Wednesday, March 28, 2012

"அமெரிக்காவின் தீர்மானம் அரசியல் தந்திரத்துடன் கூடிய ஏமாற்று வேலை'


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மனித உரிமைகள் விடயம் குறித்து செய்வதற்கு எதுவுமே இல்லாத நிலைமை தென்படுவதாக டி.என்.ஏ. செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக டி.என்.ஏ.யின் செய்தி ஆய்வில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கைக்கெதிரான அமெரிக்காவின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தார்மீக ரீதியான நியாயப்பாடு இல்லாத நிலையே தோன்றுகிறது. 40 ஆயிரம் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழர்கள் தொடர்ந்தும் நெருக்கடிக்குள் உட்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விடயமானது சர்வதேச கண்டனத்திற்குப் பொருத்தமான விடயமாகக் காணப்படுகிறது. அதேவேளை, சர்வதேச தலையீடு இடும்பெறுமானால் அது நியாயப்படுத்தக்கூடியதாக வே அமையும். அமெரிக்காவினால் முன்னகர்த்தப்பட்ட இந்தத் தீர்மானமானது விளங்கப்படுத்துவதற்கு கடினமான மர்மமாகவே காணப்படுகிறது. இந்தத் தீர்மானத்திற்கு 24 நாடுகள் ஆதரவளித்திருந்தன. இந்தியாவும் அதற்கு ஆதரவளித்த நிலையில் அது நிறைவேற்றப்பட்டிருந்தது.  அதேவேளை அமெரிக்கா இஸ்ரேலின் குடியிறுப்புக்கள் அமைக்கப்பட்ட விதம் குறித்து விசாரணையை மேற்கொள்வதற்கான தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருந்தது. அந்தத் தீர்மானத்திற்கு 36 வாக்குகள் ஆதரவாகக் கிடைத்ததுடன் 10 நாடுகள் பங்கேற்றிருக்கவில்லை. அமெரிக்கா மட்டுமே எதிராக வாக்களித்திருந்தது. இந்த விடயமானது அமெரிக்காவின் தார்மீக வரட்டுத்தனத்தைக் கோடிட்டுக் காட்டுவதுடன், இஸ்ரேலின் சட்டவிரோதக் குடியேற்றங்களுக்கு எதிரான சர்வதேச உணர்வுகள் அதிகளவு காணப்படுவதை உயர்த்திக்காட்டியிருக்கிறது. 

பாலஸ்தீன மக்களின் பிரச்சினையானது சர்வதேச சமாதானத்தின் எதிர்பார்ப்புகளுக்கு பாரதூரமான அச்சுறுத்தலைக் கொண்டதாகக் காணப்படுகிறது. இது தொடர்பாக சர்வதேச கவனம் அவசரமாகத் தேவைப்படுகிறது. அதேவேளை இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு அரசுகள் அமைந்திருப்பதற்கு அமெரிக்கா பகீரங்கமாகவே ஆதரவைத் தெரிவித்திருந்தது. இந்த நீண்டகால சர்ச்சைக்கு சாத்தியமான தீர்வு இதுவாகவே மட்டும் இருக்குமென்ற நிலைப்பாட்டை அமெரிக்கா கொண்டிருக்கிறது. ஆயினும் தேவையற்ற போசிப்பை இஸ்ரேலின் விஸ்தரிப்பு முன்னெடுப்புகளுக்கு அமெரிக்கா வழங்குகிறது. பலஸ்தீன பிரச்சினை தொடர்பான தீர்மானமானது வரலாற்று பூர்வமாக விரக்தியடைந்த நிலையில் கொண்டுவரப்பட்ட விடயமாகும். இது தீர்வு காணக்கூடிய விடயமாகக் காணப்படுகிறது. இந்த விடயத்தில் செயற்படுவது தொடர்பாக அமெரிக்கா தீர்மானத்தால் இது தீர்வு காணக்கூடிய விடயமாகும். 

கடந்த வருடம் ஐ.நா. வின் உறுப்பு நாடாக பலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டுமென பலஸ்தீன அதிகாரி சபையின் ஜனாதிபதி அப்பாஸ் கோரியிருந்தார். ஆனால், அமெரிக்காவின் அஸித்தத்தினால் அதிகாரிகள் மட்ட கெடுபிடிக்குள் இந்தக் கோரிக்கை சிக்கியிருக்கின்றது. ஆயினும் யுனெஸ்கோவில் (அங்கு எந்த நாட்டிற்கும் வீட்டோ அதிகாரம் இல்லை) பலஸ்தீனம் தனது புது உறுப்பினர் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. யுனெஸ்கோவில் பலஸ்தீனம் பிரவேசிப்பதை அமெரிக்காவினால் நிறுத்த முடியவில்லை. ஆயினும் அந்த முகரமைப்புக்காக நிதி வழங்குவதைக் குறைப்பதாக அமெரிக்கா பதிலளித்திருக்கிறது. தனது பதவியை ஏற்றுகு“கொண்ட போது இஸ்ரேல்பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி ஒபாமா அறிவித்திருந்தார். ஆனால், கவலையான விதத்தில் பலஸ்தீனம் பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இப்போது ஈரானின் அணு சர்ச்சை முன்னணிக்கு வந்திருக்கிறது. இராணுவ நடவடிக்கைக்குத் தேவைப்படும் அணு வல்லமைக்கு ஈரான் இதுவரை வந்திருக்கவில்லை.  ஆனால் ஈராக் அணு ஆயுதத்தை வைத்திருந்த போது அமெரிக்காவும் நேச அணிகளும் அதனை ஆக்கிரமித்திருந்தனவா? ஈராக்கிடம் அணு ஆயுதம் இருப்பதை சர்வதேச அணு சக்தி அதிகார சபையினால் நிரூபிக்க முடியவில்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபையிலும் தெளிவான ஆணை கிடைத்திருக்கவில்லை. ஆனால், அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்தது. ஆனால், ஒரு சிறியளவு அணு ஆயுதத்தைக் கூட அமெரிக்காவால் அங்கு கண்டுபிடித்திருக்கவில்லை. இந்த விடயம் தனது ஜனாதிபதி பதவியில் ஏற்பட்ட பாரிய கவலையென புஷ் ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத்தள்ளப்பட்டிருந்தது.

சர்வதேச தார்மீகக் கோட்பாட்டுத் தன்மைகளைக கொண்டிருப்பதற்கான அம்சத்தை அமெரிக்கா எந்தவிதத்திலும் வைத்திருக்கவில்லை. உண்மையான அரசியலுக்கான புகை மூட்டமாகவே சர்வதேச மனித உரிமைகள் கருத்தீடு காணப்படுகிறது. அப்பாவி மக்களை கொடூரமான முறையில் இலங்கை இராணுவம் கொன்றது. மேற்குலகில் உள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, பி.பி.சி. சனல் 4, த கார்டியன் ஆகியவை சாதகமான அபிப்பிராயத்தை நம்பிக்கையான முறையில் இது தொடர்பாகக் கட்டியெழுப்புவதற்கு உந்து சக்தியாக அமைந்திருந்தன. மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு உரிய சாதகமான அபிப்பிராயத்தை இந்த மேற்குலகம் மேற்கொண்டிருந்தது என்றது.

தினக்குரல்

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment