின்றனர்.


ஏற்றுக்கொள்ளக் கூடியதாயுள்ள காரணங்கள்


தளபதி பொன்சேகாவை சிறையிலடைப்பதற்குக் காரணமாக அரசியல் நோக்கம் இருந்தமையினை மனதிற் வைத்துப் பார்க்கும் போது அவரை இப்போது விடுதலை செய்யத்தூண்டிய காரணம் யாது என்பது வினாவாகிறது. சர்வதேச அழுத்தம், தளபதியினுடைய  ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள், எதிரணியினரை இன்னும் பிரித்து பலவீனமடையச் செய்தல், நீதித்துறையின் முடிவாக வரக்கூடிய விடுதலையை கவனத்திற்கொண்டு அதற்கு முன்னரே தானே விடுவித்ததாக கூறிக “ கொள்வதற்கான எண்ணம், ஜனாதிபதியின் இரக்கப் பண்பு என்பன காரணங்களாக இருக்கலாம் எனக் கூறிக்கொள்ளப்படுகின்றது. ஜனாதிபதி மன்னிப்புக் கடிதத்தை வழங்கும்போது அரசாங்க அங்கத்தினர்கள் முன்பெல்லாம் கூறி வந்ததனைப் போன்று தளபதியின் குடும்பத்தினர் ஜனாதிபதியிடம் மன்னிப்புக்கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்ற முன் நிபந்தனைகளை விதிக்க வில்லை என்பது மிக முக்கியமான நிலைவரமாகும். அத்துடன் ஜனாதிபதியிடம்  அவ்வாறான முறையீடுகள் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை என்ற தகவல்களே கிடைக்கக் கூடியதாகவும் உள்ளன.


கடந்த சில வாரங்களாக தளபதி பொன்சேகாவின் ஆரோக்கியம் படிப்படியாக குறைந்து கொண்டே சென்றுள்ளது. இதனை காரணமாக வைத்தே அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை வழங்குவதற்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டது. அரசாங்க அதிகாரிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தளபதியை தனியார் மருத்துவமனைகள் (நவலோக) யில் சிகிச்சைக்காக அனுமதிப்பதனை தவிர்த்து அரசாங்க மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முனைந்திருக்கின்றன. இவற்றிற்கு மத்தியிலும் அவரை முன்னர் நிர்ணயித்த சிறைவாச காலத்திற்கு முன்னரே விடுதலையளிப்பதற்கு மனிதாபிமான காரணங்களும் பொறுப்பாக இருந்தமையும்முற்றாக நிராகரிப்பதற்கில்லை. முன்னாள் யுத்தகள கதாநாயகனது பௌதீக/உடல் நிலை நலிவடைவதற்கோ அல்லது அவரது ஆரோக்கிய நிலை மோசமடைவதற்கோ பொறுப்பாயிருந்ததாக குற்றஞ்சாட்டப்படுவதனை அது விரும்பியிருக்காது.


தளபதி பொன்சேகா உயர் நீதமன்றத்துக்கு செய்திருந்த மேன்முறையீடு இன்னும் விசாரிக்கப்படாது தேங்கியிருப்பது இன்னொரு காரணமாக இருக்கலாம். அவர் இராணுவ நீதிமன்றத்தினால் சிறையிலடைக்கப்பட்டமை தொடர்பான இரண்டு வழக்குகள் தொடர்பாக இவ்வாறான மேல் முறையீடுகளைச் செய்திருந்தார். ஏனைய அரச நிறுவனங்கள் அளவுக்கு மீறிய வகையில் அரசியல் மயமாக்கப்பட்டிருக்கும் நிலையிலும் கூட இலங்கையில் நீதித்துறையின் மீது பொதுமக்களிடையே நம்பிக்கை நிலவி வருகின்றது. நீதித்துறையின் அனைத்து மட்டங்களிலும் சுதந்திரம் நிலவுகின்றமையினை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் காணக்கூடியதாயிருந்திருக்கின்றது. அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்ற வகையிலான பல தீர்ப்புகளை நீதித்துறை அண்மையில் வழங்கியுள்ளது. எனவே அரசாங்க தளபதி செய்துள்ள பிணையில் செல்வதற்கு அனுமதி தருமாறு கோரிய வேண்டுதலை நீதிமன்றம் ஏற்று பிணையில் செல்ல அனுமதி வழங்குவதற்கு முன்பு தானாக விடுதலை செய்து தனது உயர்நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு செய்துகொண்ட தந்திர உபாயமாகவும் இருக்கலாம்.


