புலிகளைத் தண்டிப்பதாக நினைத்து- தமிழர்கள் கொல்லப்படக் காரணமாகி விட்டோமே என்ற குற்றஉணர்ச்சியும் காங்கிரசின் தமிழகத் தலைவர்களை வாட்டியது. இதனால், காங்கிரசின் தலைவர்கள் கூட மத்திய அரசுடன் மல்லுக்கட்டத் தொடங்கினர். இதனால், இந்திய அரசுக்கு வேறு வழியிருக்கவில்லை. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இலங்கையைக் காப்பாற்ற இந்தியா தயாராகி விட்டது என்பதை ஜெனிவாவில் இந்தியப் பிரதிநிதியும், நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜியும் வெளியிட்ட கருத்துகள் குறிப்புணர்த்தியதை அடுத்து- தமிழ்நாட்டில் இருந்து அழுத்தங்கள் தீவிரம் பெற்றன. எந்தக் கருத்தையும் கூறாமல் முதலில் தீர்மானம் வரட்டும் பார்க்கலாம் என்ற எஸ்.எம். கிருஸ்ணாவின் பாணியில் கூறியிருந்தால் கூட இந்தியா தப்பியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் கொள்கை விளக்கம் கொடுக்கப் போய் தான் வசமாக மாட்டிக் கொண்டது. எந்த நாட்டுக்கும் எதிரான தனிப்பட்ட தீர்மானங்களை ஆதரிப்பதில்லை என்பதே தமது கொள்கை என்று இந்தியா கூறிய நியாயம் தவறானது. ஏற்கனவே இந்தியா இத்தகைய தீர்மானங்களை ஆதரித்தற்கான உதாரணங்கள் உள்ளன.இந்தியாவின் இந்த முடிவு இலங்கைக்கு பெரும் ஏமாற்றத்தை மட்டும் கொடுக்கவில்லை, தீர்மானத்தைத் தோற்கடிக்கும் அதன் முயற்சியிலும் பாரிய தடைக்கல்லையும் ஏற்படுத்தியது. இந்தியாவின் இந்த முடிவு இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றே இருநாடுகளும் கூறுகின்றன. இந்த முடிவை மதிப்பதாக இலங்கை கூறினாலும் கூட அது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்தியா தனது முடிவை நியாயப்படுத்த எத்தகைய காரணங்களைக் கூறினாலும், அது இலங்கையை முழுமையாகத் திருப்திப்படுத்துமா என்பது சந்தேகம் தான்.
இந்தியா எடுத்த முடிவை இலங்கை அரசு ஏற்குமா?
ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானம் இந்தளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று இந்தியா கருதியிருக்கவில்லை. வழக்கம் போலவே மதில் மேல் பூனையாக இருந்து இலங்கையைக் காப்பாற்றி விடலாம் என்றே அது நம்பியிருந்தது. ஆனால் இந்தியாவின் அந்த எதிர்பார்ப்பு பொய்யாகிப் போனது. 2009 மே மாதம்- போரின் இறுதிக் கட்டத்தில், இந்தியா தலையிட்டுப் போரை நிறுத்த வேண்டும், தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டிலும், உலகெங்கிலும் இருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோள்களைப் புறக்கணித்த இந்திய அரசு இப்போது, பணிந்தேயாக வேண்டிய கட்டாயத்துக்கு வந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கின்ற நிலைப்பாட்டில் முன்னர் இருக்கவில்லை என்பதே உண்மை.
ஆனால் அதை இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தவில்லை. மதில் மேல் பூனையாக இருந்து கொண்டு எந்தக் கருத்தையும் வெளியிடாமல் பார்த்துக் கொண்டது. எவ்வாறாயினும் இலங்கையைக் கைவிடும் திட்டத்தை இந்தியா ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள நெருக்கமான, ஆனால் சிக்கலான ஒரு உறவு- இலங்கையை காப்பாற்றும் முடிவையே இந்தியா எடுக்கும்- எடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தியிருந்தது. ஜெனிவா தீர்மான விடயத்தில், இந்தியா இரண்டு விடயங்களுக்காக இலங்கையைக் காப்பாற்ற முனைந்தது.இரண்டுமே இலங்கை மீதான பற்றுணர்வினால் அல்ல. இந்தியாவின் நலன்களுக்காகவே அவ்வாறு முனைந்தது.
