மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச அவர்களது வெற்றி சுலபமானதாக இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட போதும் பெரும்பான்மை சிங்கள வாக்குகளால் இலகுவாக வெற்றியடைந்துள்ளார். ஆரம்பத்திலிருந்தே சரத் பொன்சேகாவுடன் கடுமையான போட்டியை எதிர்கொண்ட ராஜபக்ச அவர்கள், சரத் பொன்சேகாவிற்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்ட வாக்குறுதியை 'தமிழரின் தனிநாட்டிற்கான உடன்படிக்கை' என ஊதிப் பெரிதாக்கினார். இந்த கருத்துருவாக்கத்திற்குள் சிங்களமக்களை அமிழ்த்தி, சிங்களப் பேரினவாதத்தை தூண்டி வெற்றியை தமதாக்கிக் கொள்ள மேற்கொண்ட இறுதித் தந்திரோபாயம் ராஜபக்ச அவர்களின் பெருவெற்றியில் காத்திரமான பங்கை வகித்துள்ளது.
இலங்கைத்தீவில் இரண்டு பெரும்பான்மை இனங்கள் (சிங்களதேசத்தில் சிங்களவரும் தமிழர் தாயகத்தில் தமிழரும்) வாழ்கின்றனர் என்ற உண்மையை இத்தேர்தல் தெளிவாகக் காட்டியிருக்கின்றது. எவ்வாறு 'சிங்கள ஆதிக்கநிலை மனப்பான்மை' என்ற கோட்பாட்டில் சிங்களப் பெரும்பான்மை இணைந்து வாக்களித்ததோ அதேபோல தமிழினமும் அதற்கெதிரான மனநிலையில் இருந்து வாக்களித்திருக்கின்றது.
சிங்கள மக்களைப் பொறுத்தவரையில், சரத் பொன்சேகா அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பொருளாதார மேம்பாடு, நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு மற்றும் பதினேழாவது அரசியல் திருத்தச்சட்டத்தில் கூறப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தல் போன்ற மிக முக்கியமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன.
அதேவேளை பொருளாதார நெருக்கடி, ஊழல், குடும்ப அரசியல் எனப் பல்வேறு அதிருப்திக் காரணிகள் மகிந்த ராஜபக்சவின் வாக்கு வீதத்தைக் குறைக்கும் காரணிகளாக இருந்தன. இருப்பினும் 'சிங்கள தேசியம்' என்ற ஒரே கோட்பாட்டில் மகிந்த ராஜபக்சவிற்குத் தமது வாக்குகளை சிங்களவர்கள் பெரும்பான்மையாகப் பதிவு செய்துள்ளனர்.
இலங்கைத்தீவு ஒரு சிங்கள பௌத்ததேசம் என்ற சிந்தனையைக் கொண்ட பெரும்பான்மை சிங்கள மக்கள் எந்த வாழ்வாதார, அரசியல், பொருளாதார மேம்பாட்டு வாய்ப்புக்களை கருத்தில் கொண்டும் தமிழ்மக்களுக்கான எந்த உரிமையையும் விட்டுக் கொடுக்க தயாரில்லை, என்பதுடன் தமிழ்மக்களை அடிமைகளாகக் கொண்ட ஓரினவாத சிங்கள பௌத்த நாடாகவே இலங்கைத்தீவை சிங்கள மக்கள் கருதுகின்றார்கள்.