தளபதி பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும் காலப்பகுதியினை கவனத்திற் கொண்டு பார்க்கும் போது சர்வதேச ரீதியாக மனித உரிமைகள் மீறப்படுவதாக கருதப்படுவதனால் ஏற்படும் அழுத்தம் காரணமாக அரசாங்கம் அவ்வாறு நடந்துகொண்டதாகவும் எண்ணுவதற்கு தோன்றுகிறது. ஜனாதிபதி ராஜபக்ஷவின் வெளிவிவகார அமைச்சர் மே மாதம் 18 ஆம் திகதி ஐக்கிய அமெரிக்க இராஜாங்க செயலாளரை வாஷிங்டன் (டி.சி.) யில் சந்திக்கவிருந்த சில மணித்தியாலங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் கடிதத்தில் கையெழுத்திட்டதனை தற்சம்பவமாக கருதுவதற்கில்லை.  பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுக்கும் மற்றும் ஹிலாரி கிளின்டனுக்கும்  இடையேயான சந்திப்பில் இலங்கை அரசாங்கத்திற்கு ஒன்றும் ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் ஏற்கெனவே வருடத்தின் ஆரம்ப பகுதியில் இவ்வாறான சந்திப்பிற்கான சந்தர்ப்பம் ஏற்பட்ட போது சந்திப்பு நிராகரிக்கப்பட்டிருந்தது.


அப்போது இலங்கை அரசாங்கம் அது தனது சிநேகநாடுகள் என நம்பிய ரஷ்யா, சீனா மற்றும் சில மூன்றாம் உலக நாடுகளின் ஆதரவுடன் ஐக்கிய அமெரிக்காவையும் அதன் ஆதரவு நாடுகளையும் வென்று  விடலாம் என்ற நம்பிகையுடன் இருந்தது. இலங்கை அரசாங்கம் ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருந்த நிலையில் ஐ.அ.தலைமையிலான பெரும்பாலான நாடுகள் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையில் மார்ச் மாத கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியமை இப்போது வரலாற்று தகவலாகி விட்டது. வாஷிங்டன் சந்திப்பின்போது ஐக்கிய அமெரிக்கா தான் ஜெனீவா தீர்மானத்தில் வற்புறுத்தியவற்றினையே மீண்டும் உறுதி செய்திருந்தது. ஜெனீவா தீர்மானத்தின் படி (2012) இலங்கை அரசாங்கம் அதன் கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதனையும் குறிப்பாக பொறுப்புக் கூறுதல், யுத்தக் குற்றங்கள் புரிந்தவர்கள் மீது விசாரணைகள் மேற்கொள்ளுதல் என்பனவற்றில் கவனம் செலுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதனையும் ஐக்கிய அமெரிக்கா மீண்டும் வற்புறுத்தியிருந்தது. வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டத்தில் இரு தரப்பினரிடையேயும் சம்பிரதாயமான இராஜதந்திர வழிமுறைகளின் படியே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் ஜெனீவாவில் மார்ச் மாதத்தில் நடைபெற்ற  போராட்ட உணர்விலான வகையிலானதாக அமையவில்லை என்பதனை இப்போது கிடைக்கக்கூடியதான தகவல்களிலிருந்த தெரிந்து கொள்ளக்கூடியதாயிருக்கிறது.


வாஷிங்டனில் ஐக்கிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனுக்கும் இலங்கை வெளி விவகார இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கும் இடையில் நடைபெற்ற  பேச்சுவார்த்தையின் போது ஐ.அ. இராஜாங்க செயலாளர் இலங்கை அமைச்சரை கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையில் ஒரு பகிரங்க செயற்திட்டத்தை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.  அத்துடன் வட மாகாண பகுதிகளில் தற்போது நிலவும் இராணுவ மயமாக்கப்பட்டுள்ள நிலைமையினை நீக்கி விடுமாறும், அங்கே மாகாண சபை தேர்தலை நடத்தும்படியும் அவற்றின் மூலம் அரசாங்கத்தின் அடக்குமுறைகள் இல்லாது சிவில் சமூகத்தின் செயற்பாடுகள் இடம்பெறுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் ஐக்கிய அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.


