ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான திகதி நெருங்கி வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஓய்வு பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா ஆகிய இருவரதும் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. ஜனாதிபதி மகிந்தர் சார்பில் ஏராளமான பிரசார மேடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இடையில் சிறிய அளவிலான குழுவினருக்கு அலரி மாளிகையில் விருந்துபசார நிகழ்வு களையும் ஏற்படுத்தி ஜனாதிபதி உரை நிகழ்த்தியுள்ளார். இந்த விருந்து உப சரிப்புகள் கடந்தவாரம் அனுராதபுரத் துக்கும் விஸ்தரிக்கப்பட்டிருந்தது. ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டமைப்பின் கூட்டங்களும் பிரசாரங்களும் படிப்படியாக அதிகரித்துவருகின்றன. இருந்தாலும் முக்கிய விடயங்களில் கருத்து ஒருங்கிணைப்பு இன்னமும் குறைபாடாகவே காணப்படுகின்றது. இதன் காரணமாக ஜெனரல் பொன்சேகாவின் சார்பில் குறிப்பிடத்தக்க அளவு சாதகமான அலை வீசத் தொடங்கியிருக்கிறது.
பொது வேட்பாளர் மீது கடும் தாக்குதல்
அரசு உடைமையான ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சி வலை அமைப்புகளில் எதிர்க்கட்சிப் பொது வேட்பாளர் மீதான தனிப்பட்ட முறையிலான தாக்குதல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் தொடங்கியதுடன் இந்த நிலை மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படலாம். அவரது நடத்தை தொடர்பான குற்றச் சாட்டுக்கள் கொண்ட அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜெனரல் பொன்சேகா இரு தடவைகள் புலிகளின் தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்து இராணுவத்தை வெற்றியை நோக்கி வழிநடத்தியதற்கு நெடுநாள்களுக்கு முந்திய காலத்தில் அவர் செயல்பட்ட விதம் குறித்த சில அறிக்கைகள் முன்வைக்கப்படலாம் என்று தெரிகின்றது. மற்றவைகளில் ஒன்று அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் உட்பட இராணுவத்தளபாடக் கொள்வனவுகள் தொடர்பான அறிக்கைகளாக இருக்கலாம் என்று தெரிகின்றது. இந்த விதமான குற்றச்சாட்டுக்கள் பற்றிய புலனாய்வுகளில் இரகசியப் பொலிஸார் ஏற்கனவே இறங்கி விட்டனர்.
அவரது குடும்ப உறுப்பினரின் ஸ்தாபனத்தில் கணக்காளராகப் பணியாற்றிய ஒருவர் பொய்யான கணக்குகளை சமர்ப்பித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்படவிருக்கிறார் என்று பொலிஸ் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்தது. சம்பந்தப்பட்டவர் குற்றச் சாட்டுக்களை பலமாக மறுத்திருக்கின்றார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என்று பொலிஸ் வட்டாரம் தெரிவித்தது.
ஊடகங்களில் நடத்தப்படும் பிரசாரம் ஒருபுறமிருக்க புதியவகையிலான (இணையத்தளம்) ஊடகத் தொடர்புகளையும் ராஜபக்ஷ சார்பான பிரசாரகர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 2010 ஆம் ஆண்டு ஆரம்பமான கடந்த வெள்ளிக்கிழமையன்று புதிய வகையிலான பிரசாரங்களை அவர்கள் ஆரம்பித்தார்கள். அன்றைய தினம் கையடக்கத் தொலைபேசி உரிமையாளர் ஒவ்வொருவருக்கும் அவர்களின் தொலைபேசியில் ஜனாதிபதியின் குரலில் பின்வரும் தகவல் தரப்பட்டது.
"வாக்குக் கொடுத்தது போலவே உங்களுக்கு சுதந்திரமான இறைமையுள்ள ஒரு நாட்டை பெற்றுக் கொடுத்துள்ளேன். எதிர் காலம் எல்லா வகையிலுமே அதிர்ஷ்டகரமாக அமையட்டும். மகிழ்ச்சிகரமாக புதியவருடம் அமையட்டும் மகிந்த ராஜபக்ஷ" வேறு எந்த ஒரு வேட்பாளருக்கும் இந்த வசதி கிடைக்கவில்லை. பாவனையாளர்கள் எவரும் அதற்கு பதில் தந்ததாகவும் தெரியவில்லை.
