ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நெருக்கடியை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் கடும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாகவே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டம் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது. வரும் நவம்பர் முதலாம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் - நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் இடம்பெறும்- பூகோள கால மீளாய்வில் இலங்கை பற்றிய மீளாய்வு இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கு நெருக்கடிகள் வருவதைத் தவிர்க்க வேண்டியுள்ளது. காரணம், இதுவரை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கைக்கு ஆதரவாக இருந்த நான்கு நாடுகள் இப்போது இல்லை. அதிலும் குறிப்பாக சீனா மற்றும் ரஸ்யாவின் இழப்பு இலங்கைக்கு மிகவும் பாதகமானது.
கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அதை முறியடிப்பதற்கு இந்த நாடுகள் பெரும் உதவி வழங்கின. இந்தியா கடைசி நேரத்தில் கைவிட்டதும், சீனாவே நேரடியாக களமிறங்கி ஆதரவு திரட்டியது. அதனால் தான் பல நாடுகள் தீர்மானத்தை எதிர்க்கவும், சில நாடுகள் வாக்களிப்பில் இருந்து ஒதுங்கவும் முடிவு செய்தன. வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள மீளாய்வின் போது இந்த நாடுகள் எதுவும் இல்லை என்பது இலங்கைக்கு உளவியல் ரீதியாகவே ஒரு பலவீனம் தான். இவற்றுக்குப் பதிலாக உள்ளே வரப்போகும் நாடுகள் இலங்கைக்கு ஆதரவு கொடுக்க முன்வந்தாலும் கூட, அது ஒருபோதும் சீனா, ரஸ்யா அளவுக்கு பெருமளவில் மனோபலத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கமாட்டாது. அடுத்த நவம்பரில் பூகோள கால மீளாய்வுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று நாடுகளில் ஸ்பெயின் மற்றும் பெனின் ஆகியன ஏற்கனவே ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்தவை. அதைவிட இலங்கை விவகாரத்தில் அக்கறை காட்டாதவை.
மூன்றாவது நாடான இந்தியாவும் கூட ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்த நாடு தான்.
ஒருமுறை இந்தியா ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்த நிலையில் தொடர்ந்தும் அதே நிலைப்பாட்டில் இருக்குமா என்ற கேள்வி இருக்கவே செய்கிறது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தளவில் ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்து விட்டு, அந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் இலங்கைக்கு கை கொடுக்க முனைந்தால் இந்தியாவின் சர்வதேச மதிப்பு கெட்டுவிடும். இந்தியா சந்தர்ப்பவாதத்துடன் நடந்து கொள்வதாக கருதப்பட்டு விடும். எனவே நவம்பர் மீளாய்வின் போது கடுமையான நிலைப்பாடுகளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், இலங்கை ஒரு செயற்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று இந்தியா அழுத்தம் கொடுத்து வந்தது. அதுமட்டுமன்றி, இந்த விடயத்தில் அமெரிக்காவும் கடும் அழுத்தங்கள் கொடுத்திருந்தது. இந்த செயற்திட்டத்தை, கடந்த மே மாதம் வொசிங்டனுக்கு வரும்போது வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்கா கேட்டிருந்தது. ஆனால் அப்போது செயற்திட்டத்தை தாம் கையளிக்கவில்லை என்றது அரசாங்கம். கையளிக்கப்பட்டது என்றது அமெரிக்கா. அதுமட்டுமன்றி இந்த செயற்திட்டத்தை கொழும்பில் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியிருந்தது. இதனடிப்படையில் தான் அரசாங்கம் இந்த செயற்திட்டத்தை வெளியிட்டது என்பது உறுதியாகவே தெரிகிறது. இந்த செயற்திட்டமானது சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து தயாரிக்கப்பட்டது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது. அரசாங்கம் வேண்டுமானால் அதை தாம் சுயமாகத் தயாரித்ததாக கூறலாம். ஆனால் சர்வதேச அழுத்தங்கள் தான் இதை தயாரிக்க அல்லது விரைவாகத் தயாரிக்க அழுத்தம் கொடுத்தது. அதிலும் அமெரிக்கா, இந்தியாவின் அழுத்தங்கள் இதில் மிகுதியானது.
வரும் நவம்பர் மாத மீளாய்வு ஒருபக்கம் இருக்க, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடரில் தான் மிகப்பெரிய சவாலே காத்திருக்கிறது. ஜெனிவா தீர்மானத்தின் படி, அந்தக் கூட்டத்தில், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளதை இலங்கை நிரூபிக்க வேண்டும். இதில் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நாயகம் இலங்கை பற்றிய அறிக்கையை சமர்ப்பிப்பார். அதில் பொறுப்பை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக குறிப்பிடப்பட்டால், கதை கந்தலாகி விடும். அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஆராயத் தொடங்கி விடும். இதனால் தான் அரசாங்கம், பிடிவாதம் பிடித்து முரண்டு பிடிக்காமல் செயற்திட்டத்தை தயாரித்துள்ளது. இந்த செயற்திட்டத்தின் முக்கியமான அம்சமே போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தான். அதை விசாரிக்க ஒரு ஆண்டும், ஆதாரங்களைத் திரட்ட இரண்டு ஆண்டுகளும், நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள 2 ஆண்டுகளுமாக மொத்தம் 5 ஆண்டுகள் காலஅவகாசம் கோரப்பட்டுள்ளது.
இது ஒரு மிக நீண்டகால அவகாசம்.
இழுத்தடிப்பதற்கான தந்திரோபாயம் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் இப்போதைக்கு அரசாங்கம் நழுவிக் கொள்வதற்கு போதுமானது.
போர்க்குற்ற விசாரணை என்று வலியுறுத்தி வந்த சர்வதேச சமூகத்தின் வாயை அடைப்பதற்கான ஒரு பொறிமுறையை அரசாங்கம் வெளிக்காட்டியுள்ளது. இது இழுத்தடிப்பதற்கான தந்திரோபாயம், நியாயமான விசாரணைகள் நடக்காது என்றெல்லாம் கூறப்பட்டாலும், சர்வதேச சமூகம் அதாவது அமெரிக்காவோ அல்லது ஐ.நாவின் அமைப்புகளோ அப்படி இதை உடனடியாக நிராகரிக்க முடியாது. நியாயமான விசாரணைகள் நடக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்கு அவர்கள் குறி்ப்பிட்ட காலஅவகாசத்தை வழங்கியே ஆகவேண்டும். அந்தக் கால இடைவெளியை அரசாங்கம் இப்போது பயன்படுத்திக் கொள்ளப் போகிறது. எனவே அடுத்தடுத்த ஜெனிவா கூட்டத்தொடர்களில் போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை அரசுக்கு எதிராக நகர்வுகளை மேற்கொள்வது சிரமமானது.
இலங்கை அரசாங்கம் அடுத்த இரண்டு கூட்டத்தொடர்களில் இருந்து தன்னைப் பாதுகாப்பதில் இப்போதைக்கு தற்காலிக வெற்றிகண்டுள்ளது என்றே கூறலாம். இது நீண்டகால வெற்றியாக அமையும் என்பதற்கு உத்தரவாதம் இல்லாவிட்டாலும் குறுகிய வெற்றி என்பது உண்மையே
கட்டுரையாளர் ஹரிகரன் இபோதமிழ் குழுமம்

0 கருத்துரைகள்:
Post a Comment