அரசாங்கம் தனது மக்கள் அல்லது பாராளுமன்றத்திடம் கூட தான் எவ்வாறு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தப் போகின்றது என்பதனை தெரிவித்த கருத்து பரிமாற்றம் இன்றி செயற்திட்டத்தினைத் தயாரித்தமை என்பது அரசாங்கம் பெரும் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தமையினைக் காட்டுவதாகவுள்ளது. கடந்த காலங்களில் மனித உரிமைகள் மீறல்கள், யுத்த குற்றங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டபோது அது தேசிய இறைமை தொடர்பான தத்துவங்களை மிகவும் வலிமையான முறையில் பயன்படுத்தி செயற்பட்டு வந்துள்ளது.


தளபதி பொன்சேகாவை விடுதலை செய்ததன் மூலம், இலங்கை அரசாங்கம்தான் ஏற்றுக்கொண்ட (நல்லாட்சி தொடர்பான) பொறுப்புகளில் ஒன்றில் மட்டுமே நிறைவேற்றியுள்ளது. தளபதி பொன்சேகாவை விடுதலை செய்தலிலும் க.பா.நெ.ஆ. அறிக்கை கூறிய சிபாரிசுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகின்றோம் என்பதற்கான செயற்திட்டம் தயாரித்தலிலும் எவ்வாறு அரசாங்கம் செயற்பட்டுள்ளதோ அதனை ஒத்த வகையில் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தலிலும் செயற்படுவதன் மூலம் அரசாங்கத்தினை நல்லதோர் நிலைமைக்கு கொண்டு செல்ல முடியும். பொன்சேகாவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமை மற்றும் க.பா.ந.ஆ. அறிக்கை சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தினைத் தயாரித்தமை போன்ற மாற்றங்களுக்கான பின்னணியின் நோக்கம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால், அவை யாவும் அரசாங்கம் புதிய திசையில் செல்வதற்கு தயாராக உள்ளமைக்கான நம்பிக்கையினையும் எதிர்மறையற்ற சிந்தனை நோக்கிய போக்கினையும் காட்டுவதாக உள்ளது என்பது கவனிக்க வேண்டியதாகும். இதேவேளையில் குறிப்பாக அரசாங்கம் அரசியல் தீர்வு தொடர்பான பிரச்சினைக்களுக்கும் விரைவாகவும் திறமையுடனும் செய்து முடிக்கும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பட்சத்தில் அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களும் குறைந்து செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.

"வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமல்ல" – தமிழரின் தாயகக் கோட்பாட்டை நிராகரிக்கிறார் கோத்தாபய


சிறிலங்காவின் வடக்குப் பகுதி தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழரின் பாரம்பரிய தாயகக் கோட்பாட்டை நிராகரிக்கும் வகையில், பிபிசி செய்தியாளர் சார்ள்ஸ் ஹெவிலண்டுக்கு அளித்த தனிப்பட்ட செவ்வியில்- அவர் சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துகளை தெரிவித்துள்ளார். 


சார்ல்ஸ் ஹெவிலண்ட்- அண்மையில் வடக்கு சிவில் நிர்வாகத்தில் உள்ள சில மூத்த தமிழ் அதிகாரிகள் மாற்றப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக சிங்கள அதிகாரிகள் நியமிக்கப்படுவதன் காரணம் என்ன? 


கோத்தாபய - போருக்கு முன்னர், அங்கிருந்த அதிகாரிகள் சிங்களவர்களாகத் தான் இருந்தார்கள். அதிகளவான தமிழ் அதிகாரிகள் தெற்கு மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர். சிங்களவர்களும் முஸ்லிம்களும் வடக்கில் பணியாற்ற முடியுமாக இருக்க வேண்டும். அது சிறிலங்காவின் ஒரு பகுதிதானே.


ஹெவிலண்ட் - வடக்குப் பிரதேசம் அங்கு செறிந்து வாழும் தமிழர்களுக்கே உரித்தான தனித்துவமான பகுதி என்று தமிழர்கள் கருதுவதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? 


கோத்தாபய - ஏன் அப்படி.. ஏன் அப்படி இருக்க வேண்டும், நீங்கள் சிறிலங்கர் என்றால், நாட்டின் எந்த இடத்திற்கும் சென்று சொத்துக்களை வாங்க முடியுமாக இருக்க வேண்டும். திட்டமிட்ட குடியேற்றத்தைப் பற்றி நான் பேசவில்லை. நாட்டின் எந்த இடத்திலும் வாழக்கூடிய சுதந்திரம் சிறிலங்கர்களுக்கு இருக்க வேண்டும் என்று தான் கூறுகிறேன். 