முதலாவது,
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போதான மீறல்கள் பற்றிய விசாரிக்கப்படும் போது, அந்தப் போரில் இந்தியாவின் பங்கு தொடர்பாக தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடுமே என்ற அச்சம்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, இந்தியாவின் தார்மீக ஆதரவை இலங்கை பெற்றிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையில் கிரமமான தொடர்புகளின் மூலம்- நெருக்கமான உறவுகள் பேணப்பட்டன. இதன் மூலம் தான் இலங்கையால் போரில் வெல்ல முடிந்தது. சீனாவும், பாகிஸ்தானும், கொடுத்த ஆயுதங்கள் போரில் புலிகளைத் தோற்கடிப்பதில் எந்தளவுக்கு பங்களித்தனவோ, அதற்கு சமமாகவே இந்தியாவின் தார்மீக ஆதரவும் சில இராணுவ உதவிகளும் அமைந்திருந்தன. இந்தளவுக்கும் சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றுக்கும்- இந்தியாவுக்கும் இடையில் போட்டியும், பூசலும் உள்ளது. துருவங்களாக இருந்த இந்த அணிகளை ஒன்றிணைத்து புலிகளைத் தோற்கடிப்பதில் இலங்கை அரசாங்கம் வெற்றி கண்டது. இப்போது ஐ.நா விசாரணைகள் என்று வந்தால் அதில் இந்தியாவின் பங்கு என்ன என்ற கேள்வியும் ஒரு கட்டத்தில் வரலாம். இலங்கைப் போரில் இந்தியாவின் பங்கு என்ன என்ற கேள்வி எந்தச் சந்தர்ப்பத்திலும் வருவதை இந்தியா விரும்பவில்லை. அதனால் சர்வதேச தலையீடுகளில் இருந்து இலங்கையைக் காப்பாற்ற முனைந்தது- முனைகிறது.
இரண்டாவது,
சீனாவின் தலையீடுகள் பற்றிய கவலை.
போருக்குப் பின்னரான பொருளாதார உதவிகளை இந்தியா கொடுத்தாலும், இலங்கை அரசை தனது பிடிக்குள் வளைத்துப் போடுவதில் சீனா வெற்றி பெற்றே வருகிறது. ஜெனிவாவில் இந்தியா கைவிட்டால் அது சீனாவுடனான இலங்கையின் நெருக்கத்தை அதிகப்படுத்தி விடும் என்ற அச்சம் இந்தியாவுக்கு இருந்தது. இந்தியாவின் இந்த அச்சத்தை ஜெனிவா கூட்டம் நிரூபித்தும் விட்டது. இந்தியாவின் முடிவு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால், கடைசி நேரத்தில் இலங்கையைக் காப்பாற்றும் நடவடிக்கையில் சீனா மிகத் தீவிரமான அக்கறை காண்பித்தது. வெளிப்படையாகவே இலங்கைக்கு ஆதரவு திரட்டி அதன் நம்பிக்கையை சம்பாதித்தும் கொண்டது. இதுபோன்ற நிலை ஏற்படுவதைத் தான் இந்தியா விரும்பவில்லை. இதற்காகவே அது நழுவி வந்தது. எவ்வாறாயினும் இந்தியாவின் எண்ணம் தீர்மானத்தை எதிர்ப்பது அல்லது அது முடியாமல் போனால் நடுநிலை வகிப்பது என்பதாகவே இருந்தது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் பேசிய இந்தியப் பிரதிநிதி, நாடுகள் தொடர்பான தனிப்பட்ட தீர்மானங்களை ஆதரிப்பது இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என்று குறிப்பிட்டிருந்தார். இலங்கை தொடர்பான தீர்மானத்தை மனதில் வைத்தே அவர் இந்தக் கருத்தை முன்வைத்தார். இதே கருத்தை கடந்தவாரம் இந்திய நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் கூட கூறியிருந்தார். எனவே, இந்தியா இலங்கையைக் காப்பாற்றும் முடிவில் தான் இருந்தது. கடைசி சில தினங்களில் தான் அதன் முடிவு மாற்றமடைந்தது. இலங்கையைக் காப்பாற்ற இந்தியா தயாராகி விட்டது என்பதை ஜெனிவாவில் இந்தியப் பிரதிநிதியும், நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜியும் வெளியிட்ட கருத்துகள் குறிப்புணர்த்தியதை அடுத்து- தமிழ்நாட்டில் இருந்து அழுத்தங்கள் தீவிரம் பெற்றன. எந்தக் கருத்தையும் கூறாமல் முதலில் தீர்மானம் வரட்டும் பார்க்கலாம் என்ற எஸ்.எம். கிருஸ்ணாவின் பாணியில் கூறியிருந்தால் கூட இந்தியா தப்பியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் கொள்கை விளக்கம் கொடுக்கப் போய் தான் வசமாக மாட்டிக் கொண்டது.
எந்த நாட்டுக்கும் எதிரான தனிப்பட்ட தீர்மானங்களை ஆதரிப்பதில்லை என்பதே தமது கொள்கை என்று இந்தியா கூறிய நியாயம் தவறானது.
ஏற்கனவே இந்தியா இத்தகைய தீர்மானங்களை ஆதரித்தற்கான உதாரணங்கள் உள்ளன.
காசாவில் இஸ்ரேலின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் 2009ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. ஆனால் இலங்கை என்று வந்த போது அதன் நிலை தடுமாற்றமாக அமைந்தது. தமிழ்நாட்டில் இருந்து எழுந்த குரல்கள் இம்முறை தீவிரமாக இருந்தன.
2009 இல் நடத்தப்பட்ட போராட்டங்கள், போரில் சிக்கிய தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையிலானது. அப்போது புலிகள் விவகாரமும் சேர்ந்திருந்ததால், தமிழ்நாட்டுக் கட்சிகள் ஒன்றிணையவில்லை. இம்முறை அது வேறு வடிவத்தில் வந்தது. போர்க்குற்ற ஆதாரங்கள் பல வெளியாகி, நீதி கேட்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருந்தது. அதனால், இலங்கை அரசைத் தண்டிக்க வேண்டும் என்ற வகையில், இந்தப் போராட்டங்கள் உருவெடுத்தன. இதற்கு மறுப்புக் கூற யாராலும் முடியவில்லை. புலிகளைத் தண்டிப்பதாக நினைத்து- தமிழர்கள் கொல்லப்படக் காரணமாகி விட்டோமே என்ற குற்றஉணர்ச்சியும் காங்கிரசின் தமிழகத் தலைவர்களை வாட்டியது. இதனால், காங்கிரசின் தலைவர்கள் கூட மத்திய அரசுடன் மல்லுக்கட்டத் தொடங்கினர். இதனால், இந்திய அரசுக்கு வேறு வழியிருக்கவில்லை. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, இதுபற்றி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதத்துக்கு மேல் கடிதம் அனுப்பிக் கொண்டிருந்தார். திமுகவோ, இன்னொரு பக்கத்தில் மத்திய அரசில் இருந்து வெளியேறப் போவதாக மிரட்டியது. எல்லாப் பக்கங்களில் இருந்தும் வந்த உள்ளக அழுத்தங்கள், இந்தியாவின் வெளிவிவகாரம் பற்றிய நிலைப்பாட்டை மாற்றியமைக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தி விட்டது. இந்தியா இப்படிச் செயற்பட்டிருப்பது அபூர்வமான ஒன்று தான். உள்ளக அரசியல் வேறு. வெளிவிவகாரக் கொள்கை வேறு என்ற தொனியிலேயே அது இதுவரை இருந்து வந்தது. இப்போது இந்தியா, உள்ளக அரசியல் சூழலுக்கேற்ப, வெளிவிவகாரக் கொள்கை தீர்மானிக்கப்படலாம் என்ற உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, புதுடெல்லியில் ‘சவுத்புளொக்‘ எனப்படும் அதிகாரபீடம் தான் ஆட்சியாளர்களின் கொள்கையைத் தீர்மானிப்பதாக கூறப்படுவதுண்டு. அது உண்மையும் கூட. சவுத் புளொக்கின் இந்த வழக்கத்தை இந்தியாவின் சவுத் (தெற்கு) மாநிலமான தமிழ்நாடு உடைத்துப் போடக் காரணமாகியுள்ளது. பலமுனை அழுத்தங்களுக்கு அடிபணிந்தே இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், ஜெனிவா தீர்மானத்தை ஆதரிக்கும் விருப்பில் இந்தியா இருப்பதாக அறிவித்தார். இது நிர்ப்பந்தத்தின் பேரில் எடுக்கப்பட்ட முடிவே தவிர, மன்மோகன்சிங் குறிப்பிட்டவாறு விருப்பின் பேரில் எடுக்கப்பட்ட முடிவல்ல.
மன்மோகன்சிங் குறிப்பிட்ட இரண்டு விடயங்கள் தவறானவை.
முதலாவது,
தீர்மான வரைபு இன்னமும் கையில் கிடைக்கவில்லை என்று கூறியது.
தீர்மான வரைபை அமெரிக்கா இந்த மாதத் தொடக்கத்திலேயே உறுப்பு நாடுகளுக்குக் கொடுத்து விட்டது. அதைவிட தீர்மானத்தை வடிவமைக்க முன்னர், அமெரிக்கா, இதுபற்றி இந்தியாவுடன் தான் முதலில் கலந்துரையாடியது. இந்தநிலையில், பொறுப்பு வாய்ந்த ஒரு நாட்டின் பிரதமர் இவ்வாறு கூறியிருக்கக் கூடாது.
இரண்டாவது,
தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா விருப்பம் கொண்டுள்ளது என்பது.
தமிழ்நாட்டின் விருப்பங்களை புறக்கணிப்பதால், ஏற்படக் கூடிய பல தொடர்ச்சியான விளைவுகளின் ஆபத்தை உணர்ந்தே இந்த முடிவை இந்தியா எடுத்தது. இதனை வெளிவிவகார அமைச்சர் பீரிசிடம், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா நெரடியாகவே கூறியுள்ளார். இந்தியாவின் இந்த முடிவு இலங்கைக்கு பெரும் ஏமாற்றத்தை மட்டும் கொடுக்கவில்லை, தீர்மானத்தைத் தோற்கடிக்கும் அதன் முயற்சியிலும் பாரிய தடைக்கல்லையும் ஏற்படுத்தியது. இந்தியாவின் இந்த முடிவு இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றே இருநாடுகளும் கூறுகின்றன. இந்த முடிவை மதிப்பதாக இலங்கை கூறினாலும் கூட அது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்தியா தனது முடிவை நியாயப்படுத்த எத்தகைய காரணங்களைக் கூறினாலும், அது இலங்கையை முழுமையாகத் திருப்திப்படுத்துமா என்பது சந்தேகம் தான்.
இந்தநிலையில் கடைசி நேரத்தில் தன்னைக் காப்பாற்றாமல் கைகழுவிய இந்தியாவையும், கடைசி நேரம் வரை தன்னைக் காப்பாற்றப் போராடிய சீனாவையும், ஒரே தராசில் இலங்கை எடைபோடும் என்று நினைப்பது முட்டாள்தனம்.
நன்றி இன்போதமிழ்
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 கருத்துரைகள்:
Post a Comment