இந்திய நாடாளுமன்றக் குழுவின் பயணத்தை அடுத்து, வடக்கில் இருந்து படைகள் விலக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் வலுப்பெறத் தொடங்கியுள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து, மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனாலும், வடக்கிலும் கிழக்கிலும் நிலைகொண்டுள்ள படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படவோ, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் அவர்களின் தலையீடுகள் குறைக்கப்படவோ இல்லை. இந்திய நாடாளுமன்றக் குழுவின் பயணத்தின் போது வடக்கிலுள்ள மக்களால் இது குறித்து விசனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. தாம் எங்கு சென்றாலும் படையினர் தம்மைக் கண்காணிப்பதாகவும், எல்லா விடயங்களிலும் அவர்கள் தலையிடுவதாகவும் அவர்கள் குறைபட்டுக் கொண்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான நீண்ட போரில்- கிட்டத்தட்ட 3 தசாப்தங்களாக - படையினர் தமிழ் மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளவோ அல்லது நட்புடன் பழகவோ இல்லை. தமிழ்மக்களை அவர்கள் அடிமைகள் போன்றே நடத்தினர். மிருகங்களை விடவும் கேவலமாக வதைத்தனர். இதையெல்லாம், தமிழ்மக்களால் இலகுவில் மறந்துவிட முடியாது. அதுபோலவே, படையினரின் நடவடிக்கைகள், தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களாலும் அதை இலகுவில் மறக்க முடியாது. இப்படியானதொரு சூழலில் படையினரின் அதிகரித்த தலையீட்டை அவர்கள் ஒரு தொந்தரவாகவே, தமது இயல்பு வாழ்வுக்கு குறுக்கே நிற்கும் தடையாகவே கருதுகின்றனர்.
மீளவும் புலிகள் வந்து விடுவர் என்றும், புதிய கிளர்ச்சி உருவாவதைத் தடுக்கவே படையினர் வடக்கில் நிலை கொண்டுள்ளதாகவும் அரசாங்கம் நியாயம் கற்பிக்கிறது. தெற்கில் ஒன்றுக்கு இரண்டு ஆயுதக் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. ஆனாலும், அதற்குப் பின்னர் இந்தளவுக்குப் பாரிய படைக்குவிப்புகள் அங்கு இருக்கவில்லை. வடக்கிலும் கிழக்கிலும் தான் இந்தநிலை. அதிலும் குறிப்பாக வடக்கில் படைச்செறிவு மிகமிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை இராணுவத்தின் பெரும்பாலான படையினரும், படைப்பிரிவுகளும் வடக்கில் தான் நிலை கொண்டுள்ளன.
முன்னர், இருந்ததை விட மிகக் குறைந்தளவு படையினர் தான் வடக்கில் நிலை கொண்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கூறியுள்ளார். ஆனால், வடக்கில் இருந்த ஒரே ஒரு டிவிசன் மட்டும் தான், அதுவும் அதிரடிப்படைப் பிரிவு என அழைக்கப்பட்ட அரை நிலை டிவிசன் ஒன்று தான் இதுவரை, வடக்கில் இருந்து தென்பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. மீதமுள்ள எல்லா டிவிசன்களும் வடக்கிலும் கிழக்கிலும் தான் உள்ளன. வடக்கில் யாழ்ப்பாணம், வன்னி, கிளிநொச்சி, முல்லைத்தீவு என்று 5 படைத் தலைமையகங்கள் உள்ளன. இவை தவிர, கிழக்கில் ஒன்றும், தெற்கில் ஒன்றும் படைத் தலைமையகங்கள் இருக்கின்றன.
மொத்தமுள்ள ஆறு இராணுவத் தலைமையகங்களில் ஐந்தும் வடக்கு, கிழக்கில் தான் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவத்தில் 11, 12, 21, 22, 23, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 61, 62, 63, 64, 65, 66, 67, 68 என்று மொத்தம் 22 டிவிசன்கள் மற்றும் அதரடிப்படைப் பிரிவுகள் உள்ளன. இவற்றில் 11, 12, 62வது டிவிசன்கள் தவிர மீதமுள்ள அனைத்துமே வடக்கிலும் கிழக்கிலும் தான் நிலை கொண்டுள்ளன. இலங்கையின் மொத்தப் பரப்பளவில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்குள்ள இந்த இரு மாகாணங்களிலும், இலங்கை இராணுவத்தின் மொத்தமுள்ள 6 படைத் தலைமையங்களில் ஐந்தும், மொத்தமுள்ள 22 டிவிசன்களில் 19ம் நிலைகொண்டுள்ளன.
சனத்தொகை அடர்த்தி என்ற வகையில் பார்த்தால், இந்த இரு மாகாணங்களிலும் 25 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.
சுமார் இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின், வெறும் 12.5 வீத மக்கள் வாழும் வடக்கு, கிழக்கில் இலங்கை இராணுவத்தின் 80 வீதமான படைப்பிரிவுகள் நிலைகொண்டுள்ளன. இந்தநிலையில் தான், போரின் போது இருந்ததை விட அரைப்பகுதியாக படையினரின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளதாக இராணுவத்தரப்பு நியாயம் கூறியுள்ளது.
யாழ்ப்பாணத்தில், தான் பதவியேற்ற போது 26 ஆயிரம் படையினர் இருந்தனர் என்றும், தற்போது. 16 ஆயிரம் படையினரே உள்ளதாகவும் கூறியுள்ளார் யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க.
இது சரியான கணக்கா என்பது தெரியவில்லை.