ஹெவிலண்ட் - வடக்கில் நடந்த இறுதிக்கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா உள்ளிட்ட அமைப்புகள் கூறிவருகின்றனவே?


கோத்தாபய – அப்படியானால், நீங்கள் இதனை சிறிலங்கா இராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான போர் என்று நினைக்கிறீர்களா, அது சிறிலங்கா இராணுவத்துக்கும், இராணுவத்துக்கு சமமாக ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழுவுக்கும் இடையிலான போர். 


அண்மையில் சிறிலங்கா அரசு நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரங்களின்படி, 7,400 பேரே இறுதிப் போரில் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த 7,400 பேரில் சிறியளவிலானோரே பொதுமக்கள். மற்றவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள். இந்தக் காலத்தில் 6000 சிறிலங்காப் படையினர் உயிரிழந்துள்ளனர். 


பொதுமக்களுக்கு சில ஆட்சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம், அது நீங்கள் கூறும் எண்ணிக்கையாக இருக்க முடியாது. போரில் சட்டமீறல்கள் நடந்திருந்தால் அதற்காக தண்டனை அளிக்க முடியும், ஆனால் அதனை நீங்கள் நிரூபிக்க வேண்டும். 


அப்பாவி பொதுமக்களை கொன்ற தீவிரவாதிகளைத் தான் சிறிலங்கா இராணுவம் அழித்திருக்கிறது, இப்போது அவை எல்லாம் நிறுத்தப்பட்டு விட்டன, அது பற்றியெல்லாம் நீங்கள் பேசமாட்டீர்கள், நீங்களும் தீவிரவாதிகளின் நிலைப்பாட்டைத் தான் ஆதரிக்கிறீர்கள். 


ஹெவிலண்ட் - கடந்த ஒக்ரோபர் தொடக்கம் பெப்ரவரி மாதத்துக்கு இடையில் 32 பேர் கடத்தப்பட்டுள்ளதாக மனிதஉரிமை அமைப்புகள் கூறியுள்ளனவே? 


கோத்தாபய – தவறான குற்றச்சாட்டுகள். இவை எல்லாம் பொய்கள். சிறிலங்காவுக்கு வருவோரையும் சிறிலங்காவின் முதலீடுகளையும் தடுப்பதற்காக தவறான தகவல்களை வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளிளின் ஆதவாளர்கள் வெளியிடுகின்றனர். 


அவர்கள் சிறிலங்காவின் பெயரைக் கெடுக்க முனைகிறார்கள். காணாமற்போனவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள பலர் குற்றவாளிகள். அவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று விட்டனர்.

Monday, May 28, 2012

சிங்கள, தமிழ்மக்களுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கை



அண்மையில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, சிங்களப்பேரினவாத மேலாடையுடன் தனது அரசியல் தளத்தை பலப்படுத்துவதற்கான முயற்சிகளை, வந்த வேகத்திலேயே தொடங்கியுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு, அண்மையில் வழங்கிய பேட்டியில் “தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை உருவான பிறகே அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட வேண்டும்” என்று, அர்த்தமுள்ள தீர்வை வழங்குவதைப்போல, தனது கருத்தைப்பதிவு செய்துள்ளார்.

சிறுபான்மையினங்களிற்கு ஐம்பது சதவீத பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று ஜீ.ஜீ பொன்னம்பலம் வாதாடியபோதும், தாங்கள் சிங்களவர்களுடன் பரஸ்பரம் இணைந்து வாழலாம் என்று சில தமிழ்த்தலைவர்கள் நம்பி, ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் உருவாகிய சோல்பரி அரசியல் யாப்பிற்குள் இலங்கைத்தீவுக்கு பிரித்தானியா சுதந்திரம் வழங்கியது. 

ஆனால் சுதந்திரத்தை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த எந்த சிங்களத்தலைமையும் தமிழ்மக்களுடன் பரஸ்பர நம்பிக்கையைக் கண்டியெழுப்பவில்லை. மாறாக, சிங்கள மேலாதிக்க சித்தாந்தத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் இலங்கையை பௌத்த சிங்கள நாடாகப் பிரகடனப்படுத்தும் செயற்பாடுகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். “சிங்களம் மட்டும்” போன்று தமிழ்மக்களைச் சிறுமைப்படுத்தும் பல அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தனர். கலவரங்களை ஏற்படுத்தி தமிழ்மக்களை அச்சப்படுத்தவும், பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தவும் முனைந்தனர். தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை சிதைக்கும் நோக்கம் கொண்ட சிங்களக் குடியேற்றங்களின் உருவாக்கங்களை முனைப்புப்படுத்தினர். இதற்கெதிரான  தமிழ்மக்களின் சாத்வீகப் போராட்டங்களைக்கூட ஆயுத வன்முறைக் கலாச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, அடக்கியாள முற்பட்டதன் விளைவாகவே ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்றது. 

முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள் இன்னமும் ரணங்களாகவே தமிழ்மக்களின் மனங்களில் பதிந்துள்ளன. இராணுவ அட்டூழியம், அடக்குமுறை, என இன்றுவரை அந்த வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்தநிலையில், பரஸ்பர இணக்கப்பாட்டைக் கட்டியெழுப்புவதுதான் இனப்பிரச்சினைக்கான தீர்வு எனக்கூறுவதன் மூலம் தானும் அதேவழியில் வந்த சிங்களத்தேசியவாதிதான் என்பதை சரத்பொன்சேகா தெளிவாக நிறுவுகின்றார். 

மேலும் “தமிழர்களுக்கு எதைக் கொடுத்தாலும் அதற்கு சிங்களவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் தமிழர்களை அவர்கள் நம்பவில்லை” எனக்கூறியுள்ளார். இலங்கைத்தீவில் தமிழ்மக்களுக்கு இருக்கும்  அடிப்படை உரிமைகளை வழங்க மறுத்து, சிங்கள அரசியல்வாதிகளும், பௌத்த துறவிகளுமாகச் சேர்ந்து சிங்களமக்களிடம் ஆழமாக, தவறான சிங்களப்பேரினவாத சிந்தனைத்தூண்டலை விதைத்து விட்டு, இன்று இதுதான் சிங்களமக்களின் சிந்தனை என வெளிப்படுத்தி தங்களது சிங்களமேலாண்மைவாத்தை வெளிப்படுத்துகின்றனர். அத்துடன் தமிழ்மக்களிற்கு இருக்கும் உரிமைகளை வழங்க மறுப்பதற்கு புதிது புதிதாய காரணம் தேடுகின்றனர்.

தமிழ் சிங்கள மக்களிடம் பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டுமெனில் சிங்கள அரசியல் தலைமைகளினால் இன ஜக்கியத்திற்கான ஆக்கபூர்வமான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அன்றி, பரஸ்பர ஜக்கியம் எவ்வாறு உருவாகும்? ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், தமிழர் தாயகப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் துரிதமான குடியேற்றங்கள், தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களின் துயிலும் இல்லங்களை அழித்து அதன்மேல் இராணுவ முகாம்களையமைத்தல், ஆங்காங்கு முளைவிடும் பௌத்தவிகாரைகள், தமிழ்மக்களின் அடிப்படைப் பொருளாதார வளங்களை சிங்களப் பெரும்பான்மைக்கு கையகப்படுத்தும் செயற்பாடுகள், மிரட்டி, கடத்திப் பணம்பறித்தல், இயல்பு நிலையை தோற்றுவிக்காமை, போன்று அப்பிரதேசங்களில் வாழும் மக்களின் அடிப்படை வாழ்வியல் உரிமைகளை மறுதலித்து விட்டு, பரஸ்பரம் ஏற்படுத்தி விடலாம் என்று எவ்வாறு நம்பமுடியும்.

அத்துடன் “பல்லின இனங்களிற்கிடையே சுமூகமான நிலையேற்பட பத்து அல்லது இருபது ஆண்டுகள் கூட ஆகலாம் என்பதுடன் இராணுவத்தினரின் பிரசன்னம் தெடர்ந்து தமிழர் தாயகத்தில் இருக்கவேண்டும்”  என சரத் பொன்சேகா கூறுவதின் உள்ளர்த்தம், இராணுவ மேற்பார்வையில் தமிழர்களின் தாயகக்கோட்பாட்டைச் சிதைக்கவேண்டும் என்பதுதான்.

இங்கு சரத் பொன்சேகாவின் கருத்தில் அப்பட்டமாகத் தெரியும் சிங்கள மேலாதிக்க சிந்தனை என்பது  சிங்களக்கட்சிகளுக்கிடையேயான அரசியல் முரண்பாடு, அரசியல் பழிவாங்கலின் பாதிப்பு என்பவற்றைத் தாண்டி, சிங்களப்பேரினவாதம் என்ற சிந்தனையின் ஒருமித்த குரலாகத்தான், சிங்களவர்களின் கருத்துகள் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன என்பது மீண்டும் புலப்படுகின்றது.