சகல வலையமைப்பு இயக்குநர்களும் இந்த குறுகிய செய்தியை உரியவர்களுக்கு அனுப்ப வேண்டும் என்று பணிக்கப்பட்டிருந்தார்கள். இந்த செயற்பாட்டின் மூலம் தேர்தல் சட்டம் மீறப் பட்டுள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மக்கள் சுமைகளைக் குறைக்க செயற்பாடு
கடந்த செவ்வாய்க்கிழமை பெற்றோலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டது. அடுத்தநாள் விவசாயிகளுக்கான விவசாயகடன் திட்டத்தில் கடன் வட்டி விகிதாசாரம் குறைக்கப்பட்டது. அரச வங்கிகளில் தம் கணக்குகளின் மீது கடன் பெற்றிருக்கும் இராணுவத் தினருக்கு அவர்களின் சம்பளத்தில் 85 வீதம் ஓய்வூதியத்தில் சேர்க்கப்படும் என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இவ்வாறு இன்னும் பொதுமக்களின் மீதான சுமைகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட விருப்பதாகவும் அது பற்றி அரசு ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொன்சேகாவின் கூட்டங்களில் மக்கள் கூட்டம்
கடந்தவாரம் முழுவதும் பொன்சேகா கலந்துகொண்ட கூட்டங்களில் எல்லாம் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டார்கள். இந்தக் கூட்டங்களில் அவர் பேசிய போது சம்பள உயர்வு வழங்குவார் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தினார். முதலில் அரச ஊழியர்களின் சம்பளம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று கூறினார். கடந்த வாரம் ஹட்டனில் ஒரு கூட்டத்தில் பேசிய போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 10,125 ரூபா வரை அதிகரிக்கப் படும் என்று அறிவித்தார். ஜெனரல் பொன்சேகாவின் குறைந்த பட்ச பொதுக் கொள்கைத்திட்டம் அடுத்த வாரம் வெளியிடப்படவிருக்கிறது. இதில் அவரது கொள்கை நோக்கங்கள் விரிவாக விளக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்து பொதுவேலைத் திட்டத்தை அறிவிக்காத நிலையில் சம்பள உயர்வை வழங்குவார் என்று பொன்சேகா அறிவித்துள்ளார்.
இதனை அவர் எவ்வாறு நிறை வேற்றுவார் என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பொன்சேகாவின் பிரசாரக் குழுவினரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் பதில் தரப்பட்டுள்ளது. பல்வேறு வகையில் அரச நடவடிக்கைகளால் அரசுக்கு ஏற்பட்டு வரும் நஷ் டங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவ்வறிக்கையில் உள்ள மேலும் சில விடயங்கள் வருமாறு:
* பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தின் செயற்பாடுகளால் ஏற்பட்டு வரும் நட்ஷம் ரூபா 230 பில்லியன்.
* 2007 தொடக்கம் 2008 வரை இலங்கை விமான சேவைத்துறைக்கு ஏற்பட்ட நட்டம் ரூபா 10 பில்லியன்
* அதே காலப் பகுதியில் மிகின் விமான சேவைக்கு ஏற்பட்ட நட்டம் ரூபா 4 பில்லியன்
* மிக் 27 ரக ஜெட் விமானங்கள் உக்ரேனிலிருந்து கொள்முதல் செய்த வகையில் விளம்பரம் செய்யப்பட்டதை விட ரூபா 400 மில்லியன் அதிகமாக விருந்தமை.
*வற் ஊழல் நட்டம் ரூபா 3 5 பில்லியன்.
* யால தேசிய பூங்கா மூடப்பட்டிருந்த சமயம் அம்பாந்தோட்டையில் உருவாக்கப்பட்ட சபாரி பூங்கா ரூபா 16 பில்லியன்
இவ்வாறு வீணடிக்கப்பட்ட அல்லது கொள்ளையடிக்கப்பட்ட தொகை ரூபா 430.3 பில்லியன் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தைக் கொண்டு நாம் என்ன செய்யப் போகின்றோம்? என்று அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டு பதில் அளிக்கப் பட்டுள்ளது. அரச ஊழியர்களின் ஒரு வருட சம்பள உயர்வு, கோல்ட கீ, சக் வித்தி வைப்பாளர்களுக்கு வைப்புப் பணத்தை வழங்குதல், ஓய்வூதியத்தை இரட்டிப் பாக்கல், பால்மாவின் விலையைக் குறைத்தல், சமுர்த்தி பயனாளிகளுக்கு ஒருவருடத்திற்கு 2000 ஆயிரம் ரூபா வழங்குதல், விவசாயிகளுக்கு உரமான்யம் வழங்குதல் இவைகளுக்கு மொத்தம் ரு 290.2 பில்லி யன் மட்டுமே செலவாகும். பின்னர் ரூ 140.1 பில்லியன் மிச்சமும் இருக்கும். ஆனால் இதில் விடையளிக்கப்படாத ஒரு விடயம் என்னவென்றால் இவ்வாறு மோசடி செய்யப்பட்ட அல்லது வீணடிக்கப்பட்ட பணத்தில் பெருமள விலான தொகையை மீளப் பெறுவதென்பது கடினமான காரியம்.