ஏனென்றால், யாழ்ப்பாணத்தில் படையினரின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைத்துள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
இராணுவத் தளபதிகள் கூறியுள்ளது போலவே, யாழ்ப்பாணத்தில் படைக்குறைப்பு இடம்பெற்றுள்ளது என்று வைத்துக் கொண்டாலும் கூட, அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்வில் படையினரின் தலையீடுகள் குறைந்ததாகத் தெரியவில்லை.
முல்லைத்தீவின் மக்கள் தொகை வுறும் 62 ஆயுரம் தான்.
இங்கு 59, 64, 68 என மூன்று டிவிசன் படையினர் உள்ளன.
கிட்டத்தட்ட 24 ஆயிரம் படையினர்- 2.5 பொதுமக்களுக்கு 1 படையினர் விகிதத்தின் அடிப்படையில் நிலைகொண்டுள்ளனர்.
இந்திய நாடாளுமன்றக் குழுவினர் வடக்கில் படைக்குறைப்பு குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் பேசியிருந்தனர். ஆனால் அதற்கு அவர் இணங்கவில்லை. நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்று தான் வடக்கிலும் படையினர் நிலை கொண்டுள்ளதாகக் கூறியதுடன், வடக்கில் இருந்து அகற்றும் படையினரை இந்தியாவுக்கா அனுப்ப முடியும் என்றும் என்றும் கேள்வி கேள்வி எழுப்பியிருந்தார். நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே, வடக்கிலும் படைகளை நிறுத்தியுள்ளதாக அவர் கூறினாலும், ஏனைய பகுதிகளில் உள்ள நிலைக்கும் வடக்கில் உள்ள நிலைக்கும் வித்தியாசம் உள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் - அவர்களின் குடியிருப்புகளுக்கு இடையே – முகாம்களோ காவலரண்களோ இல்லை. பொதுமக்களின் காணிகள், வீடுகளை அபகரித்து படைத்தளங்கள் அமைக்கப்படவில்லை. பொது நிகழ்வுகளிலோ, சிவில் நிர்வாகத்திலோ இராணுவத் தலையீடுகள் இல்லை.
ஆனால் இவையெல்லாம் வடக்கில் உள்ளன.

வடக்கில் தமிழர்களின் பொருளாதார வளம்மிக்க பகுதிகள் இராணுவத் தளங்களுக்காக அபகரிக்கப்பட்டுள்ளன.
வலி-வடக்கில் தொடங்கிய இந்த ஆக்கிரமிப்பு இன்று புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் வரை வந்து நிற்கிறது.
இங்கெல்லாம் பாரம்பரியமாக குடியிருந்த மக்கள் மீளக்குடியேற அனுமதிக்க முடியாது என்று உறுதியாகவே கூறப்பட்டுள்ளது. இதற்கு நியாயம் கேட்கப் போனால், புலிகள் தடைசெய்த போது சும்மா தானே இருந்தீர்கள் என்று அரசதரப்பு பதில் கேள்வி தொடுக்கிறது. அப்படியானால், புலிகள் அன்று செய்ததும் இராணுவத்தரப்பு இன்று செய்வதும் ஒன்றா என்ற கேள்வி எழுகிறது. புலிகள் இவற்றைச் செய்த போது அதைப் பயங்கரவாதம் என்று கூறிய அரசாங்கம், அதையே இன்று தானும் செய்கிறது. இந்தியக் குழு வடக்கில் முழுமையான படைவிலக்கத்தை வலியுறுத்தவில்லை. பொதுமக்கள் மத்தியில் இருந்து, அவர்களின் அன்றாட வாழ்வின் மீதான தலையீடுகளில் இருந்து விலக்கும்படி தான் கோரியது. அரசாங்கம் அதற்கும் தயாராக இல்லை. வடக்கில் இராணுவ – பொதுமக்கள் உறவுகளைக் கட்டியெழுப்புவது என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், சீருடைகளுடன் சிவிலுடைகளை ஒன்றிணைப்பது கடினமானது.
தமிழ்மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த போது கூட, விடுதலைப் புலிகளும் இதே பிரச்சினையை எதிர்கொண்டனர். 1990க்கு முன்னர் சாதாரண உடையில் இருந்த போது, மக்களுடன் இருந்த நெருக்கமான உறவு, அவர்கள் சீருடைக்கு மாறிய பின்னர் குறைந்து போனது. இது அவர்கள் எதிர்கொண்ட முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று. அவர்களின் தோல்விக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று. இதே பிரச்சினையை இராணுவத்தரப்பு எதிர்கொள்வது ஒன்றும் ஆச்சரியமில்லை.
வடக்கில் சிவில் நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்தவும், இராணுவத் தலையீடற்ற இயல்பு வாழ்வை உருவாக்கவும் அரசாங்கம் தயங்குகிறது. ஆனால், இந்தியக் குழுவின் வருகையை அடுத்து, வடக்கில் இராணுவத் தலையீடுகளைக் குறைக்கும் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதன் மூலம் தான் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இருந்து இராணுவத் தலையீடுகளைக் குறைக்க முடியும். இராணுவத் தலையீடுகளற்ற சிவில் நிர்வாகம் உருவாக்கப்பட்டால் தான், சர்வதேச சமூகம் அதனை இயல்புநிலையாக கருதும் நிலை உருவாகும்.
கட்டுரையாளர் இன்போ தமிழின் இராணுவ ஆய்வாளர் சுபத்ரா

0 கருத்துரைகள்:
Post a Comment