இலங்கைத்தீவில் தமது உரிமைகளுக்காக நீண்டகாலம் சாத்வீக மற்றும் ஆயுதவழி போராட்டத்தில் போராடிய ஒரு இனத்திற்குப் பரஸ்பரம் எற்படுவதாயின் அதற்கிருப்பது ஒரே வழிதான் தமிழ்மக்களிற்கான சரியான அரசியல் உரிமைகளை வழங்குவதே ஆகும். அதில்லாமல் இயல்பாக பரஸ்பரம் ஏற்படும் எனக்கருதுவதோ! அன்றி இராணுவ அடக்குமுறைக்குள் இனத்தின் அடிப்படைகளை நீர்த்துப்போகச்செய்வதோ! அடிமைப்படுத்தி வைத்திருப்பதோ! பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்தி விடலாம் என சிங்களத்தலைமைகள் நினைப்பேர்களேயானால் அது அவர்களின் அரசியல் மடமைத்தனமாகும்.

சிங்கள மக்கள் மத்தியில் சிங்களத்தலைமைகளினால் தொடர்ந்து  ஏற்படுத்தப்படுகின்ற இனவாதக்கருத்துக்களின் உருவாக்கமும் சிங்கள மேலாதிக்கத்தை நிறுவமுயலும் செயற்பாடுகளும் இனங்களிற்கிடையேயான இடைவெளிகளை அதிகப்படுத்திச்  செல்லுமேயன்றி அங்கு இன ஜக்கியம் ஏற்படவாய்ப்பேயில்லை அது ஏற்படப்போவதுமில்லை.

இராணுவ அடக்குமுறைக்குள் ஈழத்தமிழினம் வைக்கப்பட்டிருந்தால் அவர்களது அரசியல் விடுதலை தொடர்பான எண்ணக்கருத்துக்களை பலவீனப்படுத்தலாம் என்றோ! அவர்களது அரசியல் செயற்பாடுகளை ஆயுத வன்முறை மூலம் நசுக்கி விடலாம் என்றோ சிங்களம் கருதுமானால் அது தமிழ்மக்கள் பற்றிய புரிதலின் தோல்வியாகத் தான் இருக்கும்.

தமிழ்மக்களின் அரசியல் உரிமைக் கோரிக்கைகளை மறுதலித்து சமாதானம், சகவாழ்வு, இன ஒற்றுமை, இன ஜக்கியம் போன்றவை சாத்தியமானவையல்ல. அதேநேரத்தில் தமிழ்மக்களுக்கு எதைக் கொடுத்தாலும் சிங்களமக்கள் அதை எதிர்க்கின்றார்கள். இன ஜக்கியத்தின் அடித்தளத்தில் உருவாகும் சிங்கள மனநிலை மாற்றமே தமிழ்மக்களிற்கான அரசியல் உரிமை வழங்குவதற்கான காலம் என, சிங்கள மேலாண்மைவாதத்தை உருவாக்கும் சரத் பொன்சேகா உட்பட அனைத்து சிங்கள அரசியல் தலைவர்களின் கருத்தாகவும் இருக்கின்றது. இவை ஒருபோதும் எத்தகைய பரஸ்பரத்தையும் இனங்களுக்கிடையில் ஏற்படுத்தாது என்பதை யதார்த்தமானது. 

ஈழத்தவன்


சண்டித்தனத்தின் மூலமாக சாதிக்க முயலும் மகிந்தா


தனது அரசு செய்த அனைத்துமே கொடுங்கோன்மையான நிகழ்வுகள் என்பதனை ஏற்க மறுப்பதுடன்இ உலக நாடுகளை கண்டித்து பேசிவரும் மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தனது சண்டித்தனத்தையே காட்டி வருகிறார். பணச் செல்வாக்கினால் பிரித்தானியா மற்றும் வேறு சில நாடுகளில் இயங்கும் சில பிரச்சார அமைப்புக்களை உள்வாங்கி தனது பிரச்சாரத்தை அந்நாடுகளில் பரப்பி வருகிறார் மகிந்தா.

சண்டித்தனத்துடன் கூடிய தனது அதிகார மற்றும் பணச் செல்வாக்கை வைத்து தன் மீதும் மற்றும் முக்கிய அதிகாரிகள் மீதும் சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபட தனது செல்வாக்கை மேற்குலகத்தில் அதிகரிக்க பல்வேறுபட்ட பிரயத்தனங்களை எடுத்துவருகிறார் மகிந்தா. 

ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்ற 2010-இல் லண்டன் சென்ற மகிந்தா பாதுகாப்புக் காரணங்கள் உட்பட பல்வேறு நெருக்குதல்கள் காரணங்களினால் உரையாற்றாமலே நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் மூடிசூடி அறுபதாண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்க மகிந்தாவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.  இந்த விழாவில் பங்கேற்பதற்காக நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு வரும் யூன் 4-ஆம் தேதி லண்டன் வரவுள்ளார் மகிந்தா.

லண்டனிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட மகிந்த மீண்டும் லண்டன் வருகிற செயல் தனது செல்வாக்கை பிரித்தானியாவில் அதிகரிக்க உதவும் என்று கருதுகிறார் போலும். மகிந்தாவின் வருகையை அறிந்த ஐரோப்பிய தமிழர்கள் மகிந்தாவின் வருகைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.  மகிந்தாவுக்கு அழைப்பு விடுத்ததைக் கண்டித்தும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கண்டனக் கடிதங்கள் பல அனுப்பப்பட்டு வருகின்றன.

இனவாதத்தைப் பற்றி பேச வேண்டாமாம்

பிரித்தானிய ஏகாதிபத்தியம் சிங்களவரிடம் இலங்கையை கையளித்துவிட்டு சென்ற காலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட தமிழின சுத்திகரிப்பு வேலைத் திட்டங்கள் இன்றுவரை செயற்பாட்டிலேயே இருக்கிறது. மறைமுகமான சட்டமாகவே சிறிலங்காவில் தமிழின அழிப்பு திட்டம் இருந்து வருகிறது.

சிறிலங்காவில் இனவாதத்தை தோற்றுவிக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று கடந்த வாரம் மகிந்தா தெரிவித்தார். தன்னுடைய நாட்டில் சிங்களம்இ தமிழ் மற்றும் முஸ்லிம் என்ற சகல ரீதியிலும் இனவாதம் தோன்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் சிறிலங்காவில் தன்னுடைய ஆட்சியில் தான் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதாகவும் பெருமையாக கூறினார் மகிந்தா. இப்படியான ஒரு காலநிலையில் சமாதானம் மற்றும் சமத்துவத்துடன் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் வாழ வேண்டும் என்பதே தனது எண்ணம் என்று கூறினார் மகிந்தா.

உரிமைகளை பகிர்ந்தளித்து வாழும் பக்குவம் இல்லாத மகிந்தா போன்ற தலைவர்கள் ஆளும் நாடுகளில் நிச்சயம் இரத்த வெள்ளத்தை தவிர்க்க யாரினாலும் முடியாது. காலத்துக்கு காலம் ஆட்சிக்கு வந்த அனைத்து சிங்களத் தலைமைகளும் தமிழர்களை அழித்தொழிப்பதிலேயே ஆர்வம் காட்டியது. தமிழர்கள் என்பவர்கள் ஒரு இனம் இல்லை என்பதனை மகிந்தாவினால் மறுக்க முடியுமா?

ஒன்றிற்கு மேலான இனத்தவர்கள் உள்ள நாடுகளில் அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்கினால் தான் குறித்த நாடு அனைத்துத் துறைகளிலும் வளர முடியும். சிறிலங்காவுக்கு இணையான மக்கள் தொகையை கொண்ட பல நாடுகள் அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்கி கூட்டாட்சி முறையை பேணுவதினால் மத்திய - மாநில அரசுகளும் திறம்பட அரச கரும வேலைகளை செய்யக் கூடியதாக உள்ளது.

பல அரசுகள் இன்று அரச அதிகார வேலைகளை தனியாரிடம் அளித்து வருகின்றன. தனியார் நிறுவனங்கள் திறம்பட செயல்பாடுகளை செய்வதனால் மக்களுக்கு சென்றடையும் சேவைகள் இலகுவாக இருக்கிற காரணத்தினால் அரசுகள் இன்று தனியார் மயப்படுத்தும் முடிவுகளை எடுத்து வருகிறது. இப்படியான கால நிலையில் வாழும் மக்கள் மகிந்தாவின் போதனையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  

நான்கு மாநிலங்களைக் கொண்ட ஐக்கிய இராஜ்ஜியம் கூட்டாட்சி முறையில்லாத காரணத்தினால் பல இன்னல்களை சந்திக்க நேர்ந்தது. அயர்லாந்து மக்கள் சுதந்திரத்துக்காக போராடி இன்று அதிக அதிகாரங்களைப் பெற்று ஆட்சி செய்கிறார்கள். இது போன்ற படிப்பினைகளையாவது மகிந்தா அறிந்து பேசினால் நன்றாக இருக்கும். 

மூன்று ஆண்டுகள் போர் ஓய்ந்து இருக்கும் காலத்தில் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் போர்க் காலங்களில் அனுபவித்ததிலும் விட அதிகம். மனித உரிமை மீறல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கிறது. கனடாவிலிருந்து சென்ற கனடியக் குடிமகனுக்குக் கூட சிறிலங்காவில் பாதுகாப்பு இல்லாத நிலையே இன்று நிலவுகிறது. அரசியல்இ பொருளாதாரம்இ கல்விஇ காணி போன்ற விடயங்களில் தாமே முடிவு எடுக்கும் மக்களாக தமிழர்கள் ஈழத்தில் மலர்ந்தாலே ஒட்டுமொத்த இலங்கைத் தீவு மக்களும் சமாதானமாக வாழ்கிறார்கள் என்று கருத முடியும்.

பதில் சொல்லியே ஆக வேண்டும்

ஐ.நா.வின் போர்க்குற்ற விசாரணைக்கு வெறும் அறிக்கைவாயிலாகத் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துவந்த ஆஸ்திரேலிய அரசுஇ நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதியில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணையை பக்கசார்பற்றவர்கள் நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளது. தண்டனையை குற்றவாளிகளுக்குப் பெற்றுத்தர சிறிலங்கா அரசு தாமதிக்குமேயானால் சர்வதேச சமூகம் விரைந்து சில செயற்பாடுகளை எடுக்கும் என்று சமீபத்தில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் தொடர்ந்தும் சிறிலங்காவின் அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகிறார்கள். சிறிலங்காவில் மனித உரிமைகள் மேம்பாடு குறித்து வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதுடன்இ தமிழர்களுடன் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதையும் ஒபாமா நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.

“இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து தெளிவான நிலைப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட வேண்டும். அதுவேஇ உண்மையான சமாதானத்தை ஏற்படுத்த காத்திரமான பங்களிப்பை வழங்கும்...இந்த இலக்கை அடைய சிறிலங்கா அரசாங்கமும் பொதுமக்களும் கடுமையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்" என்று கனடா கேட்டுள்ளது. மனித உரிமை மீறல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் கனடா அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது எனச் சுட்டிக்காட்டியுள்ளது கனேடிய அரசு.

எதிர்வரும் 2013-ஆம் ஆண்டில் சிறிலங்காவில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு முன்னதாக மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டுமென சில மாதங்களுக்கு முன்னர் கனடா வலியுறுத்தியது. சிறிலங்கா விவகாரத்தில் கனடா வெறுமனே வார்த்தைகளினால் கருத்துக்களை வெளியிட்டு அமைதி காக்காது என கனேடிய வெளிவிவகார அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் தீபக் ஒபராய் தெரிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இடற்கிடையில்இ கனேடியக் குடிமகனான 53 வயதான அந்தோனிப்பிள்ளை மகேந்திரராசா என்பவர் கிளிநொச்சியில் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார். இவருடைய சடலம் கனடாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன. இவருடைய கொலையின் பின்னணியில் சிறிலங்காவின் இராணுவத்தினரே இருந்துள்ளார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. கொலையாளிகளை கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது கனேடிய அரசு. சிறிலங்கா ஒரு தோல்வியுற்ற நாடு என்பதனை மேற்குலகம் அறியும் நாள் வெகு தொலைவில் இல்லை.

உலக நாடுகளை ஏமாற்றவும்இ தமிழர்களின் அரசியல் தாகத்தைத் தணிக்கவும் பல நாடகங்களை அரங்கேற்றி வருகிறது மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு.  போர் ஓய்ந்துவிட்டதாகக் கூறினாலும் மறைமுகமான பல இராணுவ செயற்பாடுகளைத் தமிழர்களுக்கு எதிராக செய்தே வருகிறது சிங்கள அரசு. வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற குடிமக்களையே கொலை செய்யும் அளவுக்கு துணிச்சல் பெற்றுள்ளது மகிந்தாவின் அரசு. இப்படிப்பட்ட மகிந்தாவை பிரித்தானிய மகாராணியின் விழாவில் பங்கேற்க அழைத்திருப்பது மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் உலகத் தமிழர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனலை நிதிஸ் ச. குமாரன்