இ.தொ.காவில் பிளவு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய இருதலைவர்கள் கடந்த வாரம் அந்தக் கட்சியில் இருந்து வெளியேறி ஐ.தே.க வில் சேர்ந்து கொண்டார்கள். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சரத்பொன்சேகாவை ஆதரிப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இ.தொ.காவின் தேசிய அமைப்பாளர் ராமையா யோகராஜன், பிரதிக் கல்வி அமைச்சர் முருகன் சச்சிதானந்தன் ஆகிய இருவருமே இ.தொ.காவிலிருந்து விலகியவர்கள். பெருந்தோட்டத் தொழிற்றுறையில் உள்ள பிரதான தொழிலாளர் இயக்கம் பிளவுபட்டிருப் பதையே இது காட்டுகின்றது. மேலும் பலர் இ.தொ.கா விலிருந்து விலகவிருக்கிறார்கள் என்று யோகராஜன் கூறியிருக்கிறார். அவர் இ.தொ.கா தலை வரை கடுமையாக விமர்சித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களுக்காக அவர் எதனையுமே வென்றெடுக்கவில்லை. அவர் உல்லாச வாகனங்களில் ஆயுததாரிகளின் பாதுகாப்புடன் சுற்றுப் பயணங்கள் மேற் கொண்டு வருகின்றார். அதே வேளை தோட்டத்தொழிலாளர்கள் மைல் கணக்கில் நடந்து செல்கிறார்கள். அவர்களுக்கென்று அவர் ஒன்றுமே சாதிக்கவில்லை என்றார் யோகராஜன்.
இ.தொ.கா மலையகத்தில் தன் செல்வாக்கை இழந்து வருகிறது. கடந்த சப்ரக முவ மாகாணசபைத் தேர்தலில் இ. தொ. காவிலிருந்துஒருவருமே தெரிவு செய்யப்படவில்லையென்றார் யோகராஜன். இதொ.காவின் தற்போதைய தலைவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதனையும் கேட்டுப் பெறுவதில்லை. அவர்கள் தங்களின் உல்லாச வாழ்வுக்கு வேண்டியவற்றையே கேட்டு பெற்றுக் கொள்கிறார்கள் என்றார். தமது மக்களுக்காக அரசாங்கத்திடம் எதனையும் கேட்கும் அளவுக்கு தொண்டமானுக்கு துணிச்சல் கிடையாது. ஜெனரல் பொன்சேகாவால் தாம் கவரப்பட்டிருப்பதாகவும், அரசாங்கம் நிறைவேற்றத் தயங்கும் தமிழ் மக்களின் குறைபாடுகளை அவர் தீர்த்து வைப்பார் என்றும் தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
பேரியல் அஷ்ரப் தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கட்சி மாறுவது பற்றி சிந்தித்து வருவதாகக் கூறப்படுகின்றது. அவர்கள் ரவூப்ஹக்கீமின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கு பேச்சுக்கள் நடத்திவருவதாக அறியவந்துள்ளது. இவர்களில் ஒருவர் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்றும் மற்றவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது. யோகராஜன் இ.தொ.காவிலிருந்து விலகியமைக்கு தொண்டமானுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடே காரணம் என்று கூறப்படுகின்றது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மகாஜன பிரிவு) தலைவர் மங்கள சமரவீரவின் இணையத்தள அங்குரார்ப்பண விழாவில் அழைப்பின் மீது யோகராஜன் கலந்து கொண்டதாகவும் அதன் மீது தொண்டமான் ஒழுக்க விசாரணை ஒன்றை நடத்தியதாகவும் தனிப்பட்ட முறையிலேயே தாம் கலந்து கொண்டதாக யோகராஜன் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது. இந்தச் சம்பவத்தையடுத்தே யோகராஜனும் பிரதி அமைச்சர் சச்சிதானந்தனும் கட்சிமாற முடிவு செய்ததாக அறிய வந்துள்ளது. முன்னதாக சுகாதார அமைச்சர் சிறிபால டிசில்வா இவர்களின் கட்சி மாறல் நடைபெற விருப்பது பற்றி கேள்விப்பட்டு யோகராஜனின் சகாவான சச்சிதானந் தனின் பண்டாரவளையில் உள்ள இல்லத்திற்கு சென்று அவர்களை கட்சி மாறாமல் இருக்க செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாகவும் ஆனால் அதனால் எதுவித பயனும் ஏற்படவில்லை யென்றும்கூறப்படுகின்றது.

1 கருத்துரைகள்:
அவர்களுக்கு ஒரு கருணா
தமிழர்களுக்கு ஒரு சரத் !!!
Post a Comment