தமிழ் மக்களுக்கான சிறு உரிமையைத் தன்னும் வழங்குவது தொடர்பில் சிங்கள மக்களோ! சிங்கள அரசியல் தலைமைகளோ! மனதளவிலும் தயாராக இல்லை என்பதை இத்தேர்தல் தெளிவாக சகலருக்கும் படம் போட்டு காட்டியுள்ளது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை 'ஆட்சிமாற்றத்திற்கான வாக்களிப்பு' என்பதைத் தவிர இத்தேர்தலில் அக்கறை கொள்வதற்கான காரணிகள் எவையும் இருக்கவில்லை. இதனால்தான்; ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு எதிராக தமிழ்மக்கள் தமது வாக்குளைப் பெரும்பான்மையாகப் பதிவுசெய்துள்ளனர். அதேவேளை, ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல்;, மனச்சோர்வு, வெறுப்பு காரணமாக பலர் வாக்களிப்பில் அக்கறையின்றி இருந்துவிட்டனர். குறிப்பிட்டளவு மக்கள் தேர்தலைப்புறக்கணித்தனர். பதிவு செய்யப்பட்ட வாக்ககளில் - ஒட்டு மொத்தமான தமிழர் பிரதேசத்தில் - சரத் பொன்சேகா அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்ட வாக்குகள் என்பது நிச்சயமாக மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான வாக்குகளேயன்றி பொன்சேகாவிற்கான ஆதரவு வாக்குகள் அல்ல.
தமிழ்மக்களின் நீண்டநாள் போராட்டத்திற்கான அடிப்படை நியாயங்களை இத்தேர்தல் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. தமிழர்களுக்கான அரசியல் விடுதலையின் இலக்கு எது?, எதை நோக்கி நகர வேண்டும்?, தமிழ்மக்களின் முழுமையான அரசியல் அடைவு இலங்கைத்தீவில் அவர்களின் இருப்பிற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது போன்றவற்றை தமிழ்மக்களுக்கு உணர்த்தியிருக்கின்றது.
அதேவேளை தமிழ்மக்களின் பிரச்சனைகளை ஜக்கிய இலங்கைக்குள் கையாள நினைக்கும் மேற்குலகத்திற்கு, தமிழ்மக்கள் அரசியல் விடுதலையைப் பெறுவதற்கான ஒரேவழியாக ஆயுதப்போராட்டப் பாதையை ஏன் தெரிவு செய்தார்கள்? அத்தீர்மானம் சரியா! பிழையா! சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் தமிழ் பேசும் மக்கள் இணைந்து செல்ல வாய்ப்புள்ளதா? போன்ற பல கேள்விகளிற்கான பதில்களையும் இத்தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது.
தமிழ்மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச அவர்களிற்கு எதிராக வாக்களித்ததைத் தொடர்ந்து தமிழ்மக்கள் மீதான கெடுபிடிகள் மேலோங்குகின்றன. திறந்தவெளி அகதிமுகாமில் இருக்கும் மக்களுக்கான வசதிகள் பராமரிப்புகள் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன அல்லது நிறுத்தப்படுகின்றன. இடம்பெயர்ந்த மாணவர்களுக்கான மாலைநேர வகுப்புக்கள் நிறுத்தப்படுகின்றன. யாழ்ப்பாணம் பயணிக்கும் பயணிகள் சோதனைச்சாவடிகளில் இறக்கி நடக்க விடப்படுகின்றனர் இவ்வாறான வெளிப்படையான பல அழுத்தங்களைத் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடத்தொடங்கியுள்ளது ராஜபக்ச அரசாங்கம்.
அத்துடன் சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பக்கம் இருந்து சரத் பொன்செகாவிற்கு ஆதரவு தெரிவித்த மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரின் வீட்டுக்கு கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டள்ளது. இதிலிருந்து தமிழ்மக்கள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் இசைவாக செல்லாதவிடத்து இராணுவ அச்சுறுத்தலுக்குள்ளால் அடிபணிய வைக்கப்படுவார்கள் என குறிப்புணர்த்தப்பட்டுள்ளது.
இச்சம்பவங்களினூடாக ராஜபக்ச அவர்களின் பேரினவாத முகம் மீண்டும் வெளிப்படுவதோடு, தனது அரசியல் இருப்பிற்கு தமிழ்மக்களை விட சிங்கள மக்களை திருப்திப்படுத்தி செயற்பட்டாலே போதுமானது என்ற சிந்தனையே வெளிப்பட்டு நிற்கின்றது. அத்துடன் அடுத்த பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியத்தை பின்பற்றும் கட்சிகளுக்குப் பின்னால் தமிழ்மக்கள் அணி திரளாமல் தடுப்பதற்கான செயற்பாடுகளின் ஆரம்பமே இவை என்பதும் வெளிப்படை.
இனி வரும் பொதுத்தேர்தலிலும் இனவாதம் வெளிப்பட்ட பிரச்சார அணுகுமுறைகளே வாக்குவங்கிகளைக் கைப்பற்றுவதற்கான உத்தியாக அமையும். தமிழ்மக்களின் உரிமைகள் தொடர்பாகப் பேசுவதற்கு சிங்களத் தலைவர்கள் தயங்குவார்கள் அத்துடன் சிங்களக்கட்சிகளுடன் இணைந்து செயற்படும் தமிழ் விரோத தமிழ்கட்சிகளும் கூட 'அபிவிருத்தி' என்பதைத்தவிர அரசியல் உரிமையுடன் தொடர்புபட்ட முக்கிய வாக்குறுதிகளை வழங்கப்போவதில்லை. சிங்கள பேரினவாத சிந்தனையே! சிறிலங்காவின் தேர்தல் வெற்றிக்கு அத்தியாவசியமானது என்ற சிந்தனைக்கான அடித்தளத்தையும் இத்தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் ஊடகங்களிற்கு வழங்கிய செவ்விகளில் ' தமிழ்மக்களுக்கான எந்த அரசியல் உரிமையும் பெரும்பான்மை சிங்களமக்களின் ஆதரவுடன்தான் வழங்கப்படும். பெரும்பான்மை இனமக்களின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய நிலையில்தான் நான் உள்ளேன் என மற்றவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் ' என்று கூறியுள்ளார்.
இறைமையுள்ள நாட்டின் அரசியல் யாப்பில் தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளை வழங்குவது கூட சிங்கள மக்களின் ஆதரவுடன்தான் வழங்க முடியும் என நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ராஜபக்ச அவர்கள் கூறியமையினூடாக இலங்கைத் தீவின் ஜனநாயகமும், அரசியல் யாப்பும் தமிழ் பேசும் மக்களுக்கான உரிமைகளை வழங்காது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகின்றது. அதேவேளை ஒர் இறைமையுள்ள நாட்டில் வாழும் மனிதன் அல்லது ஒரு இனம் அந்நாட்டில் கௌரவமாக, அரசியல் உரிமைகளுடன் வாழ்வதற்குரிய அடிப்படை நியமங்களை வழங்குவது அந்நாட்டின் கடமை என்பது ஜ.நா மனித உரிமை சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம்.
சிறிலங்காவின் தேர்தல் நடைபெற்ற மாவட்டங்களில் தமிழர்கள் ராஜபக்ச அவர்களிற்கு எதிராக வாக்களித்து தோல்வியடையச் செய்த மாவட்டங்களை குறித்துப்பார்த்தால் தமிழீழ தேச வரைபடம் தனித்துத் தெரிவதை காணமுடியும் என விமல் வீரவன்ச அவர்களே குறிப்பிட்டார். இலங்கைத்தீவில் இரு தேசங்கள் இருப்பதை சிங்களமும் கருத்தியல் ரீதியாக ஏற்றுக் கொண்டிருப்பதன் அடிப்படையில் வடக்கு கிழக்கை தாயகமாக கொண்ட தமிழ் பேசும் மக்களும் தமது சுயநிர்ணயம், தேசியத்தை வலியுறுத்தி ஏன் ஓரணியாக நின்று தொடர்ந்தும் போராட முடியாது?
சிங்களப் பேரினவாதம் எப்போதும் தமிழ்மக்களின் உரிமைகளை தராது என்பதை மீண்டும் வெளிப்படையாக சொல்லிவிட்டது. சிங்கள தேசத்தின் மக்கள் ஆதரவளித்து 'பிச்சை' போடுவதைப் போல தரும் அரசியல் உரிமைக்காக நாம் ஏன் அவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டும்? என்ற கேள்வி ஒவ்வொரு தமிழ்பேசும் மக்களின் மனங்களிலும் எழுகின்றது.
வரும் நாடாளுமன்றத் தேர்தல் தமிழ் மக்களுக்கு மிகவும் அவசியமான தேர்தல். இத்தேர்தலில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்ற கோரிக்கைகளை அடிப்படையாக கொண்ட அரசியல் அடைவை நோக்கி செயற்படுவதற்கான தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று, அதை மக்கள் அங்கீகாரமாக கொண்ட அரசியல் நகர்வுகளை தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகள் செய்யவேண்டும். இலங்கைத்தீவிலும், சர்வதேச அளவிலும் தமிழ்மக்களின் சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தை வலுப்பெற செய்ய வேண்டியதே எம் அனைவரின் முன்னால் உள்ள பிரதான அரசியல் செயற்பாடாக உள்ளது.
அத்துடன் சிங்கள தேசத்துடன் இணைந்து தமிழர் தேசத்து வாக்குகளை சிங்களவர்களுக்கப் பெற்றுக் கொடுத்து தமது வாழ்வரசியலை நடாத்தும் தமிழ் விரோத அரசியல்வாதிகளை இந்த ஜனாதிபதி தேர்தலில் நிராகரித்தது போலவே அடுத்த தேர்தலில் அவர்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்.
தற்போதுள்ள அரசியல் புறநிலையை புரிந்து சரியாக செயற்பட வேண்டிய கட்டாயத்தில் தமிழ்மக்கள் உள்ளனர். அதன் தார்மீக பொறுப்பு புலம்பெயர் மக்களின் கைகளிலும் விடப்பட்டுள்ளது. அரசியல் விடுதலையை வினைத்திறனாக ஓரணியில் முன்னெடுப்பதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைத்துப் பலப்படுத்தல், சரியான பாதையில் புலம்பெயர் நாடுகளில் போராட்டங்களை வலுப்படுத்தல், தமிழ்மக்களுக்கான அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கான புறநிலைகளை ஒருமுகப்படுத்தல், சிறிலங்காவின் பொருளாதாரத்தை மேற்குலகத்தில் வலுவிழக்கச் செய்யும் செயற்பாடுகளை முன்னெடுத்தல், இனப்படுகொலைகள் மற்றும் தமிழ்மக்கள் மீதான வன்முறைகளை சர்வதேச அளவில் அம்பலப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். எனவே இன்றைய தமிழ்மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்ட அசைவியக்கத்தின் பெரும்பகுதி புலம்பெயர் நாடுகளில் தங்கியுள்ளது.
உலகத்தில் பல அரசியல் விடுதலைப் போராட்டங்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து நீண்டகாலமாக போராடியதன் விளைவாகவே விடுதலையடைத்துள்ளன. தமிழ் தேசியத்தை பின்பற்றி செயற்படும் கட்சிகள் பல்வேறு வகையிலும் விடுக்கப்பட்டுள்ள சவால்களை முறியடித்து பூரண சுயநிர்ணய அடிப்படையில் வடக்கு கிழக்கு தாயகம், தேசியம் என்ற கோட்பாட்டுக்குள் அரசியல் உரிமைகள் பெறுவதை உறுதிப்படுத்துவதுடன் இதற்குக் குறைந்த எந்த அரசியல் தீர்வுத்திட்டத்திற்கும் இணங்காமல் தமிழ்மக்களை வழிநடாத்திச் செல்ல வேண்டும். அதுவே, இலங்கைத்தீவில் தமிழ் மக்களின் கௌரவமான, நிம்மதியான, சுபீட்சமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பதை ஜனாதிபதித் தேர்தலினூடாக சிங்கள மேலாதிக்க மனநிலையில் இருக்கும் சிங்கள மக்கள் குறிப்புணர்த்தியுள்ளனர்.
அபிஷேகா

0 கருத்துரைகள்:
Post